Thursday, November 14, 2019

பெற்றோர் கண்டித்தாலும் குழந்தைகள் அவர்களை வெறுக்கக்கூடாது

சீனாவில் ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளை அடிப்பதற்காக கம்பு ஒன்று வைத்திருப்பது வழக்கம். பெற்றோர் பிள்ளையை அடிக்கும் போது கூட ஏன் அடித்தீர்கள்? என்று குழந்தைகள் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது.
ஒரு சமயம் தொண்ணூறு வயது தகப்பனார் தன் எழுபது வயது மகன் மீது கோபம் கொண்டார். கம்பை எடுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினார். எப்போதுமே வாய் திறக்காத மகன் அன்று என்னவோ அழத் தொடங்கிவிட்டார். வயதான தந்தைக்கு மனம் கேட்கவில்லை. “ என்றுமே அழாத பிள்ளை இன்று அழுகிறானே அடி பலமாகப் பட்டுவிட்டதோ என்று எண்ணி மகனை அணைத்துக்கொண்டார்.

ஏனப்பா அழுகிறாய்/” என்று கேட்டார் தந்தை, அதற்கு மகன் “ எப்போதும் அடி பலமாக விழும். ஆனால் இன்று என்னவோ வலிக்கவே இல்லை. உங்களின் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்பதை எண்ணி அழுகிறேன்” என்றார். குழந்தைகள் பெரியவர்களானாலும் கூட பிள்ளைகளைக் கண்டிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு/ பெற்றோர் கண்டித்தாலும் குழந்தைகள் அவர்களை வெறுக்கக்கூடாது என்பதை உணர்த்தவே இந்தக் கதை அங்கு வழங்கப்படுகிறது.

//...பெற்றோர்கள் கண்டித்தாலும் குழந்தைகள் அவர்களை வெறுக்கக்கூடாது....//
👌
# பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கும் உரிமை பெற்றோர்களல்லாது வேறு எவருக்கு இருந்துவிடப்போகிறது?

No comments: