Monday, April 9, 2018

உலகம் ஒவ்வொருவரின் திறமையை எதிர் நோக்கியே இருக்கிறது

இன்றைய உலகம் ஒவ்வொருவரின் திறமையை எதிர் நோக்கியே இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒவ்வொருவருடைய திறைமைக்கே முக்கியத்துவம் கொடுக்கும். அதிலும் நாவான்மைக்கு சிறந்த இடம்.

என்னிடத்தில் நன்பர் வந்தார்; என் மகன் ஸ்கூலில் பாடத்தை நன்றாக நடிப்பதாகவும் நல்ல ஒழுக்கமாக இருப்பதாகவும் மிஸ் கூறினார்கள். ஆனால் அவனால் படித்ததையோ கற்றுக் கொடுத்ததையோ அவனால் சொல்ல முடியவில்லையாம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறானா என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார் நன்பர்.


ஒருவரின் தெளிவான புரிந்துணர்வும் மிகத் தெளிவாக மற்றவருக்கு விளக்கும் கொடுப்பதும் மிக முக்கியம். சில குழைந்தைகள்,  பெரியவர்கள் அவர்கள் சாதாரண நேரத்தில் நல்ல பேசுவார்கள் ஆனால் சபையில் அவர்கள் பயந்து நடுங்குவார்கள். சில பெரியவர்கள், குழந்தைகளுக்கு வேகமாக பேச வராது. அவர்கள் மற்றவர்களிடம் பேசுவதையே ஒதிங்கி விடுவார்கள். இதற்கு காரணம்  திக்குவாய் .இந்த எதனால் ஏற்படுகிறது என்றால் பரம்பரை பரம்பரையாக வரும். உடல் பழகினம்,  வாழ்க்கையில் எப்போதோ மனதை பாதித்த சம்பவம் அதனால் ஏற்பட்ட பயம் தொடர்ந்து வரக்கூடிய வாழ்க்கையில் நிலைத்து அது ஆழ்மனதில் பதிந்து பிறகு அதனால் வந்து விளைவுகள் தாழ்வு மனப்பான்மை. இன்னும்  நிறையவே அதில் ஒன்றுதான் இந்த சபையில் பயம் ,திக்குவாய். இதை நீங்கள் சரி செய்யவில்லை என்றால் உங்களால் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியாது உங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வரவும் முடியாது. ஸ்கூலில் ஏற்பட்ட தோல்வி உங்கள் இன்டரிவு, பிஸ்னஸ், சமூக நல மேடை பேச்சு... இப்படி பல வழிகளில் உங்கள் முன்னேற்றம் தடைபடும்.

ஏனென்றால் மனபயம், திக்குவாய்  சரியாக வேண்டுமென்றால் அவர் தன்நிலை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறகு தனக்குத்தானே பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கும் சரிவர வில்லையென்றால் நான் ஒரு ஆன்மீக மருத்துவம் சொல்லட்டுமா ? செய்வீர்களா?.

நீங்கள் அதிகமாக குர்ஆன் ஓத வேண்டும் அதுவும் சளைக்காமல் ஓத வேண்டும் பிறகு கீழே வரும் இறை வசனத்தை உற்று நோக்குங்கள் இறைவனிடம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனக்கு மனதில்  பயம், திக்குவாய்  இருக்கிறது மன பயம் போக்கி, திக்குவாய்  குணமாக்கி நல்ல சகஜமாக பேச ஆற்றல் கொடு என்று கேட்டது உங்களுக்கு விளங்கும்.

இப்படியொரு சுழ்நிலையில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலும் ,மாலையிலும்,  ஒவ்வொரு ஃபரழான தொழுகைக்கு பிறகும் இந்த இறை வசனத்தை அதிகம் அதிகம் ஓதி வாருங்கள். மற்றவர்களை ஓதச் செய்து தண்ணீரில் ஊதி குடியுங்கள் குணம் கிடைக்கும்.

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ 
அதற்கு "என் இறைவனே! என் உள்ளத்தை(த்  திடப்படுத்தி) விரிவாக்கு;

وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ 
(நான் செய்ய வேண்டிய) காரியங்களை எனக்குச்  சுலபமாக்கி வை.

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ 
என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு;

يَفْقَهُوْا قَوْلِیْ ‏ 
என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படிச் செய்.
(அல்குர்ஆன் : 20:25,26,27,28)

        மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
                (தல்ஸமாத்)
         மேலப்பாளையம்
            திருநெல்வேலி


No comments: