Saturday, July 26, 2014

அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள் !

கவிமாமணி பேராசிரியர் தி.மு அப்துல் காதர்
********************************
தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹியாத் விரல்கள் !

செடார் மரக் கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !

காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !
அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .

மானபங்கப்படும்
மனிதநேயத்திற்கு
உத்தரீயம் கொடுக்கவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கவுரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் !

கிப்லாவை
டாலருக்கு மாற்றிக் கொண்டு
முசல்லாவை விற்று
அமெரிக்க அழகுச் சிலை வாங்கியதால்
மினாராக்கள்
யூதர்களுக்கு சஜ்தா செய்கின்றன !

ஆப்கன் விதைஎடுத்து
அமெரிக்கா பயிரிடும்
கொடிமுந்திரித் தோட்டக்
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின்
முழிக்கும் விழிகள் !

அமெரிக்க - இஸ்ரேல்
காக்டெயில் விருந்தின்
ஐஸ்க்ரீம் மகுட உச்சியில்
செர்ரிப் பழமாய்
பாய்மார்களின்
தாய் மார்க்காம்புகள் !

அலிப்
எழுத்துப்போல சேராது
தனித்திருக்கும்
அரபு நாடுகளே ...

ஒன்றாய் நீங்கள்
ஒன்றுக்கிருந்தால்
மூத்திரத்தில் மூழ்கிப்போகும்
யூத - அமெரிக்கக்
கள்ள உறவில் தோன்றிய
கர்ப்பக் கழிவு !

அஸாக் கோல்களால் ஆன
சந்தூக்குகள்
அமெரிக்காவில் கிடைக்கலாம் !
ஆனால்...
மூமின் உடல்களை
அடக்கம் செய்ய
ஓரடி மண்கூட
உங்களிடம் இருக்காது !

உங்கள் பாலஸ்தீன
கபர்க்குழி ஒன்றிலிருந்து
கடிதம் ஒன்று
கண்ணிமை உதடு திறக்கிறது !

" பாலஸ்தீன விடுதலை இயக்கப்
பதினாறு வயதுப்
பச்சிளம் பிறை நான் !
போரில் வெடித்து சிதறிய
விரலால்
இரத்தம் தொட்டு எழுதுகிறேன் !

வீரர்களே ...
தாயக மீட்சிக்காக
தீன் நெறி ஆட்சிக்காக
என் கையத்துப் போனாலும்
என் மெய்யத்துப் போனாலும்
நான் மையத்து ஆனாலும்
என் நிய்யத்துப் போகாது !

மூமின்களே ...
ஆமீன்களுக்காக மட்டும்
உயரும் கரங்கள்
புனித
ஆயுதங்களுக்காக உயரட்டும் !

விடுதலை விதைகளே...
நீங்கள் எப்போதாவது
களத்தில்
நிராயுதபாணியாக நின்றால்
ஆயுதம் இல்லையே என
அவதியுற வேண்டாம் !

என் சவக்குழியைத் தோண்டுங்கள்
என் கபாலத்தைக் கேடயமாக்குங்கள்
என் கைகால் எலும்புகளை
ஆயுதமாக்குங்கள்
என் எலும்புகளுக்கு
இரண்டாம் முறையும்
போரிடும் வாய்ப்பு தாருங்கள்
இன விடுதலைக்காக... ! "" நமது முற்றம் "
செப்டம்பர் 2006 இதழில் எழுதிய கவிதை !
Abu Haashima Vaver
*********************************************
Mohamed Ali  shared a link.
இந்த கொடுமையை பாருங்கள்
----------------------------
/ அமெரிக்காவின் தலையீடு இருக்காதாம்
ஹமாஸ் அழிந்த பின்
காஜாவை சரி செய்வார்களாம்
சயூதி ,எகித்து ,இஸ்ரேல் ஒன்று சேர்ந்து செயல் படுவார்களாம் /

@ முகமதலி அண்ணன் போட்ட இந்தப் பதிவைப் பார்த்து கொதித்து போட்ட பதிவு இது !
@ சில ஆலிம்கள் சவூதி அரேபியாவை யஹூதி அரேபியா என்று சொல்வார்கள். இந்தப் பதிவைப் பார்க்கும்போது உண்மைதானோ என்று தோன்றுகிறது !

@ நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது இந்த காட்சி...
யா அல்லாஹ்... கருணை காட்டு !
எங்கள் துஆக்களில் ஒன்றையாவது கபூலாக்கு !

Abu Haashima Vaver
---------------------------------------------------------------------------
 இந்த கொடுமையை பாருங்கள்
 -------------------------------------------------
 Mohamed Ali  shared a link.
According to DEBKA the three-way cooperation has set up the following guidelines for the operation in Gaza:

Israel and the IDF will fight to smash Hamas' military might and downgrade its political influence.
The military operation will come to a close only when all its objectives are achieved.
The three leaders will not permit any outside party, including the US, to interfere in their direction of the war.
The oil-rich Saudi kingdom will cover a portion of the war costs incurred by Israel.
When the war is over, Saudi Arabia and some of the Gulf emirates, led by the UAE and Kuwait, will pay for repairing the damage caused by the fighting in the Gaza Strip.
Saudi Arabia, Egypt and Israel are of the same mind about the absolute necessity to dismantle Hamas' military strength, including its arsenal of rockets and network of assault bunkers.
Once the IDF has destroyed Hamas as a terrorist power, Egypt, Saudi Arabia and the Palestinian Authority will get down to installing a new government and security mechanisms in Gaza City to fill the void left by Hamas' defeat

Source :https://www.middleeastmonitor.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails