வேண்டாப் பொருட்களையும்
வாங்கிக் குவிக்காதீர்
காதலர் தினம்
வணிகர் தினம் ஆகிவிடும்
அணைப்புகளின் சூட்டில்
நனையலாம்
முத்தங்களின் ஈரத்தில்
காயலாம்
ஆனால்
இதயங்களை
நிரந்தரமாக்கிக்கொள்ளாமல்
நனைவதும் காய்வதுமாய்க் கிடந்தால்
காதலர் தினம்
காமுகர் தினம் ஆகிவிடும்

No comments:
Post a Comment