Monday, April 30, 2018

பேருண்மை கண்ட சூஃபி ஞானிகளான இறைநேசர்கள்

பொதுவாக நீங்கள் ஏதோவொரு பொருளை ஒருவருக்கு கொடுத்து பாருங்கள் அதை உடனே அதைப் பிரயோகித்து பார்த்து விடுவார். அதனால்தான் இயற்கையின் அளவற்ற ஆற்றல் எதுவும் பொது மனிதர்களிடம் கொடுப்பதில்லை.

பேருண்மை கண்ட சூஃபி ஞானிகளான இறைநேசர்கள் தம்மிடம் கொடுக்கப்பட்ட ( கராமத்) அத்தகு ஆற்றல் அதாவது இறைவனிடமிருந்தும், தங்கள் தவ வலிமையால் பிரபஞ்சத்திடமிருந்தும் பெற்ற ஆற்றல்களை பிறரிடம் அவர்கள் கூறுவதில்லை. தாங்களே கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் தம்மிடம் ஒரு பொருளைக் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்; அவர் அனுமதியின்றி அதனை நாம் உபயோக்ககூடாது. அவர் வந்தபின் அவரிடம் திரும்ப அதை ஒப்படைத்து விட வேண்டும். அல்லது அவர் அனுமதியுடன் அவர் சொன்ன வழியில் அப்பொருளை உபயோக்க வேண்டும் என்பதுதான்.



சூஃபி ஞானிகளான இறைநேசர்களைப் பொறுத்தவரை எதுவும் நமதல்ல என்பதுதான் அவர்களின் முடிவு. முதலில் உலகம் படைக்கப்பட்டது பின்னர் அதில் வாழ்வதற்கென்று நாம் படைக்கப்பட்டோம். நமக்கென்று ஒரு வாழ்வும் படைக்கப்பட்டது.

இறைவன் படைத்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நாம். அவன் படைத்த அனைத்தையும் அவன் விருப்பப்படி தான் செய்ய வேண்டும்.

அதனால்தான் சூஃபி ஞானிகளான இறைநேசர்கள் தேவை இன்றி அவர்கள் எந்த அற்புதமும் (கராமத்) எதுவும் செய்வதில்லை. எதுவும் சொல்வதும் இல்லை. அப்படிப்பட்டவர்களிடம் இறைவனை அபாரமான (கராமத்) ஆற்றலையும், மெய்ஞானத்தையும் வழங்கி இருக்கிறான். அதைக் கூட அவர்கள் தேவை இன்றி வெளிப்படுத்துவதில்லை.

இதுவே நாம் பார்க்கத் தவறிய சூஃபி ஞானிகளான இறைநேசர்களின் கராமத் என்னும் அற்புதமான ஆற்றலின் ரகசியம்.

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏ 
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:3)

         மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
                (தல்ஸமாத்)
         மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments: