நிட்சயமாக நம்ம நினைவில்தான் இருப்பார்.
அப்பா இந்த பெருநாளுக்கு ஊருக்கு வரமாட்டாரா அம்மா !
நீ படிக்க பணம் வேணுமே! அதுக்குத்தான் உங்க அப்பா அங்கே தங்கி இருக்காங்க . இன்சாஅல்லாஹ் அடுத்த பெருநாளுக்கு நம்முடன் இருப்பார் . நீ நல்லா பெருநாள் கொண்டாடவேண்டும் என்றுதான் நினைக்கிறார், அதனால்தான் அவர் உனக்கு பணம்,சட்டை பாவாடை எல்லாம் அனுப்பி இருக்கின்றார் .
பிள்ளைகளை, மனைவியை மற்றும் குடும்பத்தாரை பிரிந்து பணத்திற்காக வாழ வேண்டிய கொடுமை . குடும்பத்தாரை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் மக்களை பார்பவர்களுக்கு மகிழ்வாக இருப்பொழுதுபோல் இருக்கும் ஆனால் அவர்களின் மன வலி அவர்கள்தான் அறிவார்கள்.
.எல்லோருக்கும் எல்லாம் எப்பொழுதும் கிடைத்துவிடுமா !
எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா? நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? குடும்பத்தினை மறந்து வாழ்வில் மகழ்ச்சி காண முடியுமா! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம் தேட வேண்டிய நிலமை என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.
மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா
1 comment:
பிரிவின் வலி மிகக் கொடுமையானது
Post a Comment