Tuesday, September 25, 2018

ஒருவருடைய செழுமைக்கும், வருமைக்கும் அவருடைய தோற்றமே ஒரு காரணம்.


ஒரு சிற்ப்பி தனது சிற்ப்பத்தை அவர் செதுக்கும் விதம் அந்த சிற்பம் உருவாகும். அதுபோலத்தான் நீங்கள், உங்கள் உடல் தோற்றம் உங்கள் எண்ணத்தின் ஆதிக்கத்தின் உருவாக்கமாகும்.

நீங்கள் தற்போது மிக கஷ்டமாக, நோயாக, உங்களை யாரும் மரியாதை தறாத நிலை, வேலையில் இல்லை, அதனால் ஏழ்மையாக இருக்கலாம் ஆனால் உங்கள் எண்ணங்கள் மட்டுமே ஏழ்மையாக இருக்கக்கூடாது உங்கள் உடல் தோற்றமும் ஏழ்மையாக இருக்கூடாது.  ஏனென்றால் உங்கள் எண்ணங்கள் ஏழ்மையும் வறுமையும் குடிக்கொண்டதாக இருந்தால் உங்கள் தோற்றத்தையும் உங்கள் சுற்றுச்சூழலையும் உங்கள் எண்ணங்கள் ஏழ்மை நிலையை உருவாக்கிவிடும். பிறகு பாருங்கள் உங்கள் செயல் தோற்றம் நீங்கள் அணியும் ஆடைக்கூட உங்கள் வறுமை நிலையை காட்டிடும்.


நான் இப்படித்தான். இதிலென்ன இருக்கிறது என்னுடைய தோற்றம் எல்லாம் எனது வாழ்க்கையை உயர்த்தாது எனது உழைப்பு மட்டுமே என்னை உயர்த்தும் என்று நீங்கள் கூறுவது எனக்குத் தெரிகிறது ஆனால் உழைக்கிறவர்கள் அனைவரும் செல்வந்தர்களாக, நோயிலிருந்து ஆரோக்கியமானவர்களாக ஆகுவதில்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

இன்றைய உலகம் ரிச் (பணக்கார) உலகம். தற்போதைய உலகம் உங்கள் உழைப்பை மட்டுமே பார்ப்பதில்லை உங்கள் தோற்றத்தையும் உங்கள் செயலையும் கவனிக்கிறது. அது கேட்கிற தகுதி உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களை அதனுடன் அழைத்து செல்லும். இல்லையென்றால் உங்கள் உழைப்புக்கான தினக் கூலியாக 500 ரூபாய் அல்லது 1000 ரூபாயே தந்து நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை வைத்து விடும். ஒரு நிறுவனம் உங்களை இன்டரியூ எடுக்கும்போது உங்கள் திறமைகளை மட்டும் பார்ப்பது அல்ல. உங்கள் பர்சனாலிட்டியும் பார்க்கும் ஏனென்றால் உங்கள் எண்ணங்கள் செழுமையான இருந்தால் உங்கள் உடல் தோற்றமும் வளர்ச்சியும் செழுமையானதாக (பர்சனாலிட்டி) இருக்கும். உங்கள் எண்ணங்கள் ஏழ்மையும் வறுமை நிலையில் இருந்தால் உங்கள் உடல் தோற்றமும் வளர்ச்சியும் ஏழ்மையானதாக இருக்கும்.

உங்கள் எண்ணங்களை மாற்றி அமைப்பது மூலம் உங்கள் உலகை ரிச் பணக்கார உலகமாக மாற்றங்கள்.

لَا يَسْتَوِىْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَـنَّةِ‌ اَصْحٰبُ الْجَـنَّةِ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சுவனவாசிகள் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்.)
(அல்குர்ஆன் : 59:20)

        மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
          மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments: