Thursday, June 20, 2013
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். My Top 6 !
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதை விட முக்கியமானது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். உங்களுக்காக My Top 6 !
1 குழந்தைகளை நீங்கள் அன்பு செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைக் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். உர்ரென்று இருந்தால் தான் குழந்தை பயப்படும், ஒழுங்காக இருக்கும் என்றெல்லாம் கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களின் நிபந்தனையற்ற அன்பு அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு முதல் தேவை.
2. சின்னக் குழந்தைகள் எப்போ பார்த்தாலும் எதையாவது திறந்து, எதையாவது நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் கிச்சன் கபோட்களும், கரண்டிகளும் அவர்களுடைய பேவரிட். இதெல்லாம் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை தானாகவே வளர்த்துக் கொள்ளும் வழிகள். இதை ஆங்கிலத்தில் பேபி புரூஃபிங் (baby proofing ) என்பார்கள். அவர்களை அனுமதியுங்கள். ஆபத்தில்லாத சூழலை உருவாக்குங்கள்.
3. வீட்டிலுள்ள சின்ன சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். சமையலில் உதவுவது, வீட்டை சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என எதுவானாலும் பரவாயில்லை. இவையெல்லாம் குழந்தையின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.
4. குழந்தைகளுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுங்கள். பிறருக்கு உதவுதல், பிறரை மதித்தல் போன்றவற்றுக்கெல்லாம் நீங்கள் முன் மாதிரிகையாய் இருங்கள். நீங்கள் வேலைக்காரரைத் திட்டினால் உங்கள் குழந்தையும் அப்படியே திட்டும். அவர்களுடைய குணாதிசயங்களை நல்ல முறையில் கட்டி எழுப்புங்கள்.
5. நல்ல வழி முறைகள் காட்டுங்கள். எதைச் செய்யவேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் சில ஒழுங்குகளைப் புகுத்துங்கள். உதாரணமாக வீட்டுப் பாடங்கள் செய்வது, அல்லது விளையாட்டுகளில் சில விதிமுறைகள் தருவது. அவற்றை அவர்கள் கடைபிடிக்கப் பழக்குங்கள். சரியாகச் செய்கையில் பாராட்டுங்கள்.
6. குழந்தைகளைக் கலந்தாலோசியுங்கள். “இதுக்கெல்லாம் எதுக்கு அதுக கிட்டே கேட்டுகிட்டு…” என இழுக்காதீர்கள். முடிவெடுப்பது நீங்கள் தான். ஆனால் அவர்களிடம் கலந்துரையாடுங்கள். அது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும். தனது கருத்தும் கேட்கப்படுகிறது என்பது அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக்கும்.
ஃ
by சேவியர்
Joseph Xavier Dasaian
சேவியர்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை... சேவியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சலாம்
குழந்தை பருவம் மிக முக்கியமான பருவம் சும்மாவா சொன்னார்கள் தொட்டில் பழக்கம்... அருமையான பதிவு
Post a Comment