Monday, April 20, 2020

மருத்துவர்களும் மரணங்களும்

Vavar F Habibullah 
DR.HABIBULLAH
மருத்துவர்களும் மரணங்களும் 

கொரோனா மூன்று நாட்களில்
தமிழ் நாட்டில் பூஜ்ய நிலைக்கு
திரும்பி விடும் என்று சொன்னார்
தமிழக முதல்வர். ஆனால்
கொரோனாவின் பிடியில் சிக்கி
உயிர் பிரியும் டாக்டர்கள் நிலை
இப்போது அதிகமாகி விட்டது.

மரணம் அடைந்த டாக்டர்
நிலையோ மிகவும் பரிதாபகரமாக
ஆகி விட்டது.’வீட்டில் இருங்கள்’
என்று நிமிடம் தோறும் மக்களை
அறிவுறுத்தும் முதல்வர் அவர்களே!
இது டாக்டர்களுக்கும் பொருந்து
மானால், அவர்களால் தங்கள்
உயிரையாவது கொரோனாவிலி
ருந்து காப்பாற்றி இருக்க
முடியும்.


சரி போகட்டும்.. மரணம்
நிகழ்ந்து விட்டது.
ஒரு நல்லடக்கமாவது இறந்த
உடலுக்கு வேண்டாமா!
நமதூர் மக்கள் தான் அறிவு
ஜீவிகள் ஆயிற்றே...சினிமா
விலும் டாஸ்மாக்கிலும்
பொழுதை கழிக்கும் நமது
மூட மக்களின் கீழ் செயலை
தடுத்து நிறுத்தும் வல்லமை
கூட தமிழக அரசுக்கு இல்லை
என்பதை,உணரும் போது
கொரோனா தடுப்பில் நீங்கள்
பிரண்ட் லைன் ஜாம்பாவான்
கள் என்று புகழும் மருத்துவர்
கள் நிலை, அவர்கள் இறந்த
பிறகும் கூட, நல்லடக்கம்
பெற முடியாமல் தத்தழிக்கும்
நிலை,உங்கள் கவனத்தை
இதுவரை கவரவில்லையா
முதல்வர் அவர்களே!

டாக்டர் சைமன், சென்னை
பிரபல நியூரோ சர்ஜன்.
கொரோனா பாதிப்புக்கு
உள்ளாகி மரணமடைந்த
அவர் உடலை சென்னையில்
புதைக்க முடியவில்லை.
அந்த துயர நிகழ்வை பதிவு
செய்திருக்கிறார் அவரது
மருத்துவமனையில் பணி
புரியும் டாக்டர் பாக்யராஜ்.
முதல்வர் அவர்களே!
தமிழக அரசு அதிகாரிகளே!
சற்று காது கொடுத்து இந்த
விடியோ செய்தியை கேட்
பீர்களா! ஆக்க பூர்வமான
நடவடிக்கை மேற்கொள்வீர்களா!

DR.HABIBULLAH
Former Hon.Secretary
and Treasurer
Indian Medical Association
Kanyakumari District
https://www.facebook.com/dr.habibullah/videos

No comments: