Monday, September 24, 2018

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்....அறிந்து கொள்வோம். பி.எஸ்.முபாரக் I F S

Colachel Azheem

  பி.எஸ்.முபாரக் I F S
குமரிமாவட்ட முஸ்லிம் சமூகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி IFS அந்தஸ்துடன் இந்தியஅரசின் வெளியுறவுத துறையில் பணிபுரியும் ஒரே நபர் கோட்டாறு ரசாக் ரோட்டில் வசிக்கும் எம் கே எஸ் பாவா சாகிப் மகன் பி.எஸ்.முபாரக் அவர்கள் மட்டுமே..

1973 ல் பிறந்த முபாரக் அவர்கள் சென்னை அசோக்நகர் ஜவஹர் வித்யாலயாவில் பள்ளிகல்வியும், சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டமும் பெற்று கடலூர்மாவட்டம் பரங்கிபேட்டையில் Centre for Advance Studies லிருந்து மரைன் பயாலஜி முதுகலை பட்டம் பெற்று அங்கேயே அடுத்த இரண்டாண்டுகள் மரைன் பயாலஜியில் ஜீனியர் ரிசர்ச் பெலோஷிப் ஆக பயின்று வந்தார்..



பின்னர் டெல்லி Hamdard Study Circle ல் சேர்ந்து பயின்று சிவில் சர்வீஸ் தேர்வெழுதி 2001 ம் ஆண்டு IFS அந்தஸ்து பெற்று இந்திய அரசின் வெளியுறவு துறையில் பணியை துவங்கினார்...

2003 -2006 வரை எகிப்து கெய்ரோ இந்திய தூதரகத்தில் பணியாற்றிய முபாரக் அங்குள்ள Maulana Azad Centre for Indian Culture ல் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்..
கெய்ரோவில் பணியாற்றி வரும்போது அங்குள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பயின்று அரபு மொழியில் தேர்ச்சியும் பெற்றவர்..

பின்னர் 2006 - 2008 வரை துபாய் இந்திய தூதரகத்திலும் , 2008 - 2012 வரை ஜித்தா இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய முபாரக் அவர்களுக்கு 2012 - 14 காலகட்டத்தில் பாலஸ்தீன் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய காலகட்டங்கள் மறக்கமுடியாத நாட்கள்.
ரமல்லா தூதரகத்தில் பணி புரிந்த நாட்களில் மஸ்ஜித் இபுறாகீம் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸாவிலும் நிறைய முறை சென்றுவர வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகின்றார்..
பாலஸ்தீனத்திலிருந்து மீண்டும் சவூதிஅரேபியாவுக்கு இடமாறுதலில் புறப்படும் போது பாலஸ்தீன் அதிபராக இருந்த மஹமூத் அப்பாஸ் இவருக்கு நினைவு பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தார்..

இரண்டாவது முறையாக ஜித்தா இந்திய தூதரகத்தில் 2014 - 16 ல் பணியாற்றிய காலத்தில் இந்தியர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளும் முபாரக் அவர்கள் மூலம் கிடைத்தது..
இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை சென்றவர்களுக்கு மிகசிறந்த வழிகாட்டியாக, Indian Pilgrim Welfare Forum மூலம் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட முபாரக் அவர்கள் 2015 ல் மினாவில் ஏற்பட்ட விபத்து சமயத்தில் தகவல் பரிமாற்றத்தை துரிதமாக கையாண்டு பாராட்டையும் பெற்றவர்...
இவர் பணியிலிருந்த காலத்தில் ஜித்தா இந்திய தூதரகத்தில் சாமானியர்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கும் விதத்தில் பணியாற்றியவர் சவூதியில் மரணிப்பவர்கள் உடலை விரைந்து தாய்நாட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளையும் எளிதாக்கி பலருக்கும் உதவிய நற்பண்பாளர்...

இவரது வெளியுறவுதுறை பணியில் மற்றொரு புகழத்தக்க சேவையாக வெளிநாட்டு இந்தியர்கள் குறிப்பிடுவது வணிக மேம்பாடு..
Saudi India Business Network (SIBN) மூலம் இந்தியர்களின் வர்த்தக தொடர்பு மேம்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட சிறப்பான வெளியுறவுதுறை அதிகாரி...

தற்போது டெல்லியில் வெளியுறவுதுறை அமைச்சகத்தின் தெற்கு பிராந்திய இயக்குனராக பணியாற்றி வரும் முபாரக் அவர்கள் நிறையபேர் இளைஞர்கள் சிவில்சர்வீஸ் தேர்வு எழுதுவதன் மூலம் குடிமைப்பணிகளில் சேர வாய்ப்புள்ளது என்று தனது அவாவையும் தெரிவித்தார்....

இந்த மாதம் அவர் "கௌதமாலா" நாட்டிற்கு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Colachel Azheem
அறிய வேண்டிய
அரிய மனிதர்கள் ...
தொடரில் பதிவு செய்த
இந்திய வெளியுறவுதுறையில் பணிபுரியும் கோட்டாறு மண்ணின் மைந்தன்
B S.Mubarak I F S
தொடர்புடைய ஒரு காணொளி..
Mohamed Kowdu மாமா முகநூல் பக்கத்திலிருந்து பகிர்ந்தது...
Colachel Azheem

No comments: