Monday, January 29, 2018

கனடா TET தொலைக்காட்சி - செம்மல் மணவை முஸ்தபா அவர்களுடன் - ஒரு நேர்காணல்


TET தமிழ் மனமகிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு அன்பு வணக்கம்
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு
அரும்பணியாற்றிய தமிழ் அறிஞர்
அறிவியல் தமிழ்த் தந்தை
மணவை முஸ்தபா அவர்களின் அருமைப் புதல்வர்
டாக்டர் செம்மல் மணவை முஸ்தபா
இன்று நம்மோடு
தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறு அடிபாயும் என்றொரு பழமொழி உண்டு
அந்தப் பழமொழியை உண்மையாகும் தீவிரப் பணியில்
தன்னை அயராது ஈடுபடுத்திக்கொண்டு
ஒரு ராஜ தமிழ்த் தேனீயாய் அறிவியல் தமிழ் உலகில்
இவரின் ஆய்வுகள் வெகு சிறப்பாக போற்றப்படுகின்றன
ஒரு மருத்துவராய் இருந்தும்
மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராய் இருந்தும்
அதன் உயர் பதிவிகளையும் துச்சமென மறுதளித்துவிட்டு
தமிழே தன் மூச்சு என்று அறிவியல் தமிழ்த் தளத்தில்
வெற்றிக்கொடி நாட்டி வரும் செம்மல்
இவர் டாக்டர் டாக்டர்

ஆம் இரண்டு தளங்களில் டாக்டர் இவர்
செய்யும் மருத்துவத் தொழிலால் இவர் ஒரு டாக்டர்
ஆய்வுத்தள அறிஞர் என்னும் கல்வித் தகுதியாலும் இவர் ஒரு டாக்டர்
இயல்பில் மிக எளிமை
தமிழ் ஆய்வில் மகா வலிமை
இன்றைய அறிவியல் உலகின் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் யாவுமே
நம் தமிழ்த்தாயின் மடியில் பிறந்து தவழ்ந்துவந்த பிள்ளைகள்தாம்
என்று நிறுவுகின்ற ஆய்வுகளைச் செய்யும் செம்மல் ஓர் வெற்றித் தமிழர்
திரு செம்மல் மணைவை முஸ்தபா அவர்களை TET தொலைக்காட்சி மேடையில்
உங்கள் அனைவரின் சார்பாகவும் அன்புடன் வரவேற்கிறோம்
அன்புடன் புகாரி

டாக்டர் செம்மல் மணவை முஸ்தபா அவர்கள் என் வீட்டின் பின் கதவைத் திறந்தார் திறந்ததும் நம் மனக் கதவுகளைத் திறக்கிறார்.
எந்த ஓர் இயற்கையைக் கண்டாலும் நற்றமிழர்களுக்கு நல்ல செய்திகளையே சொல்லத் தோன்றும்
அன்புடன் புகாரி
-----------------------------------------------------------------------------


இடமிருந்து வலமாக:
நாச்சியப்பன் - தலைவர், தமிழ்நாடு கலாச்சார சங்கம் கனடா
சுதர்சன் - முந்நாள் தலைவர், தமிழ்நாடு கலாச்சார சங்கம் கனடா
செம்மல் மணவை முஸ்தபா, டாக்டர் முனைவர், தமிழ் மூச்சாளர்
அன்புடன் புகாரி, கவிஞர் — with Semmal Manavai Mustafa, Tncsc Canada and Sudarshan Meenakshi.
அன்புடன் புகாரி


No comments: