ஒவ்வொரு பிள்ளைக்கும் அவள்தான் ஊட்டுகிறாள். அவளன்றி காத்தலில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டியவள் தன்பிள்ளைக்கு என்றென்றும் உணவூட்டவே தவிப்பாள்.
தாயிடம் ஊட்டிக்கொண்ட ஆண் தாரத்திடமும் ஏங்கி நிற்பது இயல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட பிள்ளைகளே. உணவூட்டி மகிழ்வாள்.
கணவனை மட்டும் சீண்டுவது ஊடல் கொள்ளத்தானேயன்றி காத்தலை உதறித்தள்ள அல்ல.
அத்தனையும் இழந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிடக்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இயலும்.
ஆக்கலும் காத்தலுமே பெண். அழித்தல் என்பது தன்னைத்தான் என்பதால் பெண் மேலானவள்.
No comments:
Post a Comment