Wednesday, April 18, 2018

ஒருபுறமும் மறுபுறமும் ....!


✓வேலை ஒருபுறம்
விருப்பு மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
வாழ்வின் ஓட்டம் ...!

✓தேவை ஒருபுறம்
ஆசை மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
அல்லாடும் மனிதன் ...!

✓பாவம் ஒருபுறம்
பழி மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
உண்மையின் திண்டாட்டம் ...!

✓சுகம் ஒருபுறம்
சோகம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
சுழலும் வாழ்க்கை ...!

✓உழைப்பு ஒருபுறம்
சுரண்டல் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
வளர்சியின் வேடிக்கை ...!

✓உறவு ஒருபுறம்
நட்பு மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
பாலமாய் மனிதம் ...!

✓வலிகள் ஒருபுறம்
வளர்ச்சி மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
முயற்சியின் முன்னேற்றம் ...!

✓நீ ஒருபுறம்
நான் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
நம்மின் ஈர்ப்பு ...!

✓மனிதம் ஒருபுறம்
புனிதம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
ஞானத்தின் தேடல் ...!

✓வீழ்வது ஒருபுறம்
எழுவது மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
தொடர்வது தன்னம்பிக்கை ...!

✓இடம் ஒருபுறம்
வலம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
நேர்மையின் நிலைப்பாடு ...!


Abdul Kader Sangam

No comments: