அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." (சுரத் அல் -பகராஹ் (பசு )2:215
உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளடக்கிக் காட்டப்படவேண்டும். உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் .
வறுமை
அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.தான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி வழங்கும் வள்ளல்களாக பின்பற்றி வாழ்ந்தால் குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.
சுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி.
பெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
1 comment:
excellent!
Post a Comment