Sunday, April 5, 2020

கொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்!

சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக்
இந்தியாவில் #CoronaJihad என்ற ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளதை நாங்கள் கவனித்தோம். கொரோனா வைரஸ் முஸ்லிம் சமூகத்தால் பரவியுள்ளது என்று அது தெரிவிக்கிறது. இதைப்போன்ற முஸ்லீம்-விரோத நடவடிக்கையை கொரோனா வைரஸ் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை நீங்கள் கண்காணிக்கிறீர்களா?

என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு Samuel D. Brownback, Ambassador at Large for International Religious Freedom அளித்த பதிலிலிருந்து ஒரு பகுதி.

oOo

COVID வைரஸ் தொடர்பாக மத சிறுபான்மையினர் மீது குற்றம் சாட்டப் படுவதை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதை அரசாங்கங்கள் செய்வது தவறு. அந்த அரசாங்கங்கள் உண்மையில் இந்த குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, கொரோனா வைரஸ் பரவலுக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை மிகத் தெளிவாகக் கூற வேண்டும்.


இத்தகைய சூழ்நிலையில் ஆளும் அரசுகளே முன்வந்து பெரும்பான்மைச் சமூகத்திடம் சென்று, இந்த நோய் பரவியது மதச் சிறுபான்மையினரால் அல்ல என்று எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. இந்த வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது நமக்குத் தெரியும். இது உலகம் முழுவதையும் ஆட்படுத்தியுள்ள ஒரு தொற்றுநோய் என்பது நமக்குத் தெரியும். இது மதச் சிறுபான்மையினரிடமிருந்து பரவிய ஒன்றல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் அவ்வகையான பழி தூற்றப்படுவதை நாம் காண்கிறோம். இத்தகைய வீண் பழி சுமத்துவோர் கண்டறியப்பட்டு, இனி அந்த நாட்டு அரசாங்கங்களால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.

முழுவதும் வாசிக்க...
Nooruddin DarulIslamfamily to குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

No comments: