Sunday, November 10, 2019

இளம் விஞ்ஞானி விருது பெற்ற ஜுலைகா இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்..

Colachel Azheem











நவம்பர் 5 முதல் 7வரை கொல்கத்தாவில் நடைபெற்ற Indian International Science Festival '19 ல் கலந்து கொண்டு பல்லாயிரம் அறிவியல் அறிஞர்களை ஒருசேர பார்த்து உரையாடிய மகிழ்ச்சியுடன் சொந்தஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார் இளம் விஞ்ஞானி ஜுலைகா...


மயிலாடுதுறை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜுலைகா காதர் மைதீன் அங்குள்ள ஆசாத் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 மாணவி...
2015 ல் 8 ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கணினி, புரஜக்டர், ஸ்பீக்கர் வசதியுடன் இயங்குவதை பார்த்த ஜுலேகாவின் மனதில் எழுந்த கேள்வி ஏற்படுத்திய அறிவியல் ஆர்வம் படிப்படியாக வளர்ந்து இன்று அவரது சிந்தையில் உதித்த
"Smart Books Using Augumented Reality Code" எனும் அறிவியல் ப்ராஜெக்ட் தேசிய, சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான அறிவியல் அறிஞர்கள் முன்பு பங்கேற்க வழிவகை செய்துள்ளது.. இவரது கண்டுபிடிப்பு மூலம் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் போன் உதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க முடியும் என்ற தொழில்நுட்பம் சாத்தியம் ஆகியுள்ளது...

கடந்த 2015 முதல் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்ட 17 அறிவியல் கண்காட்சிகளில் ஐந்து முதல் பரிசுகள் பெற்றுள்ள ஜுலைகா, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்.

2018 ம் ஆண்டு மாநில அளவில் இளம் விஞ்ஞானி விருது பெற்ற ஜுலைகா, 2019 ம் ஆண்டுக்கான "கலாம் விருதுகள் விழுது" பெற்ற சிறப்புக்குரியவர்..
பிறந்த ஊருக்கும், பெற்றோருக்கும், பயிலும் ஆசாத் மகளிர் மெட்ரிக் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் ஜுலைகா காதர் மைதீன் அறிவியல் துறையில் இன்னும் சாதிக்க அவாவுடன் துஆவும்..

Colachel Azheem

No comments: