Tuesday, October 9, 2012

பல்வகை போர்கள்!யார் இந்த கொடுமையினை செய்தவர் ?

பல்வகை போர்கள்

போரில் பலவகைகள் இருக்கின்றன . இப்பொழுது நடப்பது பொருளாதாரப் போர் . அதைவைத்தே அடுத்த நாட்டின் மீது மறைமுக ஆக்கிரப்பு நடை பெறுகின்றது . தமிழ்நாட்டில் வாழ்வே 'போரா'கிவிட்டது மின்சாரத்தினால்.

போரில் உயர்வானது மனதை அடக்கும் போர் . அனைத்து வகை போரிலும் நன்மை தீமைகள் அடங்கியுள்ளன,

மனதை அடக்கி ஆள்வதிலும் சில தீமைகள் இருப்பினும் அது சில அவசிமாக உள்ளது . சில தேவையற்றதாகவும் இருக்கின்றது . இயற்கை உபாதைகளை அடக்குவதால் பல தீமைகள் வருகின்றன . மிருகம் நினைக்கும்போது சிறுநீர் கழிக்கின்றது.  ஆனால் மனிதன் அதனையும் அடக்கி தொல்லைக்குள்ளாகின்றான்  


அன்புடைமை ,கோபம் ,தாபம் ,மகிழ்வு ,பணிவு,இறக்கம், வீரம்  இன்னபிற குணங்களை பெற்றிருப்பவன் மனிதன். இவைகளை எவ்விதம் எப்பொழுது  உபயோகப்படுத்துவது . அது தானே வருவதா அல்லது தூண்டப்பட்டதனால்  வந்ததா. இவைகள் தேவையா? இது தேவை அற்றவை என்றாலும் அது மனிதனின் மனதில் இருக்கவே செய்யும்.இவைகளின் வேகம்  மனிதனுக்கு மனிதன் மாறுபட்டவையாக இருக்கும். மனிதன் அல்லாத மற்ற இனங்களுக்கும் இவைகள் இருந்தாலும் மற்ற இனங்கள் அவைகளை அடக்குவதில்லை. அதனால் அதற்கு  உணர்வின் காரணமாக வியாதிகளும் அதிகமாக வருவதில்லை.

வீரமுடையோனுக்கு இறக்கம் வந்தால் வீழ்ச்சி . போரிடும்போது அல்லது போட்டியில் ஈடுபடும்போது இறக்கத்திற்கு இடம் கொடுத்தால் தோல்வியைத் தழுவ நேரிடும். போரிடுவது அல்லது போட்டியில் கலந்துக் கொள்வது புகழுக்காகவா,  பணத்திற்காகவா,மக்களின் நலத்திற்காகவா அல்லது இறைவனுக்காகவா !

போரில் உயர்ந்த போர் உணர்ச்சியை கட்டுப்படுத்துவதுதான்.

உள் மனதை வெற்றிக் கொள்வதும் சிறந்த போர்தான்.

ஒரு முறை வீரர் அலி (ரலி) அவர்கள்   ஒரு போரில் ஈடுபடும்போது எதிரிப் படையில் ஈடுபட்ட ஒருவனை    நோக்கித் தன் வாளை ஓங்கினார்கள். அப்போதுதான் அவன் அலி(ரலி) அவர்கள் முகத்தில் காரி உமிழ்ந்தான் !

உடனே அலி (ரலி) அவர்கள் அவனைக் கொல்லும் முயற்சியை விட்டு, ஓங்கிய வாளைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

இந்த செயல் எதிரிக்கு வியப்பளித்தது.  அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'ஏன் என்னை கொள்வதை நிறுத்திவிட்டீர்கள்' எனக் கