Thursday, November 18, 2010

அறிவுரை எப்படி இருக்க வேண்டும் !




அறிவுரை எப்படி இருக்க வேண்டும் ! உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா! அல்லது பாதிப்பினை உண்ட்டாக்குமா. இது கேட்காமலும்   கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாக மாறும்சொல்லும்  நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .
 
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட் (எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும்  நாம் அதன்படி நடப்பதில்லை.

 அறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது   கேட்பவர் இப்படியும் நினைக்கலாம் .
இவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான் .
அறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.
குடும்பத்தில் உள்ள வயதான பெரியவர்கள் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை சொல்வது எல்லோருக்கும் பிடிக்காமல் போகின்றது அதனால் அவர்களை (பெற்றோரை) முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடும் பரிதாப நிலை ஏற்படுகின்றது .
குழந்தைகளை நல்லவிதமாக வளரவேண்டுமானால் அவர்களுக்கு முன் மாதிரியாக முதலில் நீங்கள் நல்லவர்களாக வாழுங்கள், அவர்களுக்குரிய நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். நேரமின்மை காரணமாக அவர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினால் நாளை அவர்கள் அதே காரணத்திற்காக உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பலாம்.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (103:1-3)
அறிவுரை சொல்லலாமா!

நம்மை சுற்றிலும் ...

1 comment:

எஸ்.கே said...

மிக நல்ல கட்டுரை!