Friday, January 19, 2018

டாக்டர். முஹம்மது ரிலா..!கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர்

டாக்டர். முஹம்மது ரிலா..!கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர்

மாயூரம் அதாங்க மயிலாடுதுறை அருகில் உள்ள கிளியனூரில் பிறந்தவர் ..
மெட்ராஸ் கலா சேஷ்டிரா வில் பள்ளி படிப்பை முடித்தவர்
1980 ம் ஆண்டு மெட்ராஸ் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் MBBS ம் MS ம் படிக்கிறார்
1986 ம் ஆண்டு இங்கிலாந்து சென்று எடின்பர்க் ல் மற்றுமொரு MS ம் படிக்கிறார்
1988.ல் Fellow of the Royal College of Surgeons
1991 ம் ஆண்டு முதல் உலக புகழ் பெற்ற , லண்டன் King’s College ஹாஸ்பிடல் மருத்துவ சேவையை தொடர்கிறார்
இது தான் இவரை பற்றிய சிறிய விளக்கம்
இவரின் மருத்துவ சாதனைக்கு இதை விட சிறிய விளக்கம் படத்துடன் கீழ ,,,
1997 ம் ஆண்டு, பிறந்து ஐந்து நாட்களே ஆன பச்சிளம் குழந்தை Baebhen Schutkke க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை , இறையருளால் வெற்றிகரமாக பண்ணினார் ,,


இருபது ஆண்டுகளுக்கு பிறகு அந்த குழந்தை , அயர்லேண்ட் ல் சட்ட கல்லூரியில் மாணவியாக உள்ளார்
முதல் புகைப்படத்தில் முஹம்மது ரிலா.. வுடன் இருப்பவர்

----------------------------'
 அன்பு சகோ
மருத்துவர் முகமது ரீலா அவர்களை பற்றி நான் முதன் முதலாக அறிந்தது .. மும்பையில் வைத்து பிரமோத் அவரின் சிகிக்சை விஷயமாக லண்டனில் இருந்து வந்து இருந்தார். அன்றைய கால கட்டத்தில் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிசையில் உலகின் ஓரே முதன்மை மருத்துவர். என்னுடைய மகன் ஆகில் ஜுபைர் MBBS படிக்க ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்ந்த கால கட்டத்தில் இவரை பற்றி அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்து இருந்தேன் ,, கணி பொறி தொலைந்த பொழுது அனைத்து போயி விட்டது ... நான் நினைத்ததை விட சிறப்பாக நீங்கள் அவரை பற்றி தொகுத்து இருக்கீர்கள் மிக மகிழ்ச்சி .... பெரியவர் ,முக நூலின் மூத்த சகோதரர் Mohamed Ali அவர்களுக்கும் நன்றி

Jamesha Habib 
கிளியனூர் டாக்டர் முஹம்மது ரீலா

chennai ITC Chola Grand ஹோட்டலில் நமது கிளியனூர் டாக்டர் முஹம்மது ரீலா அவர்களுக்கு அவர்களின் 1000வது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகாக பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி, ஆளுனர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் கலந்து கொண்டனர். நமக்கும் இது பெறுமையான விசயம்தான்.
: இடது ஓரத்தில் உள்ளவர் டாக்டர் ரீலா அவர்கள்



எஸ்.ஏ.அப்துல் மஜீது (சினாஅனா)

Woman who had liver transplant at just five days old reunites with hero surgeon 20 years later When Professor Mohamed Rela first set eyes on Baebhen Schutkke in 1997 she was on the brink of death



ஹாஜி ..மஜீது அவர்களின் பேரன் டாக்டர். முஹம்மது ரிலா..!
ஹாஜியார் கடை சிங்கையில் புகழ்பெற்றதாக இருந்தது
ஹாஜியார் அவர்களால்தான் அந்த ஊர் கிளியனூர் மக்கள் பலர் சிங்கை சென்றனர்
ஹாஜியார் ஆரம்பித்ததுதான் கிளியனூர் அரபிக் கல்லூரி/மதரசா
ஹாஜியார் .S.A.மஜீது அவர்களின் மகன் ஹாஜி சம்சுதீன்
ஹாஜி சம்சுதீன் அவர்களின் மகன்தான் டாக்டர். முஹம்மது ரிலா..!
 ஹாஜியார் .S.A.மஜீது அவர்களின் மகன் ஹாஜி சம்சுதீன்
அவர்களுடன்(வெள்ளை கைலி) எனது அண்ணன் வக்கீல் சயீது

No comments: