Saturday, April 18, 2020

வைரஸ் போர் ....


அணு ஆயுதங்கள் தயாரித்து பிற நாடுகளோடு போர் தொடுக்க மட்டுமே தீவிர கவனம் செலுத்திய மாபெரும் வல்லரசுகள் உட்பட பாவப்பட்ட நல்லரசுகள் போன்ற
அனைத்து நாடுகளையும்
ஆயுதங்கள் குண்டுகள் பீரங்கிகள்
தரைவழி வான்வழி கடல்வழி
இவைகள் வழியாக தாக்குதல் எதுவும் இன்றி ஆரவாரமான உலகத்தின் நிம்மதியை அமைதியாக குலைத்து உயிரை குடிக்குது கொரோனா வைரஸ் ....

மருத்துவர்களை உருவாக்கவும்
மருத்துவமனைகள் கட்டவும்
மருந்துகளின் உற்பத்திகளை பெருக்கவும்
தவறிய பல நாடுகள் இன்று தமது நாட்டு மக்களையே காப்பாற்ற இயலாமல் தவிக்கிறது ....


கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது மனித அறிவுக்கு எட்டாத இதற்கு முன்னர் கணித்திட இயலாத எதிர்பாராத சம்பவம் என்றாலும் மக்களின் உயிரை காப்பாற்றிட பல்வேறு அம்சங்கங்களை அறிவுறுத்தி உலக தேசங்களுக்கு மாமெரும் படிப்பினைகளையும் சிந்தனைகளையும் அச்சுறுத்தல்களையும் தந்துள்ளது ....

உலககெங்கிலும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கொடூர நுண்ணுயிரியால் தாக்கப்படுவதால்
சிகிட்சையளிக்க போதிய
ஆஸ்பத்தரிகள் இன்றியும்
தேவையான மருந்துகள் இல்லாமையாலும்
நோய் குணமாகாமல் இறந்தவர்களை
உரிய முறைகளில் இறுதி கட்ட காரியங்களை செய்வோர்கள் இல்லாமலும்
அடக்கம் செய்ய போதிய இடமில்லாமலும்
ஒவ்வொரு நாடுகளும் செய்வதறியாது தடுமாறுகிற காணொளி காட்சிகளை காணுகையில் மனங்கள் அழுகிறது ....

உலகை விட்டு கொரோனா எப்போது மடியும் இன்றைய அசாதாரண நிலைமை எப்போது முடியும் என்கிற துல்லியமான கணிப்பை எந்த மருத்துவ வல்லுனர்களும் எடுத்துரைக்க இயலாத கால கட்டத்தில் உலகம் தத்தளிக்கிறது ....

கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்திய அதன் பிறப்பிடமான சைனாவில் பல மனிதர்கள் மீண்டும் இதனால் தாக்கப்பட்டு இறக்கிறார்கள் என்று தற்போது கிடைக்கிற புதிய செய்தியானது உண்மையோ பொய்யோ எதுவாயினும் நமக்கு மேலும் அச்சத்தை உண்டாக்குகிறது ....

பழைய சகஜ வாழ்க்கை துவங்கி நாடுகளின் உற்பத்திகளும் வர்த்தகங்களும் தொடரவும் மக்கள் பொருட்கள் வாங்கும் திறண் அதிகரிக்கவும் பொருளாதாரம் ஓரளவு சீரடையும் குறைந்த பட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று நாம் அறிகிற தகவல்களால் மனசு இன்னும் வலிக்கிறது ....

கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிட்சை அளித்த பல மருத்துவர்களுக்கும் உலகளவில் வைரஸ் தொற்றி அவர்களும் உயிரிழக்கும் அபாயமான நிலைமையால் எதிர் காலத்தில் டாக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது ....

இன்றைய உலக நிகழ்வுகளை அறிந்த  இறைவன் இரக்கமற்ற கொரோனா வைரஸ் முழுவதும் அழிந்திட அருள் புரிவானாக ....



அப்துல் கபூர்

No comments: