Friday, April 3, 2020

தப்லீக் ஜமாத்தும் கொரோனாவும் (அனைவரும் தப்லீக் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் அருமையானபதிவு )...

Dr .Vavar F Habibullah

தப்லீக் ஜமாத்தும்
கொரோனாவும்

இப்போது,
எனது டாக்டர் நண்பர்கள் பலர்
‘டாக்டர் டெல் மீ சம்திங் அபவ்ட்
தப்லீக் ஜமாத்’....என்று
கேட்கிறார்கள்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில்
சமீபத்தில் நடந்த தப்லீக் மாநாடு
தமிழகத்தில் தப்லீக் ஜமாத் பற்றிய
ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரிட்டிஷ் இந்தியாவில் தலைநகர்
டெல்லியில் துவங்கிய
இந்த அமைப்பு, ஆரிய சமாஜ்
போன்ற அமைப்பு போன்றது.



1920 களில் அமைந்த இந்த
அமைப்பின் முழு நோக்கமே
மிவோட் (Haryana) பகுதியில்
வாழ்ந்த மியோ முஸ்லிம்களுக்கு
இஸ்லாமிய நன்னெறிகளை
போதிப்பது தான்.இந்த மியோ
முஸ்லிம்கள், இராஜபுத்திர
வம்சாவழியைச் சார்ந்தவர்கள்
என்பதால், நன்னெறிகளைப்
போதிக்க இந்த இயக்கம் ஒரு
மொபைல் ஸ்கூல் அல்லது
நடமாடும் பாடசாலையாக
அன்று விளங்கியது.

கல்வி கற்பிப்பது,அறிவை தேடு
வது,நல்வழிக்கு பிறரை அழைப்பது
தன்னை மேம்படுத்துவது, தனித்தி
ருத்தல் மூலம் மெஞ்ஞான நிலை
அடைவது,திக்ரு செய்வது போன்ற
சூஃபி துறவிகளின் வழிமுறைகள்
இவர்களின் விதி முறைகளாகும்.

இது ஒரு “மூவிங் ஸ்கூல்” என்பதால்
உலக நாடுகள் அனைத்திலும்
பக்தர்கள் இருப்பதால், வருடத்தில்
சில நாட்களை இந்த அறப்பணி
யில் கலந்து கொண்டு தங்களை
தூய்மை படுத்திக் கொள்வது
ஒன்று தான் இவர்களின் உயர்
நோக்கம்.சொந்தச் செலவில்
பயணம் என்பதால் வசதி படைத்த
செல்வந்தர்களே இதில் அதிகம்
கலந்து பயன் பெறுகின்றனர்.

இது ஒரு அரசியல் இயக்கம்
அல்ல, மத நல்லிணக்கம் வளர
துணை புரியும் இயக்கம்.
புத்தம்,ஜைனம்,சீக்கிய மதம்
போன்று இந்திய மண்ணில்
முகமது இஸ்மாயில் என்ற
மத குருவால் தோற்றுவிக்கப்
பட்டது தான் இந்த தப்லீக் ஜமாத்.
சவூதி அரேபியா போன்ற நாடுகள்
இந்த அமைப்பை அங்கீகரிப்பது
இல்லை.

வெளி உலகம் இந்த அமைப்பை
தெரிந்து கொள்ள முடியாத
அளவுக்கு மிகவும் எளிமை
நிறைந்தது இந்த இயக்கம்.
செல்வந்தர்கள் கூட ஏழைகள்
போல் வாழ பயிற்ச்சி அளிக்கும்
பயனுள்ள வாழ்க்கைக் கலையை
போதிக்கும் ஒரு எளிமையான இயக்கம்.
முகமது நபி காலத்திய
எளிய உடையை அணிந்து கால்
நடையாக ஊர் ஊராக நகர்வது
இவர்கள் வழக்கம்.மசூதிகளில்
தங்குவது தான் இவர்கள் பண்பு.
எந்த வீண் பேச்சும், உலக
ஆடம்பரங்களும் இவர்களை
கவர்வதில்லை.ஒரு முற்றும்
துறந்த ஞானிகள் போன்ற
வாழ்க்கை அமைப்பை
கொண்டவர்கள். அதை
முழுமையாக தவநாட்களில்
வாழ்க்கையில் கடைபிடித்து
ஒழுகும் தவசீலர்கள்.

99 வருடங்களாக தொடர்
ஆன்மீகச் சேவையில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டு வரும்
தப்லீக் ஜமாத், நேரம் கெட்ட
நேரத்தில் தனது மாநாட்டை
தலைநகரில் நடத்தி கொரோனா
பரவ வழி வகித்து விட்டது.

மும்பை அரசு இவர்களுக்கு
இந்த காரணங்களை விளக்கி
அநுமதி மறுத்து இருக்கிறது.
அதுபோல் பல்கார் மாவட்ட
போலீஸ் துறையும்
அநுமதி மறுத்திருக்கிறது.
டெல்லி மாநில அரசும்
போலீஸ் துறையும்
இதுபோல் அநுமதி மறுத்து
இருந்தால்........மாநாட்டில்
கலந்து கொள்ள வரும் வெளி
நாட்டு பக்தர்களுக்கு
விசா வழங்குவதை
தடை செய்து இருந்தால்...
நிச்சயம் இந்த பரவலை சற்று
தவிர்த்திருக்க முடியும்.
ஜமாத்தும் மாநாட்டை அங்கு
நடத்தி இருக்க மாட்டார்கள்.

ஜமாத் என்றால்
சொஸைட்டி கம்யூனிடி
சமூகம் அல்லது சமுதாயம்
என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஒரு தொற்று நோய் நாட்டின்
ஒரு பகுதியில் அதிவேகமாக
பரவி அதிக நபர்களை தொற்றி
விடுமானால் அதை ‘எபிடமிக்’
என்று சொல்லலாம்.
ஒரு நாட்டில் ஒரு பகுதியில்
அடிக்கடி சாதாரணமாக
நிகழும் தொற்று நோய்
என்றால் அது ‘எண்டமிக்’ எனப்படும்.
உலகம் முழுக்க பரவுமானால்
அதை ‘பேன்டமிக்’ எனலாம்.

தொற்று நோய் உள்ள நாட்டில்
இருந்து வரும் நபருக்கு நோய்
தொற்று இருந்தால் அது
ஸ்டேஜ் ஒன்று ஆகும்.
அவரிடம் இருந்து அது பிறருக்கு
பரவினால் அதை ஸ்டேஜ் இரண்டு
எனலாம்.டிராவல் ஹிஸ்டரி
இல்லாதவருக்கும் நோய் தொற்று
உள்ளவரிடம் பழகாத நிலையில்
எந்த தொடர்பும் இல்லாதவருக்கும்
நோய் தொற்றினால் அது ஸ்டேஜ்
மூன்று எனலாம்.தொற்று நோயை
கட்டுப்படுத்த முடியாமல்
நோய் தொற்று அதிகரித்தால்
நோய் நான்காம் ஸ்டேஜை நோக்கி
நகர்கிறது என்று பொருள்.
Thank God
We are now at stage Two

Dr .Vavar F Habibullah

No comments: