Thursday, February 27, 2014

அன்பு தாங்க வாழ்க்கை அதை எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ!

இன்றைக்கு காலைல ஆபிஸ் போனேன், நான் என்னோட சைக்கிள் நிறுத்துற இடத்துல ஒரு மகனும் அவருடைய தாயாரும் பேசிட்டு இருந்தாங்க! நான் கொஞ்சம் நகருங்கன்னு சொல்லிட்டு என் சைக்கிளை நிறுத்திக்கொண்டிருக்கும் பொது , நான் விரும்பாமலேயே அவர்களின் உரையாடல் என் செவியை தீண்டியது.

அந்த அம்மா சொன்னாங்க, நான் உன் ப்ரண்ட், என் கிட்ட எதையும் மறைக்காதடா தம்பி

அதுக்கு அந்த மகன், இல்லேம்மா பேஸ்புக்ல தான் அந்த பொண்ணு பழக்கம் மூனு மாசம் தான், மூனு முறை தான் பாத்திருக்கேன்னு!

நீ என்னடா இப்படி சொல்ற, அந்த பொண்ணோட அப்பா வந்து மிரட்டுறாங்க, பொண்ணு முழுகாம இருக்காளாமே!

வந்து இல்லம்மா, நான் டேப்ளட் வாங்கித்தரட்டுமான்னு கேட்டேன், அப்பவெல்லாம் இல்ல சரியாயிடுச்சுன்னு தான் சொன்னா,

இதையெல்லாம் விரும்பாமத்தான் கேட்டியான்னு கேட்குறீங்களா?........இல்லைங்க இயல்பாவே என்னால ரொம்ப மெதுவாதான் நடக்க முடியும். அதனால கிசுகிசு ப்பா அவங்க பேசினாலும் அது என் மனசை பிழிய ஆரம்பிடுச்சுடுச்சு, இதுக்கு பேர் காதலான்னு யோசிட்டு நான் நடக்கும் போதே அந்த மகன் ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க! என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!

அந்த பொரம்போக்கை நிஜமாவே அந்த பொண்ணு நேசிச்சிருந்தா பாவம் அவளும் அவ குழந்தையும்! சும்மா பொறுக்கி பண்ணாடையா இருந்தா என்ன கண்ராவி கலாச்சாரம் டா சாமி!

யோசிட்டு போய் ஆபிஸ்ல உட்கார்ந்ததுல கொஞ்ச நேரம் வேலை பார்க்க முடியல,

அப்பதான் கீழ்கண்ட வரிகள் எழுதினேன்! ஒரு நல்ல அம்மாவுக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் தந்தைக்கும் பிறந்த குழந்தை எழுதுவதைப்போன்று (கவிதை வரிகள் கற்பனை தாங்க)


அன்புள்ள அப்பா!
என் நினைவிருக்கா சொல்லப்பா!
நானும் உன் குழந்தை தானே
நெஞ்சில் ஈரமிருக்கா கூறப்பா

ஏக்கமாய் கடந்து வந்த
நாட்களது கூறவா?
என் ஏக்கத்தை புதைத்துக்கொண்டு
வாழ்ந்த கதை கூறவா?

எனை ஏந்த வரவில்லை
உன் உரு கண்ட நினைவில்லை
தோள் ஏந்தி சீராட்ட
உனக்கோ தயவில்லை

தலையெழுத்தை கேட்டபோது
உச்சரிக்கவும் வெறுத்தேன்
தரங்கெட்ட உன் தனத்தை
மன்னிக்க முடிவெடுத்தேன்

தவழ்ந்த நாட்கள் முதல்
தாய் அன்பு கிடைத்ததே
அவள் பட்ட பாடு
கண்ணின் முன்னே
தந்தையாக வந்ததே

அன்போடு அறிவும்
கொடுப்பவனே தந்தையாம்
அவளே உரு கொடுத்தாள்
அன்னையே எந்தையாம்!

அன்பற்ற அப்பா
என் நினைவு வேண்டாம் செல்லப்பா!
மீண்டும் ஒரு பிறவி என்றால்
என் மடி மழலை ஆகுப்பா!

அன்பினால் நெகிழவைத்து
பொறுப்பினில் நடக்க வைத்து
அறிவை நான் புகட்டி
அழகாய் வளர்த்தெடுப்பேன்!

மீண்டு வந்து தந்தையாய்
அன்பின் வழி நடப்பாய்
அன்புள்ள அப்பா நீ
அன்பின் தந்தை ஆகுப்பா!

(அன்பு தாங்க வாழ்க்கை அதை எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ!, இது போல ஒரு சம்பவதை என் காது எப்பவுமே கேட்கக்கூடாது)

GJ தமிழ்செல்வி

GJ Thamilselvi

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பு தான் அனைத்தும் என்று புரிந்து கொண்டால் சரி...

ஆத்மா said...

உண்மைதாங்க :)