Sunday, November 7, 2010

ஆடம்பர ஹோட்டல்களை நாடுவதின் நோக்கம் என்ன?

 கூட்டு  சேர்ந்து உணவு சாப்பிடலாம் என்றுதான் பெரிய ஆடம்பரமான விடுதிக்கு அழைத்து செல்வார்கள் . அங்கு மகிழ்ச்சியாக சில நேரம் கழிந்த பின்பு வியாபாரத்தினைப் பற்றி பேச்சு ஆரம்பமாகும். அதில் தான்  நினைத்ததினை விருந்து கொடுத்து சாதித்து பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கி அடுத்தவனை வலையில் மாட்டிவிடுவதனை பார்க்கலாம். மகிழ்வான பிளந்த வாயுடன் ஒரு சிரிப்பு  ஒரு பக்கம்,   தோய்ந்த முகத்துடன் ஒரு பக்கம், எல்லாம் பார்க்கலாம்.

ஐயா ஜாக்கிரதை! இதுதான் ஆடம்பர ஹோட்டல்களில் நடக்கும்.

அதிகாரிகளுக்கு, நட்சத்திர விடுதியில் விருந்து .பல வெளிநாட்டு பெரிய மனிதர்கள் வியாபாரம் பேசவும் பாதுகாப்பிற்கும் ஆடம்பர ஹோட்டல்கள் அடைக்கலம் தருகின்றன .
ஆடம்பர ஹோட்டல்களில்   கடன் வாங்கியாவது ஆடம்பரத்தில் நடக்கின்றன திருமணங்கள்.
இந்தியாவில் பெருகி வரும் ஆடம்பர மோகம் அதிகமாக இருப்பது தண்ணி அடிக்கும் கலாசாரமாக மாறி வருகின்றது .கறுப்பு  பணத்தை செலவு செய்ய ஆடம்பர விருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. சிகரெட், மது, புகையிலை போன்ற கெட்ட பழக்கங்கள் போன்றவைகளுக்கு இது ஒரு இடமாக உள்ளது.

பலரால் தங்களிடம் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுள்ள இந்த ஆடம்பர மோகம் ஒருவியாதியாக மாறுவதனை  என்று இவர்கள்  உணர்வார்களோ?

1 comment:

எஸ்.கே said...

ஆடம்பரத்திற்காக செலவு செய்து விட்டு பிறகு திண்டாடுவதை புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க!