Thursday, April 16, 2020

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்)

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்)
தொழுகைக்கான அழைப்பைக் கொண்டு முஸ்லிம் அல்லாதோர் நேரத்தைக் கணிக்கின்றனர்.
االلهاكبر االلهاكبر
"அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.. இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன்
اشهدانلاالهالاالله
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்..
இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்.
اشهدانلاالهالاالله
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்..
இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்..
اشهدانمحمدارسولاالله
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்..
முஹம்மது (ﺼﻟﻰﺍﷲﻋﻠﻴﻪﻮﺴﻟﻢ)
இறைவனின் தூதூர் என்று சாட்சி சொல்கின்றேன்...
اشهدانمحمدارسولاالله
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
முஹம்மது (ﺼﻟﻰﺍﷲﻋﻠﻴﻪﻮﺴﻟﻢ) இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்...
حيعلىالصلاة

ஹய்ய அலஸ்ஸலாஹ்
தொழுகைக்கு விரைந்து வாருங்கள்...
حيعلىالصلاة
ஹய் அலஸ்ஸலாஹ்
தொழுகைக்கு விரைந்து வாருங்கள்..
حيعلىالفلاح
ஹய்ய அலல்ஃபலாஹ்
வெற்றியின் பக்கம் வாருங்கள்..
حيعلىالفلاح
ஹய்ய அலல்ஃபலாஹ் -
வெற்றியின் பக்கம் வாருங்கள்..
االلهاكبر االلهاكبر
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன்..
லா இலாஹ இல்லல்லாஹு
இறைவன் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை.
அதிகாலை தொழுகைக்காக (சுப்ஹ்) அழைப்பு விடும் போது கீழ்வரும் வரிகளை இணைத்து அழைப்பு விடுவர்.
அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம் - அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம்
(பொருள்: தூக்கத்தை விடத் தொழுகை மேலானது)
அல்லாஹு அக்பர்! ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லின் நகரில் முதல் முறையாக அதான் ஒலிக்கப்பட்டது.. ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமான இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது.. அதான் ஒலிக்கப்பட்ட சந்தோஷத்தில் உள்ளூர் முஸ்லிம்கள் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

No comments: