Sunday, April 5, 2020

படைத்த ரப்புல் ஆலமீன் தான், இந்த கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.


அமெரிக்கா ஈராக்கின் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

அமெரிக்கா ஆஃப்கான் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

அமெரிக்கா வியாட்நாம் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீன அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

பர்மா ரோஹிங்யா அப்பாவி மக்களை கொல்லும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

இலங்கை அப்பாவி தமிழ் மக்களை கொல்லும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன.? என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

இந்தியா, காஷ்மீர் அப்பாவி மக்களை கொல்லும் போதும், குஜராத் வன்முறையில் முஸ்லீம்களை கொல்லும் போதும் மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

சீனா அந்நாட்டு அப்பாவி முஸ்லீம்களை கொல்லும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

தற்போது உலகில் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் எனும் கொடும் கொள்ளை நோயால், கொத்து கொத்தாக இறக்கும் போது, அந்நாட்டு ஆட்சியாளர்கள் கதறுகிறார்கள், மருத்துவ வளர்ச்சி அடைந்தும், தடுக்க இயலவில்லையே என கைசேதப்படுகிறார்கள். பார்க்கவே மனது கனக்கிறது.

படைத்த ரப்புல் ஆலமீன் தான், இந்த கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

இதில் நம் அனைவருக்கும் படிப்பினை உள்ளது, அதிகாரம் இருந்தால் என்ன வேணும்னாலும் செய்யலாம் என்கிற அகங்காரம் சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. நம்மால் பாதிக்கப்பட்ட மக்களின் துஆக்களுக்கு நாம் அஞ்சிக்கொள்ள வேண்டும் என்கிற பயம் வருகிறது.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். திருக்குர்ஆன் 5:2

நாங்கள் சர்வாதிகாரம் படைத்தவர்கள். எங்களிடம் அதிகாரம் இருந்தால் யாரை வேணும்னாலும் கொத்து கொத்தாக கொல்வோம் என்று அகங்காரம் கொண்ட அத்தனை நாடுகளையும் அல்லாஹ் கொரோனா வைரஸ் என்கிற நோயை கொண்டு பயமுறுத்தி வைத்து விட்டான்.

*நீங்கள் விஞ்ஞான வளர்ச்சியில், மருத்துவ துறையில், தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், நான் தரும் நோய்க்கு முன்பு உங்கள் அறிவியல் வளர்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை, நீங்கள் எல்லாம் என்னுடைய அத்தாட்சிக்கு முன்பு ஜீரோ தான்.! அகிலத்தின் அதிபதி நான் தான் என்பதை இறைவன் காட்டிக் கொண்டு இருக்கிறான்.*

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நோயை கொடுத்து சோதிக்கும் படைத்த இறைவனிடமே, பாதுகாவலையும் நிவாரணத்தையும் தேடுவோம்.

*ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!*

திருக்குர்ஆன் 2:155

*"நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் "இது உம்மால் தான் ஏற்பட்டது' என்று கூறுகின்றனர். "அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லையே!*

திருக்குர்ஆன் 4:78
------------------------------------
M A Mohamed Ali

No comments: