Saturday, April 25, 2020

உணர்சிவசப்பட்டோரிடம் பொறுப்பைத் தந்தால்...


தவறு செய்பவர்
தப்பிக்க செய்வார்
தவறாக பேசுவார்

சொல்வார்
சொல்லத்தான் செய்வார்
நினைத்தார்
நடத்தி விட்டார்

செயல் படுவோர் விவாதத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்
செயல் படுவோர் விவாதத்தை ஒதுக்கி தான் விரும்பியபடி செயல் படுத்த முயல்கின்றனர்

பாதகம் வர புலம்புவது சிறப்பல்ல
பாதகம் வர வழி வகுத்தவரை திருத்துங்கள்

பாதகத்தையும் சாதகமாக்கிக் கொள்வது திறமையல்ல
பாதகம் தந்தோரை ஏசுவதை விட திருத்த முயலவேண்டும்

பொறுமை வெற்றியைத் தரும்
உணர்ச்சி தவறிழைக்க வழி வகுக்கும்

உணர்சிவசப்பட்டோரிடம் பொறுப்பைத் தந்தால்
பிரச்னை வர பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வார்


தங்களுக்குள் இருக்கும் உயர்வை மட்டும் நோக்காமல்
தங்களிடம் உள்ள குறைகளையும் அறிய வேண்டும் .
குறை அறிந்தால்தான் திருத்திக் கொள்ள முடியும்.
குறை உடையவர்களின் குணமறிந்து செயல்பட வேண்டும்
நல்லதும்,கெட்டதும் சேர்ந்தும் ஒரு பொருளுக்கு இருப்பதுபோல் ஒரு மானிடருக்கும் உண்டு என்பதனை மறக்கிறோம் .
ஒரு பொருள் பழுதானால் சீர் படுத்த நாம் எடுக்கும் முயற்சியை மானிடரின் குணத்திற்கு வரும் அழுக்குகளை சீர் படுத்த நாம் முயல்வதில்லை .
அவசர முயற்சியும் அவசர முடிவும் ஆபத்தில் முடியும் .
இடையூருகளை எதிர் கொள்ளும் ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பது அவசியம்.
சேவை ஆதாயத்தின் நோக்காத்தில் உருவாக கூ டாது

அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையாக இருப்பீராக! ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திடலாம். (அல்குர்ஆன் 4:19)

No comments: