Tuesday, September 11, 2018

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்... 50. விஞ்ஞானி எஸ்.மாஹீன்

அறிய வேண்டிய
அரிய மனிதர்கள்...

50. விஞ்ஞானி எஸ்.மாஹீன்
********************************
குமரிமாவட்ட முஸ்லிம் சமூகத்திலிருந்து வான்கோளவியலில் சத்தமில்லாமல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் எஸ்.மாஹீன் அவர்கள்..

இரவிபுதூர்கடையில் ஷாகுல்ஹமீது - ஐஷா தம்பதிகளுக்கு மகனாக இந்திய தேசத்தின் இரண்டாவது சுதந்திர தினத்தில் 15.8.48 ல் பிறந்த மாஹீன் அவர்கள் ஆரம்ப கல்வியை இரவிபுதூர்கடை அரசு துவக்கப்பள்ளியிலும், உயர்நிலை கல்வியை காட்டாத்துறை அரசு பள்ளியிலும் பயின்றவர்..


நாகர்கோவிலில் இந்து கல்லூரியில் இளங்கலை கணிதமும், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை கணிதமும் தேர்ச்சிபெற்று சண்டிகாரில் உள்ள பஞ்சாப் பல்கலைகழகத்தில் Astrophysics ல் ஆய்வு மாணவராக சேர்ந்தார்..
"RS Canum Vanticorum type Variable Stars" எனும் தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து டாக்டர்பட்டம் பெற்றவர்..

1972 ம் ஆண்டு Research Assistant ஆக பெங்களூர் Indian Institute of Astrophysics ல் பணியில் சேர்ந்தவர் பணிக்காலம் முழுவதும் தந்தையின் பெயரோடு Shahul Mohin என்று அறிவியல் உலகில் அறியப்பட்டு வான்கோளவியலில் அளப்பெரிய சேவைகள் புரிந்தவர் 2008 ம் ஆண்டில் Scientist ஆக பணி ஓய்வு பெற்றார்..

தனது பணிக்காலத்தில் ஆய்வுமுறை பயணமாக நியூசிலாந்து காண்டர்பரி பல்கலைகழகம், ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைகழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ட்ராம்லோ கோளரங்கம் சென்று வந்த ஷாகுல் மாஹீன் அவர்கள் சர்வதேச அஸ்ட்ராணமிக்கல் யூனியனில் உறுப்பினராக உள்ளார்.

சக விஞ்ஞானிகளோடு இணைந்து வான்கோளவியலின் பல்வேறு பரிமாணங்களான
Photometry, Ring systems of Uranus, Optical Emissions, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுமார் முப்பது ஆராய்ச்சி நூல்கள் வெளிவர காரணமாகவும் இருந்துள்ளது சாகுல் மாஹீன் அவர்களின் சிறப்புகளில் மேன்மையானது....

Colachel Azheem

(தற்போது நியூ ஜெர்சியில் ஓய்வில் உள்ள ஷாகுல் மாஹீன் அவர்களை தொடர்புகொள்ள வைத்து பதிவுக்கு உதவியவர் சகோ Kaja Nazeem அவர்கள்)

No comments: