Thursday, September 13, 2018

திக்ரு (தியானம்)

உங்கள் திக்ரு (தியானம்) செய்வதற்கு மிக முக்கியமான இரண்டு விஷயங்களை பேணவேண்டும். ஒன்று உங்கள் உடல் அசையாமல் இருக்க வேண்டும். இரண்டாவது நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும்.

உங்கள் உடல் எந்த அளவுக்கு அசைகின்றதோ அந்த அளவிற்கு உங்கள் மனம் அசையும். அப்போது உங்கள் மனம் ஓர் நிலையில் இருக்காது அப்படி மனம் ஓர் நிலையில் இருக்காதப் போது உங்களால் முழுமையாக திக்ரில் கவனம் செலுத்த முடியாது.  உங்கள் உடலை அசையாமல் வைத்திருந்தால். மனம் அசையாமல் அமைதியாக, மிக மௌனமாக இருக்கும்.


நீங்கள் பார்க்கலாம் சிலர்கள் கையில் தஸ்பீஹ் வைத்து நடந்த நிலையில், பிறரிடம் பேசிய நிலையில், தூக்கிய நிலையில், டிவி பார்த்த நிலையில், இன்னும் அல்லாஹ்வுடைய இஸ்மை வேகமாக ஓதி தஸ்பீஹை வேகமாக ஓட்டுவார்கள். இதுவெல்லாம் இறை திக்ரு ஓதுவதில் பொறுமை இல்லா நிலை.

நீங்கள் அல்லாஹ்வுடைய இஸ்மை ஓதும் போது உடல் அசையாமல், அமைதியாக, உடலை இருக்கமாக வைத்து இருக்காமல், உடலை மிக தளர்வாக வைத்துக் கொண்டு  அமைதியாக ஒரு இஸ்முக்கும் அடுத்து ஓதக் கூடிய இஸ்முக்கும் பொறுமையும் இடைவெளியும் இருக்க வேண்டும்.

இப்படி நீங்கள் ஓதும் போது உங்களிடமிருந்து இஸ்மின் ஓசை மிகச் சரியாக வெளிவரும். இதற்கு மாற்றமாக வேகமாக ஓதும் போது இஸ்மின் உச்சரிப்பு ஒலி தவறாக மாறி வெளிப்படும்.
அதனால்தான் திக்ரு (தியானம்) செய்யும் உங்களுக்கு உடல் அசைவுகள் இல்லாமலும், பொறுமையும் இருக்க வேண்டும்.

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி   அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:153)

        மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
          மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments: