Wednesday, July 23, 2014

வசப்படுத்திய வாவுபிள்ளை ராஜா அவர்களின் வரிகள்


மீன்கொத்தி பறவையா………..?
ஒற்றைக்காலில் நிற்கும் நாரையா……….?

‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை’
ஒத்தை காலில் நிற்கும்
நாரையை விட……….

ஓடும் ஆற்றில் லாவகமாக பறந்து
நீந்தும் மீனை கொத்திச்செல்லும்
மீன்கொத்தி பறவை………….

தற்கால வாழ்க்கைக்கு சரியான உதாரணம்!
---------------------------------------
பூமியை மழை
அனுமதியுடனா தொடுகிறது?
சுவாசம் நெஞ்சை
அனுமதியுடனா அடைகிறது?
பழதோட்டதில் பறவைகள்
அனுமதியுடனா செல்கின்றன?
அறிவைத் தேடவும்
அனுமதி தேவை இல்லையே,
மனிதனுக்கு!
-------------------------------------
சொந்த களத்தில்
நெஞ்சை நிமிர்த்தி
சொந்த பந்தங்களோடு
பொருத முனையும்
காளைகள்
அந்நிய தேசத்தில்
பெட்டிப் பாம்பாய்
அடங்கியது
வெளிநாட்டு வேலை.
-------------------
தென்றல் காற்று வீசியது அன்று
வீசும் காற்றில் விஷம் ஏறியது இன்று
சமூக ஒற்றுமை நிலவியது அன்று
நிலவரங்கள் ஒற்றுமையை குலைத்தது இன்று
திண்ணையில் கல்வி கற்றது அன்று
கல்வியும் காசுக்காக விற்கப்படுகிறது இன்று.
------------------------------------
கண்களை அழகாக்கியது
பார்வை
நாவை அழகாக்கியது
பேச்சு
சிந்தனையை அழகாக்கியது
எண்ணம்
என்னை அழகாக்கியது
தாய்யன்பு
வாழ்வை அழகாக்கியது
இறைவணக்கம்.

நன்றி வாவுபிள்ளை ராஜா அவர்களுக்கு  
வாவுபிள்ளை ராஜா (எஸ். எஸ். அப்துல் காதர்)

No comments: