Sunday, April 19, 2020

இரத்தத்தின் இரத்தம்

Vavar F Habibullah

மதுரை மருத்துவ கல்லூரியில்
நான் பிஜி படித்து வந்த நேரம்.
எனது பேராசிரியர் பிராமணர்
மிகவும் வைதீகமானவர். மிகச்
சிறந்த மருத்துவர் என்பதை
விட, மருத்துவ விஞ்ஞானி என்று
சொல்லலாம்.அவர் எழுதிய
புத்தகம் இன்றும் மருத்துவ பிஜி
மாணவருக்கான டெக்ஸ்ட் புக்
ஆக இருந்து வருகிறது.

என்னை அவருக்கு மிகவும்
பிடிக்கும்.அவரிடம் பயிற்ச்சி
பெற்றதாலேயே என்னால் ஒரு
நல்ல மருத்துவராக விளங்க
முடிகிறது.



அவரது மனைவி ஒருமுறை
மிகவும் கடுமையான நோயால்
பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்.
ஹீமோகுளோபின் லெவல்
மிகவும் குறைந்து விட்டது.

கண்டிப்பாக இரத்தம் செலுத்த
வேண்டிய நிலை.அவர் உறவினர்
எவரும் இரத்தம் கொடுக்க முன்
வரவில்லை.பிராமணர் குடும்பம்
என்பதால் எவரும் துணியவில்லை.
நாற்பது வருடங்களுக்கு முன்
இரத்தம் கொடுப்பது என்பது
ஒரு மருத்துவ அதிசயம்.

எனது இரத்தம், அவர் குரூப்
என்பதால் நான் முன் வந்தேன்.
அந்த அம்மையார் உடல்
நிலையில் நல்ல முன்னேற்றம்.
சில மாதங்களுக்கு பிறகு
மீண்டும் இரத்தம் தேவைபட்டது.
பேராசிரியர் மீண்டும் என் முகத்தை
பார்த்தார்.நான் தயாரானேன்.

ஒரு நாள்...
பேராசிரியர் வீட்டில் ஒரு விழா
பிராமண பிரமுகர்களால் வீடு
நிரம்பி வழிந்தது. என்னையும்
அழைத்து இருந்தார்கள்.நான்
ஷூவை கழற்றுவதை தடுத்த
அந்த அம்மையார் என்னை
தர தரவென்று வீட்டின் பூஜை
அறை வரை அழைத்து சென்று
அவர் உறவினர் மத்தியில்
நிறுத்தி....
ஐ யாம் கோயிங் டு
இன்ட்ரடுயூஸ் யூ ஆல்
மை பிளட் பிரதர்.
இந்த தம்பி இரத்தம் தான்
இப்போது என் உடலில்
ஓடுகிறது.நீங்கள் என்
உறவினர் என்ற போதும்
இரத்தம் தர பயந்தீர்கள்
இந்த தம்பி தைரியமாக
முன் வந்தார்.இந்த நிகழ்ச்சியே
எனது தம்பியை உங்களுக்கு
அறிமுகம் செய்து வைப்பதற்குத்
தான்...தேங்யூ ஆல்

மனிதம் ஜாதியில் இல்லை
என்பதை என் வாழ்வில்
நான் உணர்ந்த நாள்!
மனிதம் பேணவே
மதங்கள்..அது இல்லாத போது
தூக்கி எறியுங்கள் மதங்களை
பேணுங்கள் மனிதத்தை!

No comments: