Thursday, January 3, 2019

அரசன் போன்று நீங்களும் நடந்து கொள்ள வேண்டும்.

உலக ஆதாயங்களை, உலகத்தின் முன் பிச்சைக்காரன் போன்று கை கட்டி நின்று பெற நினைக்காதீர்கள்.

அதற்கு மாறாக,
திரைப்பொருட்கள் தன் முன் கொண்டு வந்து குவிக்கப்படும் போது,
கம்பீரமான வீற்றிருக்கும் அரசன் போன்று நீங்களும் நடந்து கொள்ள வேண்டும்.


இந்த உலகமானது,
தன் முன் கை கட்டி நிற்பவனை தாழ்த்துகிறது.
இறைவனின் முன் கை கட்டி நிற்பவனை உயர்த்துகிறது.

" உங்களின் பங்குக்குரிய உலக ஆதாயங்களை, உங்களையே நீங்கள் தாழ்மைப்படுத்திக்கொண்டு பெற,
நீங்கள் முயல வேண்டாம்"

" நீங்கள் , உங்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படாமல் பெறவே இறைவன் விரும்புகிறான்"

உலக ஆதாயங்களை பெறுவதோ, அதனை நற்காரியங்களுக்காக சேமிப்பதோ, சட்டப்படி சரியேயாகும்.

ஆனால்,
அவற்றை உங்களின் இதயங்களில் பதிய வைக்கக்கூடாது.

" இதயத்தின் வாயிலில் நிற்க அனுமதிக்கலாம்.
உங்கள் இதயத்தின் உள்ளே புக அனுமதிக்கூடாது.
அனுமதிப்பின் நீங்கள் உங்கள் மதிப்பை இழந்து விடுவீர்கள்"
                               
                                       
-ஷெய்க் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

No comments: