Wednesday, October 4, 2017

குழந்தைகளின் மனசு பூப்போன்றது..

குழந்தைகளின் மனசு பூப்போன்றது..அது சிறிதாக கசங்கினாலும் உதிர்ந்து விடும்..
குழந்தைகள் நம்முடைய ஒவ்வொரு செயலையும் பார்க்கிறது..நாம் சிரித்தால் சிரிக்கிறது..நாம் அழுதால் அதுவும் அழுகிறது..
குழந்தைகளோடு
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாலே மனதுக்கு மகிழ்வானதாக இருக்கும்..
சிலர் குழந்தைகளோடு விளையாடுவார்கள்..அப்படி விளையாடும் போது குழந்தை போலவே ஆகி விடுவார்கள்..

குழந்தையை தூக்கி வைத்து மரியாதையாகப் பேசுவார்கள்.
"சொல்லுங்கோ,என்ன சாப்டீங்கோ" என்று பெரியவர்களுக்கு
கொடுக்காத மரியாதையை குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..
குழந்தை என்னச் சொன்னாலும் கேட்பார்கள்.அந்த நேரத்தில் உலகத்தையே மறந்து விடுவார்கள்..
இப்படி வளரும் குழந்தைகள் மற்றவர்களையும் மரியாதையாகவே
பார்க்கும் அழைக்கும்..
சிலர் குழந்தைகளையும் பெரியவர்களை போல திட்டி தான் அழைப்பார்கள்..வேறு ஏதாவது கோபத்தை குழந்தை மேல் காட்டி எரிந்து விழுவார்கள்..
இப்படிச் செய்யும் நபர்களை குழந்தைகள் வெறுக்க ஆரம்பித்து விடும்..அந்த நபரை பார்த்தாலே பயந்து நடுங்க ஆரம்பித்து விடும்..
இப்படி வளரும் குழந்தைகள் மனதில் தோன்றும் வெறுப்பில் நாளடைவில் இது போன்ற நபர்களை வகை செய்யாத நிலை ஏற்பட்டு விடும்..
அப்படி ஒரு நிலை ஏற்படும் போது மறுபடி அன்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு..
நபி(ஸல்) அவர்கள் கூட குழந்தைகளை மரியாதையோடு நடத்த வேண்டும் ..என சொல்லி இருக்கிறார்கள்..
மேலும்,
உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும் வரை அவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.
(அஹ்மத்,நஸயி.)எனவும் வலியுறுத்துகிறார்கள்..
கவலைகளை மறக்க,சந்தோஷங்களோடு குதூகலிக்க இறைவன் தந்த வரங்கள் குழந்தைகள்..
குழந்தைகளை குழந்தைகளாகப் பார்ப்போம்.வளர்ப்போம்..
நமக்கு இருக்கும் ஏராளமான அறிவு அந்த குழந்தைகளுக்கும் இருக்கும் என எதிர்பார்த்து பழகுவது தவறு..
குழந்தைகளோடு கிடைக்கும்
நேரங்களில் முடிந்தவரை
மரியாதையானச் சொற்களை சொல்லிக்கொடுப்போம்..
இல்லையென்றால் வாய் மூடி மெளனமாக இருந்து விடுவோம்.


Saif Saif

No comments: