Monday, January 29, 2018

திருவாங்கோடு/ திருவாங்கூர்/திருவிதாங்கோடு..!!

Noor Mohamed

எந்த ஒரு மொழியிலும் எந்த ஒரபெயர்ச்சொல்லும் முதலில் மக்களது பேச்சுவழக்கில் உருவானபிறகே எழுத்து வடிவம் பெறுவது வழக்கம்!சில அப்படியே எழுதப்படும்.சில சற்று மாறுதலுடன் திருந்திய வடிவம் பெறும்.உதாரணமாக கொல்லம் ,கொச்சி,கொட்டாரம்,கோட்டாறு போன்றவை அவ்வாறே உச்சரிக்கவும் எழுதவும்படுகிறது.திருவிதாங்கோடு என எழுதப்படுவதை நாங்கள் பேச்சு வழக்கில் திருவாங்கோடு என்றே சொலவோம்!மற்றவர்களும் அப்படியே சொல்வர்!சில விதிவிலக்குகள் இருக்கலாம்!

ஆரம்பத்தில் திருவாங்கோடு என்றே வழங்கியிருக்கவேண்டும் என்றே சில தகவல்களின் மூலம் அறியமுடிகிறது.இன்னொரு விஷயம், சத்தியமார்க்கமான தீனுல் இஸ்லாம் தோன்றிய ஆரம்பகாலகட்டத்திலேயே குறுகிய இடைவெளியில் இங்கே வந்துசேர்ந்துவிட்டது எனும் உண்மையும் திருவாங்கோடு எனும் பெயர் சுட்டி நிற்கிறது எனலாம்!
சேரசோழபாண்டியர் எனும் முத்தமிழ் நாட்டில் பிற்காலத்தில் சேரநாடு என்பது சோழ,பாண்டியர்களைப் போல வலுவான ஒருமத்திய தலைமையின்றி சிறுசிறு குறுநிலமன்னர்களாலேயே ஆளப்பட்டு வந்தது என்பது வரலாற்றாளர்களின் முடிவாகும்!இதன் காரணமாக பல்வேறு படையெடுப்புகளும் நிகழ்ந்து,மேலும் சிதறிக கிடந்தது!
குறிப்பாக நாஞ்சில் நாடு எனப்பின்னால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியும் பலசிறுசிறு க்ஷத்திரிய குழுக்களால் ஆளப்பட்டு வந்துள்ளதும் தெரியவருகிறது!இது கிபி ஏழாம்நூற்றாண்டு வாக்கில் நிலவிய நிலைமை!
அவ்வாறான ஒரு க்ஷ்த்திரியக குழுவின் தலைவன் ஒருவன் வனவேட்டைக்காகச் சென்றபோது...
அங்கே ஒரு சப்தம் வருவதை கவனித்தான்!
அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்..
இது என்ன புதவிதமான இனிமையான குரலாக உள்ளதே என ஒலி வந்த திசைநோக்கித் திரும்பினான்...
தொடர்ந்து அந்த இனிய குரலோசை வந்துகொண்டே இருந்தது!
அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...
அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்..
....
அந்த வசீகர ஒலி(நாகூரார் நினைவுக்கு வருகிறாரா..?)
யின் இனிமையில் மயங்கியவாறே அந்த இடத்தை அடைந்தான் அந்த க்ஷத்திரியத் தலைவன்!
ஒருசிறு குழு! தங்கள் கால்நடைவாகனங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தது!
தங்களது பாத்திரங்களிலிருந்து தண்ணீரை சரித்து சிலர் கைகால்களக் கழுவிக்கொண்டு எதற்கோ அணிசேர்ந்து மேற்குத்திசை நோக்கி நிற்க அவர்களது தலைவர் போல இருந்தவர் முன்னணி நின்று கொண்டிருக்க,
தலைவன் ஒருவித சந்தேகத்துடன் அருகில் சென்றான்!
யார் நீங்கள்!எதற்கு இங்கே அணிவகுத்து நிற்கிறீர்கள்?சோழ ஒற்றர்களா?அல்லது பாண்டிய ஒற றர்களா? என்றவாறு தனது காவலர்களுடன் சூழ்ந்து கொண்டான்!
பெரியவர் அமைதியாக எவ்விதப் பதற்றமுமின்றி தமிழிலேயே சொன்னார்!
தங்களைப் பார்த்தால் நல்லகுலத்தில் பிறந்த வீரனாகத் தெரிகிறது!இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளவரைப்போல் தெரிகிறது!அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக...என்றபடி தனது பதிலைத் துவங்கினார்!
அவரது தோற்றமும் அவரது வார்த்தைகளும் தலைவனது மனதுக்குள் அவர்மீது ஒரு இனந்தெரியாத மரியாதையை உண்டாக்க,
ஐயா என்ன சொன்னீர்கள் அல்லாவா?புதிதாக இருக்கிறதே!அது யாரோ..?
பெரியவரும் மனதுக்குள் இவனிடமிருந்து எந்த ஆபத்தும் வராது என உணர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்லியவாறு பேசத்துவங்கினார்!
வீரனே! நாங்கள் நாடுகளை வென்றெடுக்க எந்த அரசனது தூதுவர்களாகவோ ஒற்றர்களாகவோ இங்கு வரவில்லை!மக்கள் மனங்களை வென்றெடுக்கவும் அறியாமையை அகற்றி இம்மை மறுமைப் பேறுகளை அடைவதற்கும் இவ்வலகை உய்விக்கவந்த ஒரு மகத்தான தூதரின் தூதர்களாகவே வந்துள்ளோம்!மலபார் கரையிலிருந்து தொடர்ந்து பயணித்து வரும்போது இங்கு உங்களை சந்திக்கிறோம்!அல்லா என்றால் என்னவென்று கேட்டீர களே!அவன்தான் உங்களையும் எங்களையும்இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலம் செய்யும் ஏக இறைவன்!அந்த தூதுச்செய்தியை எங்களுக்கு எத்திவைத்த முகம்மது என்னும் இறுதி இறைத்தூதரின் செய்தியை உங்களிடம் எடுத்துச் சொல்வதே எங்கள் நோக்கம்!
க்ஷத்திரியனுக்கு மனம் அமைதியானது!சரி இவர்களால் நமக்குத் தொல்லை ஏதுமில்லை என்ற எண்ணம் மேலிட தொடர்ந்து கேட்டான்!
ஐயா, நீங்கள் சொல்வதை நம்புகிறேன்!இது ஒரு வனாந்தரம்!இங்கு பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லை!எனது இருப்பிடமும் மக்களும் சற்று தொலைவில்!இங்கே நான் உங்களுக்கு என்னவிதமான உதவி செய்யமுடியும்!
மிகவும் நன்றி வீரனே!எங்களுக்கு இங்கேயே தங்க அனுமதியும் தந்து எங்களுக்கு இங்கே ஒரு வழிபாட்டுத்தலமும் ஏற்படுத்த உதவினால் அல்லாஹ் உங்களை கண்ணியப் படுத்துவான்!
அப்படியே ஆகட்டும் பெரியவரே!இந்தப்பகுதி முழுவதும் உங்களது கட்டுப்பாட்டிலேயே விடுகிறேன்.நீங்கள் விரும்புவதுபோல இங்கே வழிபாட்டுத்தலம் அமைத்துக் கொள்ளுங்கள்!எனது குலம் தழைக்க உங்கள் வேண்டுதல்களையும் அல்லாவிடம் கேளுங்கள் என்றவாறு அவரைக் கட்டித்தழுவி விடைபெற்றான்,வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு தனது வீர்ர்களைப் பணித்தவாறு!
நிச்சயம் வீரனே!உன்குலம் தழைக்கவும் உனது ஆட்சி விரிவடையவும் இறைவன் உனக்கும் உனது குடிகளுக்கும் நேர்வழிகாட்டவும் இறைவனை வேண்டுவேன்!
அந்த க்ஷத்திரியனின் ஆட்சியும் எல்லையும் விரிவடைந்து பின்னாளில் பத்மனாபபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசு ஏற்பட்டது!
திருபாங்கு இட்ட இடம் திருபாங்கோடாகி திருவாங்கோடானது!மன்னனின் பரம்பரையும்திருவாங்கோடு என்னும் ஊரை உள்ளடக்கிய திருவாங்கூர் அரச வம்சமாகப் பரிணமித்தது!
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைநகரம் பத்மநாப புரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாறி திருவாங்கூர் கொச சி என்று மேலும் விரிவடைந்து புகழ் பெற்றது!மகான் மாலிக் முகம்மது ஒலியுல்லாவின் துஆ பரகத்!
(முகநூல் நட்பும் மைனிமகனுமான
Mahshook  M Mahshook Rahman தான் படித்த ஒரு ஆங்கில நூலின் தகவல்களை என்னுடன் பகிர நானும் கூகிளில் தேடியெடுத்த சில தகவல்களையும் வைத்து எழுதியது!)
நூலாசிரியர்,பல்வேறு சமஸ்தானங்களில் திவானாகப் பணியாற்றிய திவான் ஜர்மானிதாஸ் எழுதிய Maharanis of India நூல்.திவான் சர் சி பி ,மகாராணி சேதுலக்ஷ்மி பாய் விவகாரங்களையும் தொட்டுச் செல்கிறார் சுவாரசியமாக!
"Travancore was the southernmost of India states and ......
The Ruler of the state belonged to the Kshathriya family ,which traces its descent to the ancient Chera Kings of South India.The old principal town of
Tiruvankodu which gave its name to the State is now a small town".

Noor Mohamed




-------------------------------------------------------------
கருத்துகள்
திருவிதாங்கூர் சமஸ்தானம் தோன்றுவதற்கு முன்பிருந்த சிற்றரசு வேணாடு.. அதன் தலைநகரம் திருவிதாங்கோடு அருகில் உள்ள கேரளபுரம்.. மார்த்தாண்டவர்மா மகாராஜா காலத்தில் தான் தலைநகரம் கல் குளம் பகுதிக்கு தற்போதைய அரண்மனைக்கு மாறியது...
1729 ல் டச்சு படையினருக்கு எதிரான குளச்கல் போர் முடிவுக்கு வந்த பிறகுதான் தனது குலதெய்வம் பத்மநாபசுவாமிக்கு ஆட்சியை திருப்படிதானம் கொடுத்து கல்குளம் அரண்மனை இருந்த இடம் பத்மனாபபுரம் ஆனது.. பின்னர் கொச்சி வரை உள்ள நிலப்பரப்பு வேணாடு ஆளுகையின் கீழ் வந்ததை தொடர்ந்து வேணாடு சிற்றரசு திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆக விரிவடைந்ததால் நிர்வாக வசதிக்காக தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தது வரலாறு
Colachel Azheem
பீர்முகம்மது அப்பா வின்வருகை 1550கும் 158 0க்கும் இடைப்பட்ட காலமாக நிறுவப்படுகிறது.
அப்பாவின் முக்கியமான ஞான நூல்களில் ஒன்று, "ரோசு மீசாக்கு மாலை"
1200 ஞானப் பாடல்கள் கொண்ட இந்த நூல் 400 ஆண்டுகள் தொன்மைகொண்டது.
இந்த நூல் 2017ஏப்பிரல் திங்களில் தான் முதன்முறையாக அச்சாக்கம் பெற்று வெளி இடப்பட்டது.
பீர்முஹம்மது அப்பா இந்த நூலை ஹிஜ்ரி 1026ல்-கி பி 1617ல் அரங்கேற்றியிருப்பதை
இந்த நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் ,
"பார்ப்புகழும் தக்கலை கொந்தால் கால்முகமாய் வந்துதித்த இனம் புகழ மாமனர்க்கு மீமானீயன்பாகச் சொல்லும்"
என இங்கிருந்த மாமன்னருக்கு ஈமானின் செய்தியை சொல்ல தான் தக்கலை கொந்தால்(கொந்தால் என்றால் நெசவு தொடர்புடைய ஒரு சொல்) பீரப்பா பதிவு செய்கிறார்.
அக்காலத்தில் கல்குளம் என்ற பெயர்தான் ,பத்மநாபபுரம் என்ற ஊர் பெயர்18ம் நூற்றாண்டில்தான் அறிய வருகிறது.
பீரப்பாவின் தக்கலை வருகை காலத்தில் இங்கு தாய் கொட்டாரம் ஒன்றும் பழைய ம்ண்ணாலான கோட்டையும் இருந்துள்ளது. கோட்டை கட்டுமானத்தோடு பீரப்பாவின் கராமத் எனும் அற்புதம் நிகழ்ந்த செய்தி இந்த பழைய கோட்டை சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.
தற்போது காணப்படும் இந்தக் கோட்டை டச்சுப் படைஎடுப்பினை

த்தொடர்ந்து சேத

மடைந்த பழைய

கோட்டையை புதிதாய் உருவாக்கியதாகும்.
இக்கோட்டையின்
கட்டுமானப்பணி 1740ல் தொடங்கி 1757ல் முடிக்கப்பட்டுள்ளது.
பீரப்பாவின் வருகை 1550க்கும் 1580க்கும்
இடைப்பட்ட காலமாகும் என்பதை அடிப்படையாக கொள்ளலாம்.அப்போது வீரம்செறிந்த பல வேணாட்டு மன்னர்கள் இங்கு அரசாண்டு வந்துள்ள தை வரலாறு வரிசை படுத்தி வைத்துள்ளது.
1540 முதல் 1544 வரை சகலகலா மார்த்தாண்டவர்மா,1544 முதல் 1545வரை பூதல ஸ்ரீ வீர கேரளவர்மா, 1546 முதல் 1558வரை பூதல வீர ராம வர்மா, 1559 முதல் 1564 வரை ஸ்ரீ வீர ஆதித்த வர்மா, 1564 முதல் 1587 வரை ஸ்ரீ வீர உதய மார்த்தாண்ட வர்மா என வேணாட்டு மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்துள்ளது. பீரப்பாவின் தக்கலை வாழ்வும் மறைவும் 1550க்கும் 1650க்கும் இடைப்பட்ட காலமாகவே நிறுவலாம். அதிலும் அவர் அஞ்சுவண்ணத்தில் வாழ்ந்திருப்பதை ஒரு பாடலில் அஞ்சுவண்ணம் என்றே குறிப்பதிலிருந்து உறுதி செய்யலாம்.
இப்பவே கண்ண கட்டுதேனு யோசிக்காம கொஞ்சம் ஒரு நடை தக்கலைக்கு வந்து "றோஸ் மீசாக்கு மாலை" வாண்டிட்டு போங்க காக்கா.
Thuckalay Haleema

No comments: