Monday, January 8, 2018

மஸ்கோத் அல்வா வாங்கவா...?

சிணுங்கிய மொபைலை எடுத்துப் பார்த்தான் அவன்.வீட்டுக்காரிதான் அழைத்தது!
ஹலோ..என்ன?
வரும்போது டீக்கு கூட்டுவதற்கு எதுனாச்சும் வாங்கிட்டு வாங்க...எல்லாம் காலியாயிடுச்சி...
சரி..சரி...என்ன வாங்க...
எதனாச்சும் தி்ங்க நல்லா இருக்கிறதா வாங்குங்க..
மஸ்கோத் அல்வா வாங்கவா...?

ஹும்..உங்களுக்கு ஹல்வாவ விட்டா வேற ஒண்ணுமே கெடக்காதே...
சிப்ஸ்..?
வேண்டாம்...வேண்டாம்..
அப்ப ஒமப்பொடி வாங்கவா...
ஐயே...திங்கிம்பொ பொடியெல்லாம் கீழ விழுந்து குப்பையாகிவிடும்...வேண்டாம்...
அட அப்படியா..காரச்சேவு வாங்கிரவா..?
கடுகடுண்ணு..இருக்கும்..வேண்டாம்..
பக்கோடா..??
ஒரே எண்ணெய் மயமா இருக்கும் வேண்டாம்..வேற எதையாவது வாங்குங்க..
ஒண்ணுமே வேணாங்கிற..நான் எதை வாங்க இப்ப...
ஒரு டீக்கு கூட்ட சாமான் வாங்கத் தெரியாதா உங்களுக்கு..நல்லதா பாத்து எதையாவது வாங்கச் சொன்னா...நூறு கேள்வி...
அவனுக்கு தல சுத்த ஆரம்பிக்குது....

Noor Mohamed

மஸ்கோத் அல்வா

No comments: