இவனைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அமெரிக்க ஹாலிவுட் பட உலகையே தலைகீழாக புரட்டி போடும் அளவுக்கு சக்தியும் திறமையும் கொண்ட அதிசய இளைஞன் இவன்.புகழ் பெற்ற ஆலிவுட் நடிகன். ஜனாதிபதி ஒபாமாவின் குடும்ப நண்பன். ஜனாதியின் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் இவனது தீவிர ரசிகர்கள்.தேர்தல் நிதிக்குழுவில் அங்கம் வகித்த முதல் இந்திய தமிழன். இவன் பெயரைச் சொன்னால் அகில அமெரிக்காவும் வாய் பிளக்கும். அமெரிக்க இளைஞர்களெல்லாம் இவனது தீவிர ரசிகர்கள். இவன் தோன்றும் கூட்டங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வர்.
காசு கொடுத்து டிக்கட் எடுத்து வந்தால் மட்டுமே இவன் முக தரிசனம் கிட்டும். அமெரிக்காவின் எந்த தியேட்டரில் இவன் நிகழ்ச்சி நடந்தாலும் ஒருமாதம் முன்பே அனைத்து டிக்கட்டுகளும் விற்று தீர்ந்து விடும். மைக்கேல் ஜாக்சன் வீட்டருகில் அரண்மனை போன்ற வீடு இவனுக்கு சொந்த மானது. தனக்காக சொந்த விமானம் ஒன்றையே சமீபத்தில் விலைக்கு வாங்கி இருக்கிறான் இந்த இளைஞன்.
யார் இந்த அஜீஸ் அன்சாரி?
என் நெருங்கிய சொந்தக்தார பையன் தான் இவன். இவனது தந்தை DR.அன்சாரி அமெரிக்காவின் தலைசிறந்த குடல் நோய் சிகிச்சை வல்லுநர்.திருநெல்வேலியை சார்ந்தவர். என் நெருங்கிய நண்பர், உறவினர்
நாகர்கோவிலைச் சார்ந்த பிரபல வக்கீல் மறைந்த பக்ருதீன் ஆதத்தின் மகள் தான இவர் மனைவி.
லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாடிய அஜீஸ் அன்சாரி தன் தாய் தந்தை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய விடியோ தொகுப்பை பேஸ் புக்கில் இன்று எனக்கு அனுப்பியிருந்தான். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். அவனது சொந்தக்காரன் என்று சொல்வதை விட அவனது நல்ல ரசிகன் நான் என்று சொல்லிக் கொள்வதில் நான் சற்று பெருமிதம் கொள்கிறேன்.
No comments:
Post a Comment