தவறு யார் மீது?
தனிக்குடில் தாம்பத்தியம்
தட்டுமுட்டுக்கும்
தகறாறு இருவருக்கும்
காலையில் சென்று
மாலையில் திரும்பும் பணி
நம்பிக்கைக்கு வாலாட்டும்
நாய் காவல் இருந்தும்
தெருமுனை திரும்பியதும்
திருடவரும் தெருநாய்
இதை கண்காணிக்கும்
இருகண்கள்
”ஒருமுறை”
வேலை முடிந்துவரும் நேரம்
கதவு திறக்க வரும் வேளை
எதிர்வீட்டுக் கிழம்
இடித்த வெத்தலையோடு
இடித்ததுபோல்
எடுத்துரைத்தது
”தவறு யார்மீது”
தெரிந்து திருந்திடுங்கள்
திருந்தி வருந்திடுங்கள்
எடுத்துரைத்த வார்த்தைகள்
இடியாக இறங்கியது
இருவரது நெஞ்சத்திலும்!...
காலத்தின் கோலம்
தன் திசைகளில்
கோளாறென்று
திசையே இல்லாப் பக்கம்
திசையென நினைத்து
திசைமாறிப் பறக்கத் துடிக்கும்
தான்தோன்றி இனங்களாய்-சில
தற்கால மனிதப்பறவைகள் .
அதனால் எழுதத் தோன்றியது
மேலே உள்ள கவிதை வரிகள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
Source : http://niroodai.blogspot.in/2011/03/blog-post_23.html
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
“Allâh will reward you [with] goodness.”
மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!
இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!
இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
No comments:
Post a Comment