Wednesday, January 30, 2019

கற்காலமும் சொற்காலமும்

ஆக்கம்: இப்னு ஹம்துன் -

நாகரிகமற்ற மனிதரின்
மிருக வேட்டை
அக்கற்கால ஏடுகளில்

நகருற்ற மனிதரின்
மனித வேட்டையோ
இச்சொற்கால ஏடுகளில்

குருதி வழிய மிருகம் இறக்க…
ஒருகை தின்று வயிறு தணிய…
அக்காலம் கற்காலம்!

Monday, January 28, 2019

காயிதே மில்லத்தின் நாட்டுப்பற்றை ....



Aloor Sha Navas

காயிதே மில்லத்தின் நாட்டுப்பற்றை சந்தேகிக்கும் பா.ஜ.க.வின் எச்.ராஜாவுக்கு, திராவிட இயக்கத் தலைவர்களின் பதிலடி இதோ!

(காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தில் இருந்து..)

இனாம்குளத்தூர் இஸ்திமா

Sunday, January 27, 2019

இஜ்திமா கண்டு வியந்த போலிஸ்

  #Alhamdulillah இஜ்திமா கண்டு வியந்த போலிஸ்




இனாம் குளத்தூர் இஜ்திமா இன்றைய 26.1.19 சனி நிகழ்வுக்கு பின் இரவு இஜ்திமா பந்தலிளிருந்து 2 கி.மீ நடந்து வந்து காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியப்ப ஒரு போலிஸ்காரர் வந்து காரை நிறுத்தி சார் மணப்பாறை பக்கம் சென்றால் என்னை மணப்பாறையில் ட்ராப் செய்ய முடியுமா ப்ளீஸ் என்றார். ஏற்றிக் கொண்டு அமர்ந்ததும் அவரிடம் கேட்டேன் எத்தனை நாள் இங்கு ட்யூட்டி ? இஜ்திமா ட்யூட்டி அனுவம் எப்படி? என்று கேட்டேன்.

இனாம் குளத்தூரில் ஆரம்பித்தவர் மணவை வந்து இறங்கும் வரை 20 நிமிடம் வரை மூச்சு விடாது போலிஸ்காரர் பேசியது கீழே.

பொழுது போதவில்லை

ஒரு நாள்


வேலை செய்யும் அலுவலகத்தில் ஒருவர் முதலாளியிடம் போய் ஒரு நாள் லீவு கேற்கிறார்.

முதலாளி: வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா????

365 நாள் ஐயா

முதலாளி: அதில் மொத்தம் எத்தனை வாரம்?

52 ஐயா

நான் என்ற நினைப்பு


"நான்" என்ற நினைப்பை விட்டு வா
நான் என்று நீ நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் வெறும் பிரமையே.  ஏழை மனிதா தற்பெருமை என்ற புரவியை விட்டு கீழே இறங்கி விடு.  சொற்ப வழுக்கிலேயே  சறுக்கிப்  படுகுழியில் விழுந்து நாசமானவர்கள்   எத்தனையோ பேர்! ஒன்றுமே அறியாமல் இருந்து ஞானப் பலன் பெற்றோர் எத்தனையோ பேர்! அதிகம் படித்திருந்தும் ஞானமற்ற  மௌட்டிக்கறாய்  போனவர் எத்தனையோ பேர்!

Thursday, January 24, 2019

புனிதம் நிறைந்த ஜம் ஜம் நீர் !!!


*எது உலக அதிசயம் ???*
*உலகின் புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல் இதோ:*
*1. இந்தியாவின் தாஜ்மஹால்.*
*2. சீனப் பெருஞ்சுவர்.*
*3. ஜோர்டானின் பெட்ரா.*
*4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் மலை* *உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.*
*5. பெருவின் மச்சு பிச்சு.*
*6.மெக்ஸிகோவின் மாயன் கட்டிடங்கள்.*
*7. ரோம் நகரின் கொலீசியம்.*
*இவைகள் நாமாகவே* *உருவாக்கியதும்,*
*அடிக்கடி மாற்றி*
*கொள்கிறவைதான்.*
*இது அதிசயமா?*
*ஜம் ஜம் (ZAM ZAM water) நீரின்*
*அற்புதத் தன்மைக் கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர் என்றால் மிகையில்லை.*

BORN LEADER

by.
dr.Vavar F Habibullah

BORN LEADER
நான் பிறந்த ஆண்டு 1947
சுதந்திர இந்தியாவில் பிறந்து
வளர்ந்து வாழ்ந்து வரும் ஒரு
இந்திய குடிமகன் என்ற
உரிமையில்...
இது வரையில் நமது தேசத்தை
மாநிலத்தை ஆட்சி செய்து
வந்துள்ள அரசியல் தலைவர்கள்
பற்றி சற்று ஆராயும்போது ஒரு
கேள்வி எழுகிறது.
தலைவர்கள் பிறக்கிறார்களா!
இல்லை உருவாக்கப்படுகிறார்களா!
“ARE LEADERS BORN OR MADE”

Wednesday, January 23, 2019

Thuckalay Haleema " றோசுமீசாக்கு மாலை"அறிமுகம்

தக்கலை ஞான மாமேதை பீர்முகம்மது ஒலியுல்லாவின் றோசுமீசாக்கு மாலையை தக்கலை கவிஞர் ஹலீமா அறிமுகம் செய்து பேசும் உரை

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்



மேற்கத்திய நாடுகளின் தலைநகர் ஒன்றில் இவர்தான் முதல் முஸ்லிம் மேயர் என்பதற்கு அப்பால், சாதிக் கான் வடிவில் பாகிஸ்தானிலிருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன், இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்துகிறது.
--------------
ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு அடுத்து, இன்று அதிகமான வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் லண்டன் மேயர். பிரிட்டனில் மேயருக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகம்.

சோம்பேறித்தனம் - Islamic View

.

சோம்பேறித்தனம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எச்சரித்த மிக மோசமான பண்பாகும். இப்பண்பின் காரணமாகவே ஓர் அடியான் வணக்கவழிபாடுகளை விட்டும் தூரமாகி விடுகின்றான். அவனுடைய நேரங்களும் வீணடிக்கப்படுகின்றன. மற்றும், இன்மை மறுமை வாழ்க்கை நஷ்டத்திற்குரியதாக ஆகிவிடுகின்றது.

இச்சோம்பேறித்தனமானது நயவஞ்சகர்களின் பண்புகளில் ஒன்றாகும். இதனைப் பின்வருமாறு அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கின்றான்:

“அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால், சோம்பேறிகளாக எழுந்து நிற்பார்கள்”. (அந்நிஸா: 142)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகத்தன்மையானது எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி வணக்கவழிபாட்டில் சோம்பேறித்தன்மையை உண்டாக்கிவிடுகின்றது”.

மேலும், வஹ்ப் இப்னு முனப்பிஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:”நயவஞ்சகனுக்கு மூன்று பண்புகள் உள்ளன:

தனிமையில் இருக்கும் போது சோம்பேறித்தனத்துடன் இருப்பான்.
தன்னுடன் ஒருவர் இருக்கும் போது உட்சாகத்துடன் இருப்பான்.
மனிதர்களின் புகழ்ச்சியில் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்”.
நபியாவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகக்காரர்கள் மீது மிகப்பாரமான தொழுகைகள் இஷாத் தொழுகையும் பஜ்ர் தொழுகையுமாகும். மக்கள் அவை இரண்டிலும் இருக்கும் நலவுகளை அறிவார்களென்றால் அவ்விரண்டையும் தவண்டு சென்றாவது அடைவார்கள்”. (ஸஹீஹுல் ஜாமிஉ)

உண்மையில், சோம்பேறித்தனம் குடிகொண்டிருக்கும் ஒரு சமுகம் எப்பொழுதும் தோல்வியைத் தழுவக்கூடியதாகவே இருக்கும். அச்சமுகத்தில் வீணடிப்பும் பின்னடைவும் பரவலாகக் காணப்படும்.

எம்முன்னோர்கள், ஒருவர் தன்னைக் குறித்து தான் ஒரு சோம்பேறியாக இருக்கிறேன் என்று கூறுவதை வெறுத்துள்ளார்கள். அத்தகையவர்களில் ஒருவராக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைக் இனங்காட்டலாம்.

உண்மையில் சோம்பேறித்தனமானது நோய்கள் பல உண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. நபித்தோழர்களில் சிலர் நபியவர்களிடத்தில் சமுகம் தந்து நடந்து செல்வதின் மூலம் தமக்கு உண்டாகும் நோயைப் பற்றி முறையிட்டனர். அப்போது நபியவர்கள் அத்தோழர்களை நோக்கி நடந்து செல்லும் போது எட்டுக்களை வேகமாக வைக்குமாறு பணித்தார்கள். இச்செய்தி நாம் மேற்கூறிய அம்சத்திற்கு வலுச் சேர்க்கின்றது.

சோம்பேறித்தனம் உண்டாவதற்கான காரணங்கள்

உலமாப்பெருந்தகைகள் சோம்பேறித்தனம் எதனால் உண்டாகின்றது என்பது பற்றி விளக்கமளித்துள்ளனர். அந்தவிதத்தில்: நயவஞ்சகத்தன்மை குடிகொள்ளல், அதிகமாகத் தூங்குதல், அதிகமான உண்ணுதல் பருகுதல், பிறர் மீது தங்கியிருத்தல், சுத்தத்தை கடைபிடிக்காமல் இருத்தல் என்று பல காரணங்களை பட்டியல் படுத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

சோம்பேறித்தனத்திற்கான பரிகாரங்கள்

சோம்பேறித்தனத்தை நீக்குவதற்கு மார்க்க அடிப்படையில் சில பரிகாரங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.

1. சோம்பேறித்தனத்தை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடல்.

நபியவர்களைப் பொருத்தளவில் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாப்புத் தேடியிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில், அவர்கள் பாதுகாப்புத் தேடிய சில பாதுகாவல் வரிகளை இங்கு பதிய வைக்கின்றேன்.

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . رَبِّ إنِّي أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِا اليَوم وَخَيْرَ مَا بَعْدَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِا اليَوم وَشَرِّ مَا بَعْدَهُ . رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ والهَرمِ وَسُوءِ الْكِبَرِ وفِتنَةِ الدُّنيا. رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ.

பொருள்: நாங்கள் காலைப்பொழுதை அடைந்தோம். மேலும், ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக காலைப்பொழுதில் ஆகிவிட்டது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறுயாரும் இல்லை. அவன் தனித்தவன், இணைதுணையற்றவன். அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது, மேலும் அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவனே அனைத்து வஸ்துக்கள் மீதும் ஆற்றல் படைத்தவன். என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் இந்த நாளில் உள்ள நலவை உன்னிடத்தில் கேட்கின்றேன்

. மேலும், இதற்குப் பிறகுள்ளதின் நலவையும் கேட்கின்றேன். இந்த நாளின் கெடுதியில் இருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும், இதற்குப் பிறகுள்ள தீங்கில் இருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய இரட்சகனே! உன்னைக் கொண்டு சோம்பேறித்தனம், முதுமைப்பருவம், பெருமையின் தீங்கு, உலகத்தின் குழப்பம் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய இரட்சகனே! உன்னைக் கொண்டு நரகில் இருக்கும் வேதனையில் இருந்தும் கப்ரில் இருக்கும் வேதனையில் இருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (முஸ்லிம்)

அதேபோன்று புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் நபியவர்கள் அதிகமாக சோம்பேறித்தனத்தில் இருந்தும் பாதுகாவல் தேடுவார்கள் என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். புகாரியில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில்:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

என்று பதிவாகியுள்ளது.

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் துக்கம் துயரம், இயலாமை, சோம்பேறித்தனம், உலோபித்தனம், கோலைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் மிகைப்பு ஆகியவற்றில் இருந்தும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்.

2. அல்லாஹ்விடத்தில் சோம்பேறித்தனத்தை இல்லாமல் செய்வதற்கு உதவி தேடல்.

நபியவர்கள் முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கிப் பின்வருமாறு பணித்தார்கள்: “முஆதே! அல்லாஹ் மீது சத்தியமாக நிச்சயமாக நான் உன்னை நேசிக்கின்றேன்” என்று இரு விடுத்தங்கள் கூறினார்கள். பிறகு, “முஆதே! ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ தவறாமல் கூறிவர இந்த துஆவை வஸிய்யத்தாக உனக்கு உபதேசிக்கின்றேன்”

اللهُمّ أعِنِّي عَلى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

பொருள்: அல்லாஹ்வே! உன்னை ஞாபகிப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னுடைய வணக்க வழிபாட்ட அழகிய முறையில் நிறைவேற்றுவதற்கும் எனக்கு நீ உதவிபுரிவாயாக! (அபூதாவுத்)

3. இரவைக்குத் தூங்கச் செல்லும் போது ஆயதுல் குர்ஷியை ஓதிக் கொள்ளல்.

நபியவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தூங்கும் போது அவரது பிடறிப் பகுதியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களை இடுகிறான். அம்முடிச்சுக்களின் மீது அவன் அடித்தவனாக: உனக்கு இரவு இன்னும் நீளமாக உள்ளது எனவே, நீ உறங்குவாயாக! என்று கூறுவான். அவ்வாறு அவர் தூக்கத்தில் இருந்து விழித்து, அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும்.

மேலும், அவர் வுழூச் செய்தால் மற்றொரு முடிச்சும் அவிழ்ந்துவிடும். இன்னும், அவர் தொழுதால் எஞ்சிய முடிச்சும் அவிழ்ந்துவிடும். அப்போது அவர் உற்சாகமானவராகவும் நல்லுள்ளம் படைத்தவராகவும் காலைப்பொழுதை அடைவார். மாறாக, மேற்கூறப்பட்ட செயல்களை மேற்கொள்ளாதவர் தீய உள்ளம் படைத்தவராகவும் சோம்பேறியாகவும் காலைப் பொழுதை அடைவார்”. (புகாரி, முஸ்லிம்)

4. சோம்பேறிகளை விட்டும் தூரமாக இருந்தல்.

சோம்பேறிகள் மற்றும் நேரத்தை வீணடிக்கக்கூடியவர்களை விட்டும் நாம் எப்போதும் தூரமாக இருக்க வேண்டும். ஏனெனில், நபியவர்கள் நவின்றார்கள்: “மனிதன் தன்னுடைய நண்பனின் மார்க்கத்தில் இருக்கின்றான். எனவே, உங்களில் ஒருவர் யாருடன் கூடிப்பழகுவது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளட்டும்!” (அஹ்மத்)

5. நேரத்தை வீணாக்கக்கூடிய சாதனங்களைப் புறக்கணித்தல்.

மனிதனது பொன்னான நேரத்தை வீணடிக்கக்கூடிய சாதனங்கள் விடயத்தில் நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அந்தவிதத்தில்:

1. கைபேசிகளில் விளையாட்டு, சினிமா, கழியாட்டம் போன்றவற்றோடு தொடர்புடைய மென்பொருட்களை தரவிறக்கம் செய்து அதில் காலத்தைக் கழித்தல்.

2. தொலைகாட்சி, கணனி போன்றவற்றில் ‘Games’ விளையாடுதல்,

3. காட்டூன் பார்ப்பதில் பொழுதைப் போக்கல்.

4. பார்த்தல் ஊடகங்களில் வெளியூர் விளையாட்டுக்களை கண்டு கழித்தல்.

5. சமுக இணைய தளங்களில் முழுநேரத்தையும் கழித்தல்.

என்று பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் சரிவர நிர்வகிக்கத் தவறும் பட்சத்தில் எம்சமுகம் பாரிய ஒரு பின்னடைவுக்கு முகம் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

6. மேலெண்ணங்களைத் தவிர்த்தல்.

அதிகமாக மேலெண்ணம் கொள்வது சோம்பேறித்தனத்தை வரவழைக்கும். இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “அதிகமான மேலெண்ணம் கொள்வது, வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுவதை விட்டும் சோம்பேறித்தனமாக நடந்து கொள்வதற்கும், பாவமன்னிப்பை வேண்டுமென்று பிற்போடுவதற்கும் வழிவகுக்கின்றது”. (பத்ஹுல் பாரி)

7. சிகிச்சை செய்தல்

சில சமயங்களில் சோம்பேறித்தனமானது ஒருவரின் உடலில் காணப்படும் நோயின் காரணமாகவும் ஏற்படலாம். எனவே, இத்தகைய சந்தர்ப்பத்தில் அது தொடர்பான வைத்தியரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

8. சுத்தமாக இருத்தல்

நாம் எப்போதும் எம் உடம்பைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குளித்தல், மனம் பூசல் போன்ற செயற்பாடுகளை தினமும் மேற்கொள்வதின் மூலம் இப்பண்பை எம்மைவிட்டும் விலாசமற்றுச் செய்துவிடலாம். அதிலும் குறிப்பாக, மனம் பூசுதல் என்பது எப்போதும் எம் உடம்பிற்கு உட்சாகத்தைத் தருகின்றது.

Saturday, January 19, 2019

Abu Haashima #அல்அய்ன்_என்றொரு #அமீரக_அழகு

Abu Haashima

#அல்அய்ன்_என்றொரு
#அமீரக_அழகு

அமீரகத்தில்
அல் அய்ன் என்றொரு
அற்புதமான இடம் !
மலைப்பிரதேசம்.
அங்கே ...

தொலைந்த நகரம் பூம்புகார்

தொலைந்த நகரம் பூம்புகார்


                                          கிரஹாம் ஹான்காக்

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் (Graham Hancock) என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார். கிரஹாம் ஹான்காக்  தொன்ம நம்பிக்கைகள், நினைவுக் கற்கள், பண்டைய வானியல்/சோதிடத் தரவுகள் போன்ற வழமைக்கு மாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர்.

18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.



''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரமாண்டமான நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

Friday, January 18, 2019

வாழ்க்கையை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம்

வாழ்க்கையை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.


.

பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் வெற்றிக்கான வாய்ப்பு இல்லாத விருப்பங்களை விட குறைவாகவே இருக்கின்றன.

உண்மையில், சராசரியாக ஒரு சில வாரங்களுக்குள் அவர்களின் தீர்மானம் பற்றி மறந்து விடுகின்றனர்

இலக்குகளை அமைப்பது ஒரு சக்தி வாய்ந்த செயலாகும், ஆனால் சரியாக செய்தால் மட்டுமே.
ஆசைகளின் பட்டியலைச் செய்வதை விட அதிகமாக செய்ய வேண்டியது அமையும்,

நான் Jafarullah Jafar எழுதி பாடிய பாடல் இன்று ஜித்தாவில் fraternity fest நிகழ்ச்சியில் சற்று முன் வெளியிடப்பட்டது
அஹமது பாஷா வெளியிட பிரபல மலையாள மாப்பிள்ளை பாடகர் நூஹு பீமாபள்ளி பெற்றுக் கொண்டார்
பாடல் youtube link

https://youtu.be/7Lu9xVCgvSU

திருச்சி இஜ்திமா

Thursday, January 17, 2019

மனமே மனமே பாவம் செய்வதேன்!

மனமே மனமே பாவம் செய்வதேன்!
by கவிஞர் மலிக்கா ஃபாரூக்

மனமே மனமே பாவம் செய்வதேன்
மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்
மரணசிந்தனை நினைவில் வரலையா! ஆ ஆ ஆ ஆ
இல்லை “மனிதா
மரணமென்பதே உனக்கு இல்லையா! ஆ ஆ

பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே
புனிதமனிதனே உனக்காகவே!
அட உனக்காகவே
இங்கு
சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்
பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது
புண்ணியங்களும் குவிந்து இருக்குது
நிறைய குவிந்து இருக்குது

Wednesday, January 16, 2019

Paradise Found (Islamic Culture Documentary) | Timeline

Prophets of Islam with brief history.....

A Timeline of Islam

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
அரபிய சமுதாயங்கள்
1) அல் அரபுல் பாயிதா
2) அல் அரபுல் ஆபா
3) அல் அரபுல் முஸ்தஃபா
அ) ஹிம்யர் கோத்திரமும் அதன் உட்பிரிவுகளும்
1) குழாஆ
2) ஸகாஸிக்
3) ஜைது அல் ஜம்ஹூர்
1) அஜ்து கிளையினர்
2) லக்ம் மற்றும் ஜுதாம்
3) பனூ தைய்
4) கின்தா
அ) யமன் நாடு (ஏமன்)
1) கி.மு. 1300 லிருந்து கி.மு. 620 வரை
2) கி.மு. 620லிருந்து கி.மு. 115 வரை
3) கி.மு. 115லிருந்து கி.பி. 300 வரை
4) கி.பி. 300லிருந்து இஸ்லாம் நுழையும்வரை
ஆ) ஹீரா நாடு
இ) ஷாம் நாடு (ஸிரியா)
ஈ) ஹி ஜாஸ் பகுதியில் அதிகாரம்
குஸய்யின் சுருக்கமான வரலாறு
குஸய்யின் சாதனைகள்
1) தாருந் நத்வாவின் தலைமை
2) கொடி
3) வழிநடத்துதல்
4) கஅபாவை நிர்வகித்தல்
5) ஹாஜிகளின் தாகம் தீர்த்தல்
6) ஹாஜிகளுக்கு விருந்தளித்தல்
அரசியல் பின்னணி
மூடநம்பிக்கைகள்
சமயங்களின் நிலைமைகள்
சமுதாய அமைப்பு
பொருளாதாரம்
பண்பாடுகள்
நபியவர்களின் குடும்பம்
1. ஹாஷிம்
2. அப்துல் முத்தலிப்
ஜம்ஜம் கிணறு
யானைப் படை
3. அப்துல்லாஹ்
பிறப்பு
ஸஅது கிளையாரிடம்
நெஞ்சு திறக்கப்படுதல்
பாசமிகு தாயாரிடம்
பரிவுமிக்க பாட்டனாரிடம்
பிரியமான பெரியதந்தையிடம்
மாநபிக்காக மழைபொழிதல்
அவர் அழகரல்லவேர்
துறவி பஹீரா
ஃபிஜார் போர்
சிறப்புமிகு ஒப்பந்தம்
உழைக்கும் காலம்
கதீஜாவை மணம் புரிதல்
கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்
நபித்துவத்திற்கு முன் - ஒரு பார்வை

இஸ்லாமிய வரலாறு (காலவரிசை) மற்றும் இஸ்லாத்தின் வளர்ச்சி

இஸ்லாமிய வரலாறு (காலவரிசை) மற்றும் இஸ்லாத்தின் வளர்ச்சி
6 வது நூற்றாண்டு (500-599) C.E.
545: அப்துல்லாவின் பிறப்பு,(முகம்மது நபி (ஸல்)  அவர்களது தந்தை.)
571 முகம்மது நபி (ஸல்)  அவர்களது பிறப்பு. யானை ஆண்டு. யேமனின் வைசிராய் அபராஹாவால் மக்காவின் படையெடுப்பு, அவரது பின்வாங்கல்.
577: நபி (ஸல்) அவர்களின் தாயுடன் மதினா நகரத்திற்கு செல்லுதல் அங்கு அவர்களது  தாயின் இறப்பு
580: நபி (ஸல்) அவர்களின் தாத்தா அப்துல் முத்தலிப் மரணம்.
583: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாமாவின் அபு தாலிபுடன் சிரியாவின்  பயணத்தில். முகம்மது நபி (ஸல்)  அவர்களது தீர்க்கதரிசனத்தை முன்னறிவிக்கும் பிஸ்ராவில் உள்ள துறவி பஹிராருடன் அவர் சந்தித்தார்.
586: ஃபிஜியின் போரில் முகம்மது நபி (ஸல்)  அவர்களது பங்கேற்கிறார்கள்.

யார் அழகு ! எது அழகு?


*அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்*
        *அழகாக இருக்க நாம்* *ஆசைப்படுகிறோம்*
        *அழகாக இல்லையெனும் ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்.*
*அழகு என்று நம்மை பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்.*

         *எது அழகு ?*

*சிவந்த நிறமா?* *கூறான மூக்கா?* *வேல்போன்ற விழிகளா?* *வனப்பான உடல் அமைப்பா?* *வண்ண,வண்ண உடைகளா?*
*வித விதமான சிகை அலங்காரங்களா?* *விலை உயர்வான நகை அலங்காரங்களா?*
          *இவைகளெல்லாம் அழகுதான். ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல.*

Tuesday, January 15, 2019

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

<ஆங்கில வாழ்த்தையும் அழகு தமிழ்ப் பண்பாடாக்கிய கலை அருமை 
கவிஞர் புகாரி

பக்கத்து வீட்டுக்கார நண்பர் பொங்கல், வடை, சாம்பார், பாயசம் இன்னபிற எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார். படு சுவையாக இருந்தது.

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பசியோடிருந்தால் நீங்கள் என்னைச் சேர்ந்தவரல்ல என்ற நபிமொழிதான் நினைவுக்கு வந்தது.
இதுதான் இந்தியர்களின், தமிழர்கள் வாழ்முறை. இந்த அன்பும், சகோதரத்துவமும்தான் வாழ்வின் நோக்கமே முகம்மது அலி

Monday, January 14, 2019

மத நல்லிணக்கம் !

லக்கும் தீனுக்கும் வலிய தீன் ....

இதுதான் இஸ்லாம் சொல்லும் நடுநிலை பாடம்

கலாச்சாரங்களையும் பண்டிகைகளையும் ஏற்பது , கொண்டாடுவது என்பது அவரவர் மத நம்பிக்கை மற்றும் விருப்பத்தை சார்ந்தது என்கிற நல்ல புரிதல் மனிதர்களுக்கு மற்றும் நல்லிணக்கத்திற்கு மிகவும் அவசியமானது , பாதுகாப்பானது !

மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் , அனைத்து மதத்தினரையும் மதித்து அவர்களுக்கும் உதவி வாழ்வது முஸ்லிம்களுக்கு கடமையாக போதிக்க பட்டிருக்கிறது. அதை செய்தால் தான் மனித நேயமும் , மனித ஒற்றுமையும் வளரும். இதுதான் மத நல்லிணக்கம் ....

இப்படிப்பட்ட நல்லிணக்கம் நம்மிடையே பெருகட்டும் என மனமார விரும்புகிறேன்

- தக்கலை கவுஸ் முஹம்மத்

பகுத்தறிய மறவாதே..!!

................................

வஞ்சகம் தனையேயுண்டு
வருத்தித் தலைக் கொய்யும்
நஞ்சையே நற்பாலென நம்பவைத்து....

வெண்ணிறத் தோலணிந்த
விஷம நரிகளுண்டு யிங்கே...

பஞ்செனத் துருத்தியப்
பருத்த மடியது கண்டு
பசுவெனவே யெண்ணி நீயும்
பாலறுந்தத் துணியாதே மறந்தும்
பகுத்தறிய மறவாதே..!!

மின் கவி பயன்படுத்தும் முறை


மின் கவி பயன்படுத்தும் முறை


Read More
மின் கவி மூலம் மாற்றம் செய்யப்பட்ட புத்தகங்கள்
June 19, 2018

Sunday, January 13, 2019

தமிழர் திருநாள் வாழ்த்துகள்..


தங்களுக்கும் தங்கள்
குடும்பத்தினர் அனைவருக்கும் குதுகலமான தமிழர் திருநாள் வாழ்த்துகள்..

பொங்கி வரும் பொங்கலைப் போல் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பொங்கி வழியட்டும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
தங்கள்
Mohamedali முகம்மது அலி

நுக்தா


சூஃபியின் வண்ணத்துப்பூச்சிகள்
அவரது புல்லாங்குழலின் துளைகளிலிருந்தே
தோன்றிப் பறந்தன

லைலாவின் ஈர இமைகளில்
நீருறுஞ்சிய உணர்கொம்புகளால்
மஜ்னூனின் தூரத்தையளந்து
பாட்டமாய்ப் பறந்தன

அவன் வெறும் பாதச்சுவடுகளில் அமர்ந்து
பாலையெங்கும் சுட்டுத்தீயும்
பிதற்றலைக் கேட்டன

Mohamed Rafee / Nagore Rumi நாகூர் ரூமி

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நாகூர் ரூமி

நாகூர் ரூமி அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார். உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு  எடுத்து  உரைப்பவரே  உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர். இந்த வழியில் நாகூர் ரூமி அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்


நாகூர் ரூமி பிறந்து வளர்ந்த ஊர் நாகூர்

 நாகூரைச் சேர்ந்த படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், வசனகர்த்தா தூயவன் ஆகியோர் நாகூர் ரூமியின் தாய் மாமாக்கள். சித்தி ஜுனைதா பேகம் ரூமியின் பெரியம்மா!

 இப்போது ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்பன் கவிதைகள் மற்றும் மில்டன் கவிதைகள் குறித்து பிஹெச்டி ஆய்வினை மேற்கொண்டவர்!

 ஆங்கிலத்தில் ஐந்து, தமிழில் 27, மொழிபெயர்ப்பு ஆறு என இதுவரை 38 நூல்களை எழுதி இருக்கிறார் நாகூர் ரூமி!

 இவர் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்து உள்ளது. இவருடைய ஹோமரின் இலியட் காவியத் தமிழ் மொழிபெயர்ப்புக்காக திசையெட்டும் தமிழாக்க விருது பெற்றுள்ளார்
அன்புடன் முகம்மது அலி

Mohamed Rafee / Nagore Rumi

சில நாட்களுக்கு முன்பு எங்கள் கல்லூரிக்கு வணிகவியல் துறை சார்பாக நடந்த ஒரு விழாவுக்கு பன்முக ஊடகவியலாளரும் உலக கிரிக்கட் நேர்முக வர்ணனையாளருமான திரு சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு என் இந்த விநாடி என்ற நூலை அப்போது நான் கொடுத்தேன். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனால் அவர் நான் வியக்கும் விதமான ஒரு காரியம் செய்திருந்தார்.

Friday, January 11, 2019

· Rahul gandhi in Dubai துபாயில் ராஜீவ்காந்தி

ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது வீண்போகவில்லை. வலிமை மிக்கப் பேச்சு. சூறாவளி போல் 24 நிமிடங்கள் எங்களைக் கட்டிப்போட்ட போச்சு. இது பாகம் 1 #RGinUAE Banu
அமீரக திமுக தலைவர் Meeran Syed Siddiq அவர்களுக்கு மிக்க நன்றி. கிட்டத்துல உட்கார்ந்து ராகுலைப் பார்க்க வழி அமைத்து தந்தமைக்கு.
Jazeela Banu

துபாயில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் .... ராகுல்காந்தி

Rahul gandhi வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் .... ராகுல்காந்தி அவர்களின் குடும்பம் பரம்பரை என்பது எல்லோருக்கும் தெரியும் ...
 துபாய் விமான நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது ராகுல்காந்தி அவர்கள் தனது லக்கேஜ்களை அடங்கிய பெட்டியை தானே எடுத்துக்கொண்டு வருகிறார் ..... இவரது எளிமையான செயல்பாடுகள் இது முதல்முறை அல்ல...நமது விவசாயிகள் டெல்லியில் ஆர்பாட்டம் செய்தபோதும் அவர்களோடு சாலையில் அமர்ந்தவர் ....... நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியை நாக்குத்தள்ளவைத்தவர் ..... அவருக்கு அமீரகத்தில் சிறப்பானமுறையில் வரவேற்றனர் ., மக்கள் கூட்டம் பெருகுதுNidur Mohamed Nizar

அல்லாஹ்வின் மாபெரும் கருணை



ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் - Salathullah Salamullaah

ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்
அலா தாஹா ரஸூலில்லாஹ்
ஸலாதுல்லாஹ் ஸலாமுல்லாஹ்
அலா யஸீன் ஹபீபில்லாஹ்

இணையப் பேரரசு!


உலகம் பிறந்தது உனக்காக

அஸ்ஸலாமு  அலைக்கும்,
புதியதலைமுறை  கல்வி இதழில் நான் எழுதிய உலகம் பிறந்தது உனக்காக என்ற தன்னம்பிக்கை தொடர் தினத்தந்தி பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளிவந்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். வருகின்ற 12-01-2019 அன்று சென்னை நந்தனம் புத்தக கண்காட்சியில் தினத்தந்தி ஸ்டால் எண்.60 மற்றும் 61 யில் மாணவர்கள் மற்றும்  இளைஞர்களுடன் நேரில் கலந்துரையாடி கையொப்பம் இட்டு தர உள்ளேன். இந்த செய்தியை தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நூல் பற்றிய விபரம் :
ஆசிரியர்      : பேராசிரியர்.அ.முகமது அப்துல் காதர்
பக்கங்கள்     : 96
விலை          : 75
வெளியிடு    : தினத்தந்தி பதிப்பகம்
அறிமுகம்     : இன்றைய இளைய மாணவர்களுக்கு இருக்கக்கூடிய தன்னம்பிக்கை குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சி தான் இந்த நூல். தோல்வி கற்று தரும் பாடம் மிக சிறந்த பாடம். அந்த படத்தை நீங்கள் சிறப்பாக கற்று கொண்டால் உங்கள் வாழ்வில் எப்போதும் வெற்றி தான். தோல்வியை ஏற்று கொண்டு தோல்வியின் பாடத்தை கற்றுக்கொண்டு வறுமையிலும் சாதித்தவர்களையும், கற்றல் குறைபாட்டிலும் சாதித்தவர்களையும், மரணத்திற்கு சவால் விட்டு வாழ்க்கையில் சாதித்தவர்களையும் பற்றி எழுதி உள்ளேன். இந்த நூல் இளைஞர்களுக்கு மிகவும் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு,
பேராசிரியர்.முனைவர்.அ.முகமது அப்துல் காதர்
முதல்வர், செண்டு பொறியியல் கல்லூரி,
மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
அலைபேசி : 9445398096, 9444238324
மின்னஞ்சல் : dean@ccet.org.in


From: Dean CCET <dean@ccet.org.in>
from:Muduvai Hidayathmuduvaihidayath@gmail.com

கொடுக்கப்பட்ட SPACEல் மகிழ்வாக இருப்போம்.

Brilliant read

👌👌👌👍👍👍👌👌👌

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.

அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது.

காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!

Thursday, January 10, 2019

Six effective ways to overcome sadness

அவள் பறவைகள் வாழும் உடல்


அவளது மூக்கில் முளைத்திருந்த வால்வெள்ளியை
என்னசெய்வதென்று மணிக்கணக்காகப் பார்த்து நின்றான்

முக்காடிட்ட மொகலாய ஓவியம்.........
தலை தாழ்ந்து..... சரிந்து......... உட்காந்திருந்தாள்

அவள் தோள்களில் இருந்த ராஜாளி
அவன் அரவம் கேட்டதும்
முதலில் அதிர்ந்து பறந்து சென்றது

குருத்து நாடியைத் திருப்பி
உதடுகளை முதல் முத்தமிட்டபொழுது
கணக்கற்ற புறாக்கள் பயந்து
ஒரே சமயத்தில் எழும்பிப் பறந்தன
தாமதித்து....... இன்னும் இரைதேடி
இன்னோர் இடத்தில் வந்திறங்கின

"கேட்பதெல்லாம் பாதியை..... அல்லது பாதியின் அரைப்பகுதியை

Musthafa Qasimiமுஸ்தஃபா_காசிமி


"கேட்பதெல்லாம் பாதியை.....
அல்லது
பாதியின் அரைப்பகுதியை

அரைப் பகுதியின் மீதியை....
மீதியில் எஞ்சுவதை...
அல்லது
தீர்ந்துபோனதின் தடத்தை...
இருந்தது என்பதன் நினைவை."

கவிஞர் Anar Issath Rehana எழுதிய இக்கவிதையை வாசித்தபோது
எனக்கு பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வேஷின் கவிதை நினைவுக்கு வந்தது.

"என் ஒரு பகுதி என்னிடம் உள்ளது.

என் மறு பகுதி உன்னிடம் உள்ளது.

என் ஒரு பகுதி என் மறு பகுதிக்கு ஆசைப்படுகிறது.

தரமாட்டாயா?." என்கிறார்.

"உன் ஆன்மாவின் சுவர்

Musthafa Qasimi


இ டிந்து விழப்போவது கண்டு
அதைத் தூக்கி நிறுத்தி விட்டு
அதற்கான கூலி குறித்து
சிந்திக்கவும் செய்யாதவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்." என்ற ரூமி (ரஹ்) அவர்கள் கவிதை பின்வரும் இறை வசனத்தின் கருவிலிருந்து தோன்றியது:

فَوَجَدَا فِيْهَا جِدَارًا يُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّ فَاَقَامَهٗ‌ قَالَ لَوْ شِئْتَ لَـتَّخَذْتَ عَلَيْهِ اَجْرًا‏
"அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, (ஃகிழ்ர் ஆகிய) அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்." (அல்குர்ஆன் : 18:77)
..

ஒளரங்கசீப் பற்றி கவிகோ அப்துர் ரஹ்மான் அவர்கள்..

*நோய்கள் என்றால் என்ன?

.

நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன..

இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக
மாறி விடும்....மேலும் நாம்
ஓய்விலிருந்தால் ...இயங்கு
சக்தியின் அளவான 32%...நோய்
எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்!

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
.
இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,
சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.

😃Proud of OUR ISRO, Now you can listen to world wide radio even without headphones!!!

Now you can listen to world wide radio even without headphones!!! This is from Indian Space Research Organisation (ISRO) when you click the link, you can see the globe rotating. There are green dot on which you simply touch you can start listening to live radio from that place. Try your local radio!!
Simply Amazing!!! 😃Proud of OUR ISRO,
Keep Sharing..

http://radio.garden/live

Wednesday, January 9, 2019

ஆசை கொண்டேன்

ஆசை கொண்டேன்
ஆர்வமாக ஆய்வு செய்தேன்
ஆய்வில் தெளிவு கொண்டேன்

கண்காணித்தேன்
முயன்றேன்
முயன்றதில் தளர்ச்சி அடையவில்லை
பிரச்சனை வரும்போது சமாளித்தேன்
சமாளிக்க சிறிது ஓய்வும் தேவையானது
ஓய்வு உத்வேகத்தை தந்தது

இறையியல் 'உலமா' பட்டம்

இறையியல் 'உலமா' பட்டம் பெற்றதால் மட்டும் மதிக்கப் படுவது கிடையாது

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இறையியல் 'உலமா' பட்டம் (இஸ்லாம் பற்றிய அறிவு) பெற்ற அறிஞர்கள்.

இஸ்லாமிய கல்வி போதிக்கும் பாடசாலைகளில் (மதரஸாக்களில்) மார்க்க அறிவு போதிக்கும் போது மார்க்க முறைப்படி வாழவும் பயிற்சிக்கப் படுகின்றது . சில ஆண்டுகள் கற்ற பின்பு போதிய அளவு மார்க்க அறிவு பெற்ற பின்பு தேர்வு நடத்தி அதில் மதிப்பெண்கள் பெற்ற பின்பு அந்த உலமா' பட்டம் (சனது) கொடுக்கின்றார்கள்.

இனம் இயக்கம் அரசியல்

இனம்
இயக்கம்
அரசியல்
ஒன்றோடொன்று இடிபட்டு இடிந்துப் போகிறது

சமயம்
மார்க்கம்
ஞானம்
ஆன்மீகம்
ஒன்றோடொன்று இணைந்து இடிந்துப் போகிறது

தத்துவம்
அறிவியல்
வின்ஞானம்
ஒன்றுக்கொன்று இடம் கொடுத்து சிந்திக்க வைக்கிறது

நாட்டின் நிலை அறிய வேண்டும்

நாட்டை வெல்ல வேண்டும்
நாட்டின் நிலை அறிய வேண்டும்

மறைமுக ஆய்வு அந்த நாட்டின் நிலை அறிய ஒரு தூதர் அனுப்பப் பட்டார் மன்னரால்
இப்பொழுது நிலமை நமக்கு சாதகமாக இல்லை .

ஒருவர் அம்பை வைத்துக்கொண்டு அழுது கொடிருந்தார் .ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு 'நான் விட்ட அம்பு நான் வைத்த குறியிலிருந்து தவறி விட்டது . என் நாட்டிற்குள் எதிரிகள் புகுந்தால் நான் வைத்த ஒரு அம்பின் குறி கூட தவறக் கூடாது' என்றார்.
சிறுவர்கள் கூட அம்பு விடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தூதர் சொன்னார்.இவைகள் அவர்களது தீரத்தையும் ,வீரத்தையும் காட்டி நிற்கின்றது .அவ்வித நோக்கம் கொண்டவர்களை தோல்வியடையச் செய்வது இயலாது என்றார்.

நேசத்திற்கு உயிரூட்டும் 'முக்கியத்துவம்'



"நேசத்தின் மதிப்பறியாத
புறக்கணிப்பின் முட்களைச்சூடிய நீ
கோபத்தின் ஏக்கமுணராத
கவனமின்மையின் காகிதக் கப்பலில்
இன்னும் எத்தனை காலம்
பயணிக்கத் துணிவாய் ?" என்று கேட்டார்
கவிஞர் நிஷா மன்சூர்

நேசத்திற்கு உயிரூட்டும் 'முக்கியத்துவம்' குறித்த என் பதிவுகளைத் திரும்பிப் பார்த்தேன். கவனத்திற்குறிய சேதிகள் உள்ளன...
..
"நேசமென்பது
முக்கியத்துவம் வாய்ந்தது!" என்பது அரபுப் பழமொழி.

ஆனால் நேசம் பிழைக்க வேண்டுமானால் நேசிப்பவருக்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம்.

"நான்கு அம்சங்களால் மற்றவர் உள்ளங்களை சம்பாதிக்கலாம்:

1) மணமான பேச்சு

2) அழகிய முக்கியத்துவம்

3) உண்மையான சேர்ந்திருத்தல்

4) அழகிய நடைமுறை

அனைவருக்கும், இது உதவியாக இருக்கலாம்

Mohamed Rafee  நாகூர் ரூமி:
ஷெய்க் உதுமான் என்று ஒரு இறைநேசர் இருந்தார். அவர் காய்கறிகளை வைத்து ஒருவித சூப் மாதிரி செய்து விற்று வந்தார். அவரிடம் வருபவர்கள் சில சமயங்களில் செல்லாக் காசுகளையும் கொடுப்பார்கள். அது செல்லாக்காசு என்று தெரிந்தும் அவர் அதைப் பெற்றுக்கொண்டு சூப் கொடுப்பார். அவர் செல்லாக் காசைப் பரிசோதிப்பதில்லை என்ற செய்தி பரவி பலர் அவரிடம் செல்லாக்காசைக் கொடுத்து சூப் பெற்றுச் சென்றனர். நாளாக நாளாக அவரிடம் செல்லாக்காசுகள் அதிகமாக சேர்ந்துவிட்டன. அவருடைய இறுதிக்கணம் நெருங்கியது. உயிர் பிரியப்போகிறது என்று உணர்ந்துகொண்டவுடன் அவர் இறைவனிடம் இப்படிப் பிரார்த்தனை செய்தார்:

anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : சுய முயற்சி /சுய மீட்பு

anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : சுய முயற்சி /சுய மீட்பு: சுய மீட்புக்காக முன்முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மாற்றம் ஒரு வினைதான். மாற்றத்தை நீங்கள் பார்க்க வேண்டும் இன்னும், மனிதனுக்கு அவன் முயல்...