Vavar F Habibullah
மத நல்லிணக்க கலாச்சாரத்தை
பிரதிபலிக்கும் மன்றங்களாகவே
அமெரிக்காவின், பெரும்பாலான
தேவாலயங்கள்,
மசூதிகள்,
கோவில்கள் திகழ்வது
ஆச்சரியம் தருகிறது.
லைப்ரரி,ஜிம்,பார்க்,
விளையாட்டு அரங்கம்,
சமூக அரங்கம்,உணவு விடுதி
ஸ்விம்மிங் பூல் என்று...
இறைமையையும், வாழ்வியலையும்
ஒன்றிணைக்கும் பாலமாக திகழும்
மசூதி ஒன்று, சமீபத்தில் என்
பார்வையை கவர்ந்தது.
மசூதிக்கான புற அடையாள
சின்னங்கள் எதுவும் இல்லாத
தொழுகைக்கான, சிறப்பு
தலமாகவே இதன் உட்புறம்
அமைந்துள்ளது.அதிகம்
பயனில்லாத தேவாலயம்
ஒன்றே, சிறிது மாற்றங்களுடன்
மசூதியாக தோற்றம் பெற்றது
என்ற செய்தி, மதம் கடந்த
மக்களின் மத நல்லிணக்க
உறவாகவே படுகிறது.
இறைவனை வழிபடும்
இடங்கள் எல்லாம்
இறை இல்லங்களே!



No comments:
Post a Comment