Wednesday, January 31, 2018

காலம்..!!

காலம்..!!
நில்லாமல் ஓடுகிறது காலம்!
அதை விடாமல் தொடர்ந்து
துரத்துகிறது இந்த ஞாலம்!
காலம் நிறையவே கற்றுத் தருகிறது.
கருத்துக்களை அவ்வப்போது
மாற்றியும் விடுகிறது!
முன்னொரு காலத்தில்
சரியென்று கருதியது
பின்னொரு காலத்தில்
தவறென்று படுகிறது!

17 ஆண்டுக்கு முன் குடும்பத்தைவிட்டு பிரிந்த மகன் மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்த போது,

17 ஆண்டுக்கு முன் குடும்பத்தைவிட்டு பிரிந்த மகன் மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்த போது, அங்கு தன் பெயரில் மற்றொருவர் மகனாக வாழ்ந்து வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் வருவதைப் போல் சிறுவயதில் தொலைந்துபோய், இளம் வயதில் பெற்றோருடன் சேருவதைப் போல் இருந்தாலும், சில திருப்பங்களுடன், மிகவும் ருசிகரமாக உண்மையில் நடந்த சம்பவமாகும்.

இந்த சம்பவத்தை இந்த கதையில் வரும் குடும்பத்தாரின் உறவினர் ராம்பிரசாத் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் சிக்காகோ நகரில்வசித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:

Monday, January 29, 2018

கனடா TET தொலைக்காட்சி - செம்மல் மணவை முஸ்தபா அவர்களுடன் - ஒரு நேர்காணல்


TET தமிழ் மனமகிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு அன்பு வணக்கம்
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு
அரும்பணியாற்றிய தமிழ் அறிஞர்
அறிவியல் தமிழ்த் தந்தை
மணவை முஸ்தபா அவர்களின் அருமைப் புதல்வர்
டாக்டர் செம்மல் மணவை முஸ்தபா
இன்று நம்மோடு
தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறு அடிபாயும் என்றொரு பழமொழி உண்டு
அந்தப் பழமொழியை உண்மையாகும் தீவிரப் பணியில்
தன்னை அயராது ஈடுபடுத்திக்கொண்டு
ஒரு ராஜ தமிழ்த் தேனீயாய் அறிவியல் தமிழ் உலகில்
இவரின் ஆய்வுகள் வெகு சிறப்பாக போற்றப்படுகின்றன
ஒரு மருத்துவராய் இருந்தும்
மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராய் இருந்தும்
அதன் உயர் பதிவிகளையும் துச்சமென மறுதளித்துவிட்டு
தமிழே தன் மூச்சு என்று அறிவியல் தமிழ்த் தளத்தில்
வெற்றிக்கொடி நாட்டி வரும் செம்மல்
இவர் டாக்டர் டாக்டர்

திருவாங்கோடு/ திருவாங்கூர்/திருவிதாங்கோடு..!!

Noor Mohamed

எந்த ஒரு மொழியிலும் எந்த ஒரபெயர்ச்சொல்லும் முதலில் மக்களது பேச்சுவழக்கில் உருவானபிறகே எழுத்து வடிவம் பெறுவது வழக்கம்!சில அப்படியே எழுதப்படும்.சில சற்று மாறுதலுடன் திருந்திய வடிவம் பெறும்.உதாரணமாக கொல்லம் ,கொச்சி,கொட்டாரம்,கோட்டாறு போன்றவை அவ்வாறே உச்சரிக்கவும் எழுதவும்படுகிறது.திருவிதாங்கோடு என எழுதப்படுவதை நாங்கள் பேச்சு வழக்கில் திருவாங்கோடு என்றே சொலவோம்!மற்றவர்களும் அப்படியே சொல்வர்!சில விதிவிலக்குகள் இருக்கலாம்!

மிகப்பெரிய பள்ளிவாசல் ஹாசன் II காஸாபிளாங்கா The Amazing Grand Mosque of Hassan II Casablanca

உலகின் மிக அழகான பெரிய பள்ளிவாசல்:
மொராக்கோவின் மிகப்பெரிய மசூதி "ஹஸன் II மசூதி"
பள்ளிவாசலுக்கு தொழ் வருபவர்கள் மிகவும் அதிகம்
தொழுகை நடைபெறாத நேரத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால்
 மசூதியைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகமாக வருகின்றார்கள்
 சமாதானமாக வாழும் பல மதங்களை உள்ளடக்கிய ஒரு நாடு மொராக்கோ என்பதைக் பிரதிபலிதது காட்டுகிறது..இந்த மசூதி
இது உலகின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று
 இதன் பரப்பளவு 210 மீட்டர் (689 அடி) ஆகும். இந்த மசூதி அட்லாண்டிக் பெருங்கடலில் ஒன்பது ஹெக்டேர் பரப்பளவு நிலத்தின் பகுதியில் கட்டப்பட்டது.
ஜூலை 9, 1989 அன்று கிங் ஹாசன் II மன்னரால் கட்டப்பட்டது, ஆகஸ்ட் 30, 1993 முடிக்கப்பட்டது.
 இந்த மசூதி ஒரு கட்டிடக்கலையாகவும் உள்ளது.
இந்த மொரோக்கோ மசூதியைப் பற்றி வீடியோ ,

Thursday, January 25, 2018

சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம் கடவுள் வாழ்த்துப் படலம்


சீறாப்புராணம் முதலாவது காண்டம் – விலாதத்துக் காண்டம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்
1.01 கடவுள் வாழ்த்துப் படலம்
காப்பு
திருவுருவா யுணருருவா யறிவினொடு
தௌிவிடத்துஞ் சிந்தி யாத
அருவுருவா யுருவுருவா யகம்புறமுந்
தன்னியிலா வடங்கா வின்பத்
தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்
தோற்றுவிக்கு மொளியா யாவு
மருவுருவாய் வளர்காவன் முதலவனைப்
பணிந்துள்ளி வாழ்த்து வாமே.
கடவுள் வாழ்த்துப் படலம்
1 திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
மதித்திடாப் பேரொளி யனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல் லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. 1.1.1

செம்மொழியான தமிழ் மொழியாம்.... - அபு ஹாஷிமா

(அபு ஹாஷிமாஅவர்கள் திரு .நடராசன் அவர்களிடம் பரிசு பெறுகின்றார் )
தமிழை மதிக்கத் தெரியாத மடையர்கள்
தமிழை நீச மொழியென்று
சொல்லும் நீசர்கள்
தமிழின் அருமையை
செழுமையைத் தெரிந்து கொள்ள
இந்தக் கவிதை !
***
திசைகளுக்கும்
எல்லா மொழிகளுக்கும்
இறைவனே சொந்தக்காரன்!
அவனை அறிவதற்கும்
அழைப்பதற்கும்
சொல்லித் தருகின்ற
சத்தங்களின் சதைகளே
மொழிகள்!
கம்பனும் வள்ளுவனும்
கற்றுத்தந்த
கற்கண்டுத் தமிழைவிட
"கண்ணே" என முத்தமிட்ட
என் அன்னையின்
எச்சில் மொழி
தித்திப்பானது!
அதனால்தான் -
தமிழ்த் தாயைப் பாடுமுன்னால்
தாய்த் தமிழைப் பாடுகின்றேன்!
ஒரு பிள்ளைக்கொடியின்
உறவுக்காக
தொப்புள்கொடியில் - தன்
உயிரை ஊற்றி வளர்க்கும்
தளிர்க் கொடி
தாய்!

Wednesday, January 24, 2018

சீறாப்புராணம் ' - உமறுப்புலவர்

இறைவனை வாழ்த்தும் படலம்
பாடல் பாடுபவர் சீறா கலைஞர் குமரி அபூபக்கர் அவர்கள்

சீறாப்புராணம் சீரத்துன் நபியின் வரலாற்றை சொல்லக்கூடிய சீறாப்புராணத்தை பாடக் கூடிய உமறுப்புலவர் இறைவனை இப்படியும் சொல்கிறார்
சீறாப்புராணம் முதலாவது காண்டம் – விலாதத்துக் காண்டம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இறைவனை -கடவுள் வாழ்த்துப் படலம்

திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
மதித்திடாப் பேரொளி யனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல் லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. 1.1.1

-----------------------------------------

சீறாப் புராணத்தின் முதல் காண்டம் விலாதத்துக் காண்டம் ஆகும். விலாதத் என்ற அரபுச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருள். இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் முதலில் கூறப்படுகின்றன. பின்னர், கதீஜா நாயகியாரின் உறவு, அவர்கள் திருமணம், பாத்திமா பிறப்பு ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.
இது இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.
சீறாப்புராணம்
சீறாப் புராணம் = சீறாவைக் கூறும் புராணம். சீறத் என்பது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருக்கம் ஆகும். இதற்கு நபிகள் நாயகத்தின் வரலாறு என்று பொருள். சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள்..
சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார்.
உமறுப் புலவர் அக்காலத்தில் வாழ்ந்த படிக்காசுப் புலவர். நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.
இவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர். ஒருவர் சீதக்காதி, இன்னொருவர் பரங்கிப் பேட்டை அபுல்காசிம் மரைக்காயர்.
சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம் கடவுள் வாழ்த்துப் படலம்
: சீறாப்புராணம் முற்றோதல்

மேற்குச் சூரியன் ......அபு ஹாஷிமா

பாபா 
பழனி பாபா -
இமைகளின் மீது 
இருள் 
இறக்கி வைக்கப்பட்ட 
ஒரு சமுதாயத்தின்
விழி திறக்க வந்த 
வெளிச்ச விடியல் !
௦௦௦
கிழக்குகள் ஊட்டிய 
போலிக் கரிசன மதுவிலும் 
வடக்குகள் ஊற்றிய 
வஞ்சகக் கூழிலும்
காவிகள் கொட்டிய 
வெஞ்சினத் 
திராவக வெறியிலும் 
வாடிக் கிடந்த 
பிறைப் பயிர்களை 
தடை கிழித்து வந்து 
தலை நிமிர்த்தி வைத்த 
மேற்குச் சூரியன் !
௦௦௦

திருமண வாழ்த்துக்கள் ....



இனியவர்களே ....
உகாண்டா தேசத்தில் கோட்டாறு இடலாக்குடி ஊரிலிருந்து எண்பதில் கால்கள் பதித்த முதல் ஐவர்களில் ஒருவரும் ....
உகாண்டாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான முக்வானோ தொழிலகத்தின் சந்தை மற்றும் விற்பனை ஆகிய பெருந் துறைகளின் பொது மேலாளரும் ....
உகாசேவா அமைப்பின் ஆரம்ப கால ஆலோசகரும் மதிப்பிற்குரிய ஆஸ்தான மூத்த உறுப்பினரும் ....
முகநூல் பெருங் கடலில் தமது சிந்தையின் சொல்லெடுத்து சிந்தனையில் வில்லெடுத்து கவிதையெனும் அம்புகளை ரசனையாய் எய்பவரும் ஆப்பிரிக்க பயணக் கட்டுரையாளருமான அன்பிற்குரிய நண்பர் சங்கம் வாவுபிள்ளை ராஜா அவர்களது அன்பு மகளின் திருமணம் இறையருளால் புதனன்று (24.01.2018) கோட்டாறில் இனிதாய் நிகழ்ந்தேறியது ....

Tuesday, January 23, 2018

பழங்கால இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் – குமரி அபுபக்கர்

குமரி அபுபக்கர்



குமரி அபுபக்கர் – பழங்கால இஸ்லாமிய இலக்கியங்களை, குறிப்பாக சீறாப்புறாணம் உள்ளிட்டவற்றை மேடைகளில் பாடி வருபவர். அவர் அமீரகத்தில் உள்ள தனது மகன்களது குடும்பத்தினரை காண ஷார்ஜா வந்துள்ளார். ஷார்ஜாவில் உள்ள அவரது மகன் இல்லத்தில் சென்று அவரை முதுகுளத்தூர்.காம் ( www.mudukulathur.com ) சார்பில் சந்திக்கப்பட்டது.

அவருடன் நடத்திய சந்திப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் வருமாறு :

குமரி அபுபக்கர் அவர்கள் கடந்த 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்த இடம் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள கொல்லங்கோடு பகுதியாகும். இவரது தகப்பனார் களியாக்காவிளை காஞ்சாம்புறம் மலிக் முஹம்மது. இவரது தாயார் பெயர் ஆயிஷா பீவி. 102 வயது வரை வாழ்ந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வஃபாத்தானார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர். அனைவரும் தற்போது இருந்து வருகின்றனர். இவர்களில் 8 பேர் ஆண்கள். இரண்டு பேர் பெண்கள்.

Sunday, January 21, 2018

குமரி அபூபக்கர்




குமரி மாவட்டத்தின் களியக்காவிளை பக்கத்தில் பூந்துறைக்கும் நம்பாறைக்கும் அருகில் உள்ள குக்கிராமம் காஞ்சன்புரம். வெறும் 10 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட கிராமம். அன்றைய மருத்துவத்தில் விஞ்சமுடியாத வல்லுநராக இருந்தவர் கண்ணுபிள்ளை வைத்தியர். அந்தக் குடும்பத்தில் ஒரு புலவர். வாப்புக்கண் ஆசான்.

செய்குதம்பி பாவலர், தியாகராய கீர்த்தனைகளைக் கொழும்பு போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பாடியவர். சிறு வயதிலேயே பெருமானாருன் சீறா கீர்த்தனைகளைக் கேரள பாணியில் பாடியவர். வறுமை இவரது சொத்தாகி அதுவே இவரைக் காவு கொண்டபோது, “”வறுமையில்தானே வர்த்தனையாகும்!” -என்று கவி.கா.மு. ஷெரீபை மனம் நோக வைத்தது. இந்த விருட்சங்களின் வாரிசு மருமகன்தான் குமரு அபூபக்கர்.

Saturday, January 20, 2018

சில சொற்றொடர்களும் பொருளும்..!!

சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில் ,நகரில் பிரபல சைவ ஹோட்டலுக்கு சென்றுருந்தேன்.மசால் தோசைக்கு ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தபோது பார்வை எதிர் சுவரில் வைத்திருந்த அறிவிப்பு பலகையில் பதிந்தது!
Our Staff do not accept tips !
என்று ஆங்கிலத்திலும்
இங்கு பணிபுரிவோர் அனைவரும் டிப்ஸ் வாங்கமாட்டார்கள் என்று தமிழிலும் எழுதப் பட்டிருந்தது!

Friday, January 19, 2018

டாக்டர். முஹம்மது ரிலா..!கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர்

டாக்டர். முஹம்மது ரிலா..!கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர்

மாயூரம் அதாங்க மயிலாடுதுறை அருகில் உள்ள கிளியனூரில் பிறந்தவர் ..
மெட்ராஸ் கலா சேஷ்டிரா வில் பள்ளி படிப்பை முடித்தவர்
1980 ம் ஆண்டு மெட்ராஸ் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் MBBS ம் MS ம் படிக்கிறார்
1986 ம் ஆண்டு இங்கிலாந்து சென்று எடின்பர்க் ல் மற்றுமொரு MS ம் படிக்கிறார்
1988.ல் Fellow of the Royal College of Surgeons
1991 ம் ஆண்டு முதல் உலக புகழ் பெற்ற , லண்டன் King’s College ஹாஸ்பிடல் மருத்துவ சேவையை தொடர்கிறார்
இது தான் இவரை பற்றிய சிறிய விளக்கம்
இவரின் மருத்துவ சாதனைக்கு இதை விட சிறிய விளக்கம் படத்துடன் கீழ ,,,
1997 ம் ஆண்டு, பிறந்து ஐந்து நாட்களே ஆன பச்சிளம் குழந்தை Baebhen Schutkke க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை , இறையருளால் வெற்றிகரமாக பண்ணினார் ,,


இருபது ஆண்டுகளுக்கு பிறகு அந்த குழந்தை , அயர்லேண்ட் ல் சட்ட கல்லூரியில் மாணவியாக உள்ளார்
முதல் புகைப்படத்தில் முஹம்மது ரிலா.. வுடன் இருப்பவர்

Thursday, January 18, 2018

கிளியனூர் டாக்டர் முஹம்மது ரீலா

 by.Burhanuddin:
 chennai ITC Chola Grand ஹோட்டலில் நமது கிளியனூர் டாக்டர் முஹம்மது ரீலா அவர்களுக்கு அவர்களின் 1000வது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகாக பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி, ஆளுனர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் கலந்து கொண்டனர். நமக்கும் இது பெறுமையான விசயம்தான்.
: இடது ஓரத்தில் உள்ளவர் டாக்டர் ரீலா அவர்கள்

எஸ்.ஏ.அப்துல் மஜீது (சினாஅனா)
எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)

Wednesday, January 17, 2018

ஹஜ் மானியம்

Vavar F Habibullah ( dr.habibullah )




தமிழ்நாடு அரசின் ஹஜ் கமிட்டி உறுப் பினராக பல வருடங்கள் நான் பணி
யாற்றி இருக்கிறேன்.அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட் டங்களில் அரசின் இலவச மானியம் பற்றி சில புகழுரைகள் நிகழும்.மிக அருமையான நேர்மையான அரசு அதிகாரி, அகமது ஐஏஎஸ் அப்போது தமிழ் நாடு ஹஜ் கமிட்டியின் செயலாளராக இருந்தார்.இந்த மானியத்தில் நிகழும் சில ஒழுங்கீனங்கள் பற்றி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இருந்தாலும் அரசு அதிகாரி என்ற நிலையில் அவரால் எதுவும் செய்ய இயலாது.இந்திய அரசின் முழு கட்டுப் பாட்டில் இயங்கும் அரசு டிராவல் ஏஜன்சி போன்றே தமிழ்நாடு ஹஜ்கமிட்டி செயல்பட்டு வந்தது.

Tuesday, January 16, 2018

பத்து வயசானா பங்காளி

பத்து வயசானா பங்காளி

எழுதியவர் யுவகிருஷ்ணா

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

Sunday, January 14, 2018

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட அந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை. 
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது

Friday, January 12, 2018

கரீம் அப்துல் ஜப்பார் - உலகின் மாபெரும் கூடைப்பந்து சாம்பியன்.

Aashiq Ahamed


கரீம் அப்துல் ஜப்பார் - உலகின் மாபெரும் கூடைப்பந்து சாம்பியன். பொதுவாக இவரைப்போன்றவர்கள் புத்தகம் எழுதினால் அது இவர்கள் சார்ந்த துறை குறித்தே அதிகமாக இருக்கும். ஆனால், தன்னுடைய சமீபத்திய நூலில், கூடைப்பந்து குறித்து பேசுவதை அறவே தவிர்த்திருக்கிறார் கரீம். மாறாக, லு அல்சின்டர் என பெயரிடப்பட்டு வளர்ந்த தான் கரீம் அப்துல் ஜப்பாராக மாறியது வரை மட்டுமே தன் நூலில் பேசுகிறார். மிகச்சரியாக இந்த நூலுக்கு "நான் கரீமாகியது எப்படி?" என்று தலைப்பிட்டிருக்கிறார்.

Thursday, January 11, 2018

பற்களின் வாழ்வே முளைத்து விழுவதிலும்,....

பற்களின் வாழ்வே முளைத்து விழுவதிலும், விழுந்து முளைப்பதிலும், பின் ஒரேயடியாய் விழுவதிலும்தான் இருக்கிறது.
எனது கீழ்த்தாடை வரிசைப்பற்கள், அதுவும் முன் வரிசை, பக்கத்திற்கொன்றாக, எந்தவித முன்னறிவுப்பின்றி ஒரு நாள் ஆட ஆரம்பத்திருந்தது. அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், ஒரு நாள் ராஜ்கிரண் மாதிரி சாப்பிடும்போது......மேலும் அதிகமாய் ஆட ஆரம்பித்தது மட்டுமின்றி தாங்கமுடியா வலியும் சேர்ந்து கொண்டது. வாழைப்பழம் கூட சரியாக தின்ன முடியவில்லை.
மனைவியிடம் சொன்னபோது வயசாயிடுச்சுல்லன்னு 'அசால்ட்'டாக சொன்னார். என் பிள்ளைகள் அதை வேண்டுமென்றே ஊர்ஜிதம் செய்தார்கள். மருமகன் மனதுக்குள் சிரித்திருப்பார் என நினைக்கிறேன்.
ஆனாலும், என் மனதும் நிலைக்கண்ணாடியில் தெரிந்த நானும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தோம். பல் மருத்துவரிடம் சென்றேன். வயது? என்றார். அறுபது தான் என்று அழுத்திச் சொன்னேன். அவரோ........சிரித்துக் கொண்டே, கவலைப்பட ஒன்றுமில்லை, விழுந்தபின் ஒவ்வொன்றாய் கட்டிக்கொள்ளலாம் என்றார்.

இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள்

இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள்

ஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள்.

பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே..! நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.
“ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் கொடுத்தாள்.

Wednesday, January 10, 2018

சோதனைகளையும், வேதனைகளையும்

Saif Saif


ஏன் இறைவன் மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டும்..!?
எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவன் எத்தனை நல்லவன்..!?
சில நேரங்களில் தோன்றும் எண்ணங்களில் விரியும் சிந்தனைகள் இறைவனின் எண்ணத்தை தெரிந்துக் கொள்ள விருப்பம் கொள்கிறது..!
எப்போதுமே சந்தோஷமாக இருப்பவன் இறைவனை நினைத்து பார்க்க நேரம் ஒதுக்குவானா.!?.இல்லை சந்தோஷங்களில் மூழ்கி திளைப்பானா.!?

ஹாலிவுடும் கோட்டாறும்



 With my friend Dr Ansari ( father of Aziz Ansari) Dr Ansari too acted in the film
MASTER OF NONE
இன்று காலையிலிருந்து மூன்று முறை
சென்னை ஹிந்து ஆங்கில நாளிதழ் அலுவகத்திலிருந்து என்னை அலை பேசியில் அழைத்தார்கள்.என்னை அழைத்து அழகாக உரையாடியவர் ஹிந்து ஆங்கில நாளிதழின் சப் எடிட்டர் திரு கோலப்பன் அவர்கள்.
ஹாலிவுட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற கோல்டன் குளோப் விருதினை பெற்ற நாஞ்சில் நாட்டின் தமிழ் இளைஞன் அஜீஸ் அன்சாரி எனது உறவினர் என்ற முறையில் சில தகவல்களை கேட்டு பெறவே அழைத்ததாக கூறினார்.
பிரபல ஹாலிவுட் நடிகரான அஜீஸ் அன்சாரி நாகர்கோவில் காரர்.தந்தை டாக்டர்அன்சாரிஅமெரிக்காவில் பிரபல மருத்துவர். தாயார் கோட்டாறு இடலாக்குடியை சார்ந்த பிரபல வழக்கறிஞர் பக்ருதீன் ஆதத்தின் மகள்.
அஜீஸ் அன்சாரி ஒபாமாவின் நண்பர்.
ஓபாமாவின் குழந்தைகள் இவரது ரசிகர்கள்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவரது வீடு உள்ளது.

Monday, January 8, 2018

அஜீஸ்_அன்சாரிக்கு அமெரிக்காவில் கோல்டன்_குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது



கோட்டாறு இளங்கடையைச் சேர்ந்த
பிரபலமான வழக்கறிஞரும்
பப்ளிக் பிராசிக்யூடருமான
மறைந்த #பக்ருதீன்_ஆதம்
அவர்களின் மகள் வழிப் பேரன்
#அஜீஸ்_அன்சாரிக்கு 
அமெரிக்காவில்
சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான
#கோல்டன்_குளோப்  விருது வழங்கப்பட்டுள்ளது.

மஸ்கோத் அல்வா வாங்கவா...?

சிணுங்கிய மொபைலை எடுத்துப் பார்த்தான் அவன்.வீட்டுக்காரிதான் அழைத்தது!
ஹலோ..என்ன?
வரும்போது டீக்கு கூட்டுவதற்கு எதுனாச்சும் வாங்கிட்டு வாங்க...எல்லாம் காலியாயிடுச்சி...
சரி..சரி...என்ன வாங்க...
எதனாச்சும் தி்ங்க நல்லா இருக்கிறதா வாங்குங்க..
மஸ்கோத் அல்வா வாங்கவா...?

Thursday, January 4, 2018

பெருமான் நபிகள் நாயகம்

Athavullah Athavullah

பெருமான் நபிகள் நாயகம்
பேரிறைவன் ஆலயம்
கஅபாவுக்கு இசைவான திசை!

அவர்களைப் பிரியப் பட்ட
முஸ்லிம்களின் உள்ளங்களைத்
தங்கள் பால் இழுக்கும்
புவி ஈர்ப்பு விசை!

அனைத்தின்
தொடக்கமும் உயிர்ப்பும்
நபிகளிடம் இருந்து தான் !

நபிகளே நம்
அனைத்துக்கும் மூலாதாரம்...

அவர்களை விட்டு
நமக்கு ஏது
வேறு ஆதாரம்?

அவர்களே அனைத்தும்
என்பதற்கு
அருள்மறை வேதமே ஆதாரம்!

Wednesday, January 3, 2018

சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது.

இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் புரியாத மனநிலை வளர்ந்து வருகின்றது. வீட்டில் நாலு பிள்ளைகள் இருந்தால் வீடே கலகல என்றிருந்த காலம் என்றோ மலையேறி ஒவ்வொரு அறையிலும் தனித்தனித் தீவில் வசிப்பது போல் குழந்தைகள் செல்போன்களிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் மூழ்கியிருக்கின்றனர்.

Monday, January 1, 2018

இல்லற வாழ்வே இனிக்கும் வாழ்வு !

Abu Haashima
இறைத்தூதர் திருமணம் செய்து வாழ்வதை வலியுறுத்திச் சொன்னார்களென்றால் ..
இல்லற வாழ்வின் இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இறைவன் இலக்கியமாகவே சொல்கிறான் .
எப்படி ?
#கணவன்_மனைவிக்கு_ஆடையாகவும்_மனைவி_கணவனுக்கு_ஆடையாகவும்_இருக்க_வேண்டும்.
என்று சொல்கிறான்.
கணவன் மனைவி உறவுக்கு
இறைவன் சொன்ன உவமானம்
உலகில் வேறு எவராலும் சொல்லப்பட முடியாத மிக அழகான
அற்புதமான உவமானம் !
ஆடையாக இருங்கள் என்று இறைவன் ஏன் குறிப்பிட்டான் ?
ஆடைதான் …
மானத்தைக் காப்பாற்றுகிறது !

ஓய்வில்லா ஓட்டத்தில் ஒரு விடுமுறை ....!

ஒன்றையுமே விடாமல் முறைவைத்து குறைவைக்காமல் வருடம் முழுவதும் பணிசெய்து கிடந்து களைத்து போனவர்களுக்கு விடுமுறை எப்போதுமே வரப்பிரசாதம் தான்.
எப்படி முறைவைத்து இலக்குகளை எட்டி வெற்றிக்கனி பறிக்க ஓடியாடி உடல்வருத்தி உழைக்கிறோமோ அதுபோலவே உடலுக்கும் உள்ளத்திற்கும் முறைவைத்து ஒய்வு கொடுக்க வேண்டும்.
இது மிகமிக அவசியமான கடைபிடிக்க வேண்டிய காரியம். தேவையான ஓய்வை நாமாக எடுத்து களைப்பை உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் நீக்காவிடின் இயற்கையின் விதிமுறைப்படி கட்டாய விடுமுறை எடுக்க வைத்துவிடும்.
அது எப்படி ?
இயற்கையுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உடலுக்கு ஒய்வு அவசியம். அந்த ஓய்வை நாமாக நயமாக எடுக்காவிடின் அதுவாக அசாதாரணமாக பிணியாக வந்து கட்டாய ஒய்வு எடுக்க வைத்துவிடும்.
ஒய்வு என்பது ஒன்றுமே செய்யாமல் நாள்முழுக்க சும்மாவே இருப்பதல்ல. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்யும் பொருளீட்டலுக்கான செயல்களை விடுத்து, விடுப்பெடுத்து மனம் உவக்கும் மகிழ்ச்சி தரும் ஆனால் பொருளாதார பலனில்லாத செயலை செய்து உடலையும் உள்ளத்தையும் களிப்படைய செய்வதாகும்.