Thursday, April 26, 2018

தேடல் ....! (பாகம் - 7)

விசுவாசத்தின் தேடலில்
வித்தியாசமானவற்றை நாடினேன்
அன்பைக்கொடுத்து பெறுவதில்
இருக்கக் கண்டேன்
*
நிரந்திரத்தின் தேடலில்
நிம்மதியை தொலைத்தேன்
மாற்றமொன்றே மாறாமல்
நிலைக்குமென கண்டேன்
*
யதார்த்தத்தின் தேடலில்
யவ்வனங்களில் திளைத்தேன்
மாற்றங்கள் மாறிமாறிவர
நிதர்சனத்தில் கண்டேன்

*
வாய்ப்புகளின் தேடலில்
வீதிவீதியாய் அலைந்தேன்
காலநேரம் விரையமாக
உழைக்கும் கரங்களில் கண்டேன்
*
புகழின் தேடலில்
புவியெங்கும் சுற்றினேன்
பிறர்க்கு பொல்லாங்கில்லா
நற்செயல்தரக் கண்டேன்
*
விடியலின் தேடலில்
விண்மீன்களை நோக்கினேன்
வேறெங்கும் காணவில்லை
விடாமுயற்சியில் கண்டேன்
*
விடைகளின் தேடலில்
வித்தகங்கள் கற்றேன்
வினாக்களின் விதைகளில்
வியாபித்திருக்கக் கண்டேன்

Abdul Kader Sangam

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails