Monday, July 14, 2014

வேஷ்டியாக ஹஜ்/உம்ராவில் இஹ்ராமில் அணிந்து தொழுகிறோம். - தென்னிந்திய கலாச்சாரத்தில் கைலி/வேஷ்டி உடுத்துதல் உயர்வானது

சுத்தமான மொத்தமான கைலியை அழகுற இஸ்லாமிய மார்க்க நெறிப்படி அணிந்து தொழுவதுக்காக மஸ்ஜிதுக்கு வந்தால்.. வளைகுடா நாடுகளில் உள்ள பள்ளிவாசல்களில் "ஹாதா மம்னு... மாஃபி குவைஸ்...." என்று அரபிகள் தடுக்கிறார்கள்.

அவர்களிடம் சொல்லுங்கள்...

கைலி கேவலமானது அல்ல.
கைலி மரியாதை குறைவானது அல்ல.
கைலி மார்க்க விரோதமானது அல்ல.
கைலி நைட்டுக்கு மட்டுமான ஆடை அல்ல.
ஒருகாலத்தில் நபி ஸல் மற்றும் சஹாபாக்கள் அணிந்த ஆடைதான்.
அதையே தைக்காமல் வேஷ்டியாக ஹஜ்/உம்ராவில் இஹ்ராமில் அணிந்து தொழுகிறோம்.
கைலி விலை... சில தள்ளுபடி ஜீன்ஸ் பேண்டுகளை விட அதிகம்.
தென்னிந்திய கலாச்சாரத்தில் கைலி/வேஷ்டி அவ்ளோ ஒஸ்த்தி.
எல்லா வற்றையும் விட...
கைலி தான் தொழுவதுக்கு பல மடங்கு வசதியானதும் உடை விஷயத்தில் மார்க்க நெறிமுறையை பேணுவதில் சிறப்பான ஆடையும் கூட.

எப்படின்னா...

ஒழு செய்வதுக்கு முன்னர் அமர்ந்து சுன்னத்தான் முறையில் சிறுநீர் கழிப்பது முதல்.... மறைக்க வேண்டிய தொடைகளின் பரிமாணத்தை சஜ்தாவில் வெளிக்காட்டாத தன்மை உட்பட... கைலி தான் பேண்டை விட தொழுகைக்கான மிகச்சிறந்த ஆடை.

மேலும் கைலி கட்டி பள்ளிக்கு தொழ வருவோரை தடுப்போரிடம் இந்த ஆயத்தை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.

‘அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்த முயல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அச்சமுடையவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்கு அவர்களுக்குத் தகுமானதல்ல. அவர்களுக்கு இம்மையில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.’ (2:114)

போஸ்ட் போட தாக்கம் ஏற்படுத்திய சகோ.
ஆறாம்பண்ணை இப்ராஹிம் க்கு மிக்க நன்றி.

ஃபோட்டோ : (அதிரை எக்ஸ்பிரஸ்) 19-08-2012 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் டேரா-ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகையின் போது... தமிழர்கள். ஈத் பெருநாளைக்கு தேர்வு செய்து அணியும் மிக உயர்ந்த ஆடைதான் கைலி. நம் கலாச்சாரத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.
 Mohamed Ashik
---------------------------------------------------------------------
அல் ஜுபைல், சவூதி அரேபியா.
சற்றுமுன்...

நான் தங்கி இருக்கும் அறைக்கு எதிரேதான் மஸ்ஜித் உள்ளது. பெரும்பாலும் கைலி உடுத்திக்கொண்டுதான் தொழ செல்வேன். நிறைய பேர் (தமிழர்/கேரளர்) கைலி கட்டிக்கொண்டு வருவது வழக்கம்தான்.

சற்றுமுன்னர்... ஃபஜ்ர் தொழுகையில் சில சவூதி சிட்டிசன்கள் பள்ளியின் வாசலில் நின்று கொண்டு... கைலி கட்டிக்கொண்டு வந்தவர்களையெல்லாம் கூப்பிட்டு... "இனி இதை கட்டிக்கொண்டு தொழ வராதீர்கள்... அனுமதிக்கமாட்டோம்..." என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

என்னையும் அழைத்து சொன்னபோது...

"நிறைய பேர் டைட் ஃபிட் ஜீன்ஸ்... ஸ்கின் டைட் ட்ராக் ஷூட்... மற்றும் கையில்லா பனியன் எல்லாம் அணிந்து தொழ வருகிறார்களே... மார்க்கத்தில் அதெல்லாம் சரியா..? அவர்களை அழைத்து ஏதாவது நீங்கள் சொல்லியதுண்டா..?

அப்புறம்... இப்போதெல்லாம் நிறைய பேர் கீழ் இடுப்பில் பாதி பட்டக்ஸில் தான் பேன்ட் அணிந்து வருகிறார்கள்... கூடவே... கட்டை சட்டை... கட்டை டீ ஷர்ட்... நிலைமை என்ன..? அவர்கள்... ருக்கூஹ் மற்றும் சஜ்தாவில் இருக்கும் போது கவனித்ததுண்டா..? இடுப்பின் பின்புறம் நிர்வாணமான நிலையில்... அவர்களை கூப்பிட்டு நீங்கள் ஏதாவது சொல்லியதுண்டா..?

லுங்கி (#கைலி) இது நபி ஸல் அவர்கள் மற்றும் சஹாபாக்கள் அணிந்த ஆடைதானே...? இதுக்கு என்ன இழுக்கு..? இதையே தைக்காமல் சுத்தி கட்டினால்... அதுதானே இஹ்ராம் ஆடை...! இதை அணிந்து மக்காவிலேயே ஹஜ் / உம்ரா செய்து ஜமாத்தில் தொழுகிறோமே...

சரி... சிம்பிளா கேட்கிறேன்... எதனால் இது மம்னுஃ..? எதுக்கு #லுங்கிக்கு_144_தடை போடுகிறீர்கள்..? லுங்கி (கைலி) என்ன... இஸ்லாத்தில் ஹராமா..?

எந்த கேள்விக்கும்...பதில் இல்லை.
ஜஸ்ட்... புன்முறுவல் மட்டுமே.

எனது... ரூம் மேட்...

"எதுக்குங்க பாய்... வந்த இடத்தில் வீணா தகராறு... பாருங்க... என்னை போல... பேன்ட் போட்டு தொழ வாருங்களேன்..."

"ஊரில்... சுன்னத் ஜமாஅத் பள்ளியில்...'தொப்பி போடாமல் தான் தொழுவோம்... அது ஹராமா?' என்று போர்க்கொடி எழுப்பி ரணகள படுத்தி ஊரை திருத்தும் நாம்... இங்கே வந்து வேறு மாதிரி சொன்னால்...?!?!? என்ன பாய் இது..?!?!?!
Mohamed Ashik

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails