Monday, November 11, 2019

மதகுருவும் மாமன்னரும்

Dr.Vavar F Habibullah


சரித்திரம் என்ற பந்து, உலகில்
சில மனிதர்களின் கைகளில் தான்
சற்று லாவகமாக சுழல்கிறது.
ஆப்ரஹாம்,டேவிட்,சாலமன்
மோசஸ்,ஜீசஸ் என இறைத்
தூதர்கள் தொடங்கி...

மகா அலெக்சாண்டர்,ரோம
பாரசீக முஸ்லிம் சாம்ராஜ்ய
ஆட்சியாளர்கள் என விரிந்து
யூத,கிருத்துவ,முஸ்லிம் மத
வழிபாடு தலமாக திகழும்
ஜெருசலேம் தான் இன்றும்
உலக வல்லரசுகள் பின்னும்
அரசியல் நகர்வுகளின் தாயகம்.
மோசஸ்,ஜீசஸ்,முகமது
இவர்களை சுற்றியே இந்த
புனித நகரம் இன்றும் சுழல்கிறது.


கி.பி.33 - ம் வருடம்...
ஜெருசலேமில்,இயேசுவை
சிலுவையில் அறைந்து
விடுகிறார்கள்.பத்து
வருடங்களுக்கு பின்னர்
அங்கு ஒரு சர்ச் எழுப்பப்
படுகிறது. பாபிலோனியர்களும்,
பிறகு ரோமானியர்களும் அதை
சேதப்படுத்தி விட, பின்னாளில்
படையெடுத்து வந்த பாரசீகர்கள்
அங்கு வீனஸ் தேவதை பெயரில்
கோவில் ஒன்றை கட்டி
விடுகிறார்கள்.ரோமாபுரி மன்னர்
கான்ஸ்டன்டைன்,அந்த இடம்
இயேசுவின் புனித கல்லறை
என்பதை கண்டறிந்து அங்கு
மீண்டும் கிருத்துவ தேவாலயத்தை
புது வடிவில் எழுப்புகிறார்.

பின்னர் கி.பி.636 - களில்...
ஜெருசலேம், கலீஃபா உமர்
ஆட்சியில், அவரது கரங்களில்
விழுகிறது.
ஒரு நாள்....
ஜெருசலேம் நகரில்
அரசு முறை பயணம்
மேற்கொள்கிறார் கலீஃபா உமர்.
உலகின் பாதி நிலபரப்பை ஆட்சி
செய்யும் ராஜாதி ராஜர்,
ராஜகம்பீர உடையில்
ரத கஜ பரிவாரத்துடன் வருவார்
என எதிர் பார்த்த ஜெருசலேம்
நகர மக்களும்,மதகுருக்களும்
மிகவும் எளிய உடையில் தோன்றிய
உமரை பார்த்து அதிசயித்தனர்.
ஜெருசலேம் நகரின் திறவுகோலை
அவர் கரங்களில் ஒப்படைத்து
வரவேற்று உபசரிக்கிறார்
தேவாலயத்தின் பிரதம மதகுரு.

தேவாலயத்தை சுற்றி வலம்
வரும்போது, தொழுகைக்கான
அழைப்பு காதில் விழ கலீஃபா
உமர் வேகமாக தேவாலயத்தை
விட்டு வெளியேறி வெளி வராந்தா
பக்கம் வருகிறார்.பதறியபடி ஓடி
வந்த மதகுரு பணிந்து ஆலயத்தின்
உள்ளே வந்து தொழுகை நடத்த
கேட்கிறார்.மிகவும் தீர்க்கமாக
அவரது கோரிக்கையை மறுத்து
விட்ட நாடாளும் கலீஃபா உமர்
சொன்னார்..

“உள்ளே வந்து தொழுவதில்
குற்றம் இல்லை.ஆனால் இதை
காரணம் காட்டி, பின்னாளில்
முஸ்லிம்கள் இந்த தேவாலயத்தை
இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு
ஒரு மசூதியை கட்டி விடுவார்களோ
என்று நான் அஞ்சுகிறேன்.”

கலீஃபா உமர் கொடுத்த
வாக்குறுதி கடந்த 1200
ஆண்டுகளாக முஸ்லிம்களால்
இன்று வரை மீறப்படவில்லை.
“சர்ச் ஆஃப் ஹோலி செபல்கெர்”
இங்கு தான், இயேசுவின் புனித
உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அவரை சிலுவையில் அறைந்த
திருத்தலமும் இது தான்.
முகமது நபி,விண் பயணம்
மேற்கொண்ட அல் அக்ஸா
மசூதியும் மிக அருகில் தான்
உள்ளது.
வரலாறு....சில நேரங்களில்
மிகவும் முக்கியம் நண்பர்களே!!

Vavar F Habibullah

No comments: