Friday, September 28, 2018

நல்ல நேரத்தில் மனுசன் வந்து ....

ஒருவர் தனது நன்பர் வீட்டிற்கு நன்பரை சந்திக்க சென்றார். அவருடைய நன்பர் அவரை மிக நல்ல முறையில் நடந்து உணவுகள் கொடுத்து உபசரித்தார். வந்த நன்பர் அவரிடம் விடைப்பெற்று செல்லும்போது தனது கைத் துண்டை நன்பர் வீட்டில் மறதியாக விட்டு விட்டு சென்று விட்டார் சிறுது தூரம் சென்ற பிறகு ஞாபகம் வந்தது ஆஹா கைத் துண்டை வைத்து விடும் வந்து விட்டோமே என்று. திரும்பி சென்று கைத் துண்டை எடுக்க வந்த போது அந்த வீட்டில் அவரின் நன்பர் தனது மனைவி இடம் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டு விட்டார் நன்பர்.

தனது மனைவியிடம் நல்ல நேரத்தில் மனுசன் வந்து துளைத்துட்டான் எனது வேலையெல்லாம் வீணாக போய்விட்டது இவரையெல்லாம் யார் கூப்பிட்டதது என்ற பேச்சை வாசலில் நின்று கேட்டுவிட்ட அந்த நன்பருக்கு அவர் உபசரித்த உபசரனை உணவுகள் அத்தனையும் விஷமாக மாறியது.



இந்த கதையில் இன்னொரு மாற்றம் இதைப்போலவே நன்பரை பார்க்கச் சென்ற போது அந்த நன்பரால் வந்த நன்பரை சரியாக உச்சரிக்க வசதி இல்லை ஏதோ அவரால் முடிந்த அளவுக்கு உபசரித்தார்; அதைப் போல தனது கைத் துண்டை விட்டு விட்டு சென்ற அவர் அதை எடுக்க வரும்போது வாசலில் அவர் நின்றுக் கேட்டுவிட்டார். நன்பர் தனது மனைவியிடம் இப்படி பேசிக்கொண்டு இருந்தார் நல்ல மனிதர் வந்தார் அவருக்க நம்மால் நல்ல உணவுகள் கொடுக்க முடியவில்லையே என்று வருந்தி பேசியதைக் கேட்ட வந்த நன்பருக்கு அந்த பேச்சு மிகச் சாதாரணமான உணவு மிகப் பெரிய விலை உயர்ந்த உயர்தரமான உணவாக அவருக்கு ஏற்பட்டது.

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 3:92)

நீங்கள் இவ்வுலகிற்கு எதை அனுப்பி வைக்கிறீகளோ அது மிகப் ஆற்றல் பெற்றதாக அது உங்களிடமே திரும்பி வரும். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்ற விதையில் இருந்துதான் உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகள் உருவாகின்றன. உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல விளைவுகள் தவறான விளைவுகள் உண்டு ஆனால் அதை சொல்லியோ கேட்டோ தெரிய முடியாது வாழ்க்கையில் அனுபவபூர்வமாக நிகழும்போது தான் தெரிய வரும். தீ சுடும் என்று சொல்லியோ கேட்டோத் தெரியாது தீ படும்போது தான் அனுபவம் ஏற்படும் தெரியும்.

மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி

No comments: