பாடல் பாடுபவர் சீறா கலைஞர் குமரி அபூபக்கர் அவர்கள்
சீறாப்புராணம் சீரத்துன் நபியின் வரலாற்றை சொல்லக்கூடிய சீறாப்புராணத்தை பாடக் கூடிய உமறுப்புலவர் இறைவனை இப்படியும் சொல்கிறார்
சீறாப்புராணம் முதலாவது காண்டம் – விலாதத்துக் காண்டம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இறைவனை -கடவுள் வாழ்த்துப் படலம்
திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
மதித்திடாப் பேரொளி யனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல் லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. 1.1.1
-----------------------------------------
இது இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.
சீறாப்புராணம்
சீறாப் புராணம் = சீறாவைக் கூறும் புராணம். சீறத் என்பது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருக்கம் ஆகும். இதற்கு நபிகள் நாயகத்தின் வரலாறு என்று பொருள். சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள்..
சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார்.
உமறுப் புலவர் அக்காலத்தில் வாழ்ந்த படிக்காசுப் புலவர். நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.
இவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர். ஒருவர் சீதக்காதி, இன்னொருவர் பரங்கிப் பேட்டை அபுல்காசிம் மரைக்காயர்.
சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம் கடவுள் வாழ்த்துப் படலம்
: சீறாப்புராணம் முற்றோதல்
No comments:
Post a Comment