Saturday, September 15, 2018

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் அனைவரையும் வியக்கவைக்கும்

அண்ணா காஞ்சி சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக நின்றார். ஆனால் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். அவர் அண்ணாவிடம் வந்து, ‘I am sorry.’ என்றாராம்.

அண்ணா, ‘I am not a lorry to carry your sorry!’ என்றாராம்!

------------------------
அண்ணவிடம் ஒருவர்:

Give us a defintion of Union

என்று கேட்டாரம்.

அண்ணா அதற்கு:

Union is Oninion.

என்று பதில் சொன்னாராம்.

====================

அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டசபையில் நடந்த சூடான விவாத்த்தில், எதிர்கட்சியைச் சேர்ந்தவர், கோபமாக அண்ணாவைப் பார்த்து:

‘Your days are numbered’

என்றார். அதாவது, நீங்கள் சீக்கிரம் ஆட்சியை விட்டு போகும் காலம் எண்ணப்படுகிறது என்றார்.

அண்ணா அதற்கு:

‘But our steps are counted’

என்றார். அதாவது எங்களது சாதனைகள் கவனிக்க்ப்படுகின்றன என்றார்.
-----------------------------------
அண்ணாமலைப்பல்கலைக்கழகம் ஒரு காங்கிர்ஸ் கோட்டை. அங்கு அண்ணா மாணவர் மன்றத்தில் உரையாற்ற்ச்சென்றார்.

காங்கிர்ஸ் மாணவர்கள் அண்ணாவுக்கு ஆங்கிலம் வராது. அவரை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து, ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என்றனர்.

‘என்ன தலைப்பில்?’ என்று கேட்டார்.

’தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்றனர்.

அப்போது அண்ணா குழம்பி விடுவார். அல்லது தனக்கு இலகுவான ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் என நினைத்தனர்.

அண்ணா மேடையை நோக்கினார். பின்னர் கூட்டத்தை நோக்கினார். அப்பொது முன்வரிசையில் இருந்த ஒருவர் தீக்குட்சியக்கொழுத்தி, தன் சிகரெட்டைப் பற்ற வைத்தார். இதைக்கவனித்த அண்ணா:

‘Yes, SPARK is my topic today’ என்று தொடங்கி நெருப்பு என்ற தலைப்பில் ஆங்கில உரையாற்றி அமர்ந்தார். காங்கிரஸ் மாணாவர்கள் கரகோஷம் எழுப்பித்தானே ஆகவேண்டும்?

(இந்த் உரை அண்ணமலைப்பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் படிக்க)
---------------------

தலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் அனைவரையும் வியக்கவைக்கும் .
அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு இருந்தது.
சென்னை லயோலா கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்வு.
அன்றைய காலக்கட்டங்களில் கல்லூரிகளில் அரசியல் பேச அனுமதிக்கப்படுவதில்லை.
சென்னை கிருஸ்துவக் கல்லூரி மாணவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை மேடையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.
எங்களுக்கும் அந்த விழாவிற்கு அழைப்பு வந்திருந்தது, நாங்களும் சென்றோம்.
“எந்த தலைப்பில் பேச வேண்டும்? என்று அறிஞர் அண்ணா அவர்கள் வினவ,
அதற்கு மாணவர்கள், “தலைப்பு எதுவும் இல்லை. உங்கள் விருப்பமான தலைப்பில் நீங்கள் பேசலாம் என்றார்கள்.
மேடை ஏறிய அண்ணா அவர்கள் தலைப்பு இல்லை என்பதால் “தலைப்பு இல்லை” என்பதையே தலைப்பாக வைத்து பேசுகிறேன்” என்று கூறி ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார்.
மாணவர்களின் மகிழ்வும், கைதட்டலும் அரங்கு முழுதும்
எதிரொலித்தது.
S.E.A.Mohamed Ali
முகம்மது அலி
அண்ணாவை அழைத்து சென்னை சட்டக் கல்லூரியில் த்மிழ் சங்கத்தில் பேச வைத்த எனது அண்ணன் முகம்மது சயீது அவர்கள் (இடது பக்கம் அமர்ந்துள்ளார் ) அண்ணாவின் படத்துடன் உள்ளார் என்பதில் மகிழ்வுதான் .
இந்த படத்தில் அண்ணாவின் பின்பு சிராஜுல் மில்லத் ஆ.க.அ. அப்துல் சமது
.அவர்கள்

No comments: