ஹலோ அன்பர்களே,
க்ராஃபிக்ஸ் அறிமுகப்பாடத்தினைத் தொடர்ந்து இரண்டாம் பாடம் முதல் ஃபோட்டோஷாப் இடைமுக(Interface)ங்கள் குறித்துப் பார்த்து வருகிறோம். அதில் இரண்டாம் பாடத்தில் டேப் விண்டோ(Tabbed Window) குறித்தும் மூன்றாம் பாடத்தில் ஃபோட்டோஷாப் கருவிகள்(Tools) குறித்தும் பார்த்தோம். இப்பாடத்தில் பேனல்கள்(Panels) குறித்துப் பார்க்க இருக்கிறோம்.
* 1_3 Panelsக்ராஃபிக்ஸ் அறிமுகப்பாடத்தினைத் தொடர்ந்து இரண்டாம் பாடம் முதல் ஃபோட்டோஷாப் இடைமுக(Interface)ங்கள் குறித்துப் பார்த்து வருகிறோம். அதில் இரண்டாம் பாடத்தில் டேப் விண்டோ(Tabbed Window) குறித்தும் மூன்றாம் பாடத்தில் ஃபோட்டோஷாப் கருவிகள்(Tools) குறித்தும் பார்த்தோம். இப்பாடத்தில் பேனல்கள்(Panels) குறித்துப் பார்க்க இருக்கிறோம்.
ஃபோட்டோஷாப்பின் ஏராளமான கட்டளைகள் மற்றும் சிறப்புக்கூறுகள் (features) அதன் பேனல்களில் இடம்பெற்றுள்ளன. படம் (1_3_001 ஐ) பார்க்கவும்.
இதில் நிறைய பேனல்கள் உள்ளன. அனைத்தும் பலவிதத்தில் நமக்கு மிக உபயோகமானதாகவும், இன்றியமையாததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நீங்கள் காணும் பேனல்களில் மேலே Layer, Channels, Path என்றும், நடுவில் Colour, Swatches, Styles என்றும்,உள்ளதை காண்பீர்கள்.
குழம்புகின்றதா...? அப்படியானால் சரியான ட்ராக்கில் பயணித்துக் கொண்டு செல்கிறீர்கள் என்று அர்த்தம். தொடர்ந்து வாசியுங்கள்.
பாடம் 1_1 ல் Tabbed விண்டோக்கள் பற்றிய விபரங்களை நாம் கற்றுக்கொண்டதை மீண்டும் நினைவு கூறுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்கள் எப்படி Tab முறையில் ஒன்றன்கீழ் ஒன்றாக எப்படி அடுக்கப்பட்டதோ அதே முறையில் இதையும் வடிவமைத்து இலகுவாக்கியிருக்கின்றார்கள். நாம் விரும்பும் பேனல்களை ஒரு க்ரூப்பாகவும் மேலும் கீழுமாகவும் வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
ஃபோட்டோஷாப்பைத் திறக்கும்போதே சில (டிஃபால்ட்) பேனல்கள் வலப்பக்கம் இடம்பெற்றிருக்கும். மேலதிக பேனல்களைத் திறக்க கீழே படத்தில் (1_3_002) காண்பிக்கப்பட்டுள்ளபடி
Menu (Bar) Window > க்ளிக் செய்து முதல் வரையில் காண்பிக்கப்பட்டுள்ளவை விதவிதமான பேனல்கள் ஆகும். அதில் எது நமக்குத் தேவையோ அதை க்ளிக் செய்தால் திறந்துவிடும்.
அப்படி திறக்கும் பேனல்களை ஒன்றாக இணைக்கவும் ஒன்றை பிரித்தெடுக்கவும் குறிப்பிட்ட அந்த பேனலின் மீது Click & Drag செய்தால் போதுமானது. அல்லது படத்தில் (1_3_003) மேலே இடப்பக்கம் சிகப்பு நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பட்டனை க்ளிக் செய்தால் அந்த பேனல் மூடிவிடும்.
இதை முறைப்படி மூடவேண்டும் எனில் படம் (1_3_004) காண்பித்துள்ளபடி சிகப்பு வண்ணப்பகுதியில் க்ளிக் செய்தால் திறக்கும் மெனுவில் கீழ்பகுதியில் Close, Close Tab Group என்பதில் நாம் விரும்பியதை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதற்கும் Tabbed Windows க்கும் ஒற்றுமை இருந்தாலும் இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் பிற பேனல்களை கமெண்ட் மூலம் பேனல்களில் இணைக்க முடியாது. Click & Drag முறையில் இணைக்கவேண்டும்.
படம் (1_3_004 மற்றும் 1_3_005 ல்) காணும் சிகப்பு நிற பகுதியை க்ளிக் செய்வதன் மூலம் பேனல்களை மூடுவதற்கு பயன்படுவதாக கருதிவிடக்கூடாது. ஒவ்வொரு பேனலுக்கும் தேவையான மேலதிக கட்டளைகள் அதில் உள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதை ஒவ்வொன்றாக தெரிவு செய்து ஏற்படும் மாற்றத்தை தெரிந்து கொள்க!
இதைக் குறிப்பிடும்போது சிறு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. நம்மிடம் (கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவாறு) காண்பித்து இதில் என்ன தெரிகின்றது எனக்கேட்டதும் பட்டென்று நாம் கூறும் பதில் ஒரு கரும் புள்ளி உள்ளது என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால் அந்த கரும்புள்ளியைவிட ஆயிரம் மடங்கு பெரிதாக உள்ள வெள்ளைக் காகிதமோ, அதற்குப்பின்னால் இருக்கும் மஞ்சள்நிறக் காகிதமோ நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவசரமாகவோ, அல்லது சிம்பிளாகவோ நாம் நம்முடைய கவனத்தைச் செலுத்தும்போது ஏற்படும் நிகழ்வேயாகும். (தயவு செய்து இதற்காக யாராவது உங்களிடம் ஒரு பொருளை காண்பித்தால் அக்கு வேறு ஆணிவேறாகக் கூறிவிடவேண்டாம்)
சரி, மீண்டும் பேனலில் வந்துவிடுவோம்.
திறந்துவைத்துள்ள பேனல்களை முழுவதுமாக மறைக்க Shift கீயை அழுத்தி Tab கீயை தட்டினால் போதும். அதையே திரும்பப்பெற Shift கீயை அழுத்தி Tab கீயை தட்டினால் மீண்டும் திரும்பிவிடும். (Tab கீயை மட்டும் அழுத்தினால் Menu Bar மற்றும் Work Window தவிர்த்த மீதி அனைத்தும் மறைந்துவிடும். Shortcut பழகியவர்கள் இந்த முறையைப் பின்பற்றி Big Screen ல் ஓடியாடி வேலை செய்யலாம். அனைத்தையும் திரும்பப்பெற மீண்டும் Tab கீயை அழுத்தினால் போதும்.
பேனல்களில் இரண்டுவித க்ரூப் உண்டு. இதுவரை நாம் கண்டது டேப் முறை ஆகும். நாம் விரும்பிய ஒரு பேனலின் கீழே தேவையான இன்னொரு பேனலை க்ரூப்பாக இணைக்கவும் முடியும். தேவையான அந்த பேனலை ட்ராக் செய்து குறிப்பிட்ட பேனலின் கீழே கொண்டுவரும்போது (படம் 1_3_006 ல் காண்பித்தவாறு நீல நிற ஹைலைட் தெரியும் இடத்தில் வைத்துவிட்டால்) இணைந்துவிடும்.
இதுவரை நாம் கண்ட பாடங்களை மட்டும் வைத்து க்ராஃபிக்ஸில் கலக்கலாம் என்று யாரும் எண்ணியிருக்கமாட்டீர்கள். ஃபோட்டோஷாப் என்று மட்டும் அல்ல, நாம் உபயோகிக்கும் எல்லா மென்பொருளுக்கும் இதே போன்ற ஆப்ஷன்கள் இருக்கலாம். அவற்றை முறையாகக் கையாள்வது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டால் எது எங்கே இருக்கின்றது என்பதை கண்டுகொள்ள எளிதாக இருக்கும். மேலும் அடுத்தடுத்த (புது) வெர்ஷன்கள் வெளியிடப்படும்போது அதை கையாள எளிமையாக அமையும்.
உங்களில் இதுபற்றி தெரியாத ஒரு சிலர் இருக்கக்கூடும். அவர்களுக்காகவே ஆரம்பத்தில் இதுபற்றி விவரிக்கின்றேன்.
அவசரப்படவேண்டாம். இதுபோன்ற க்ராஃபிக்ஸுக்குத் தொடர்பில்லாத, ஆனால் தெரிந்திருக்கவேண்டிய பகுதிகள் இன்னும் உள்ளன. அவற்றையும் பார்த்துவிட்டு எவற்றையும் கையாளத்தெரிந்த ஒரு திறமைசாலியாக உள்ளே நுழையலாம்.

Source : http://www.inneram.com/2010110311643/graphics-training-part-4
No comments:
Post a Comment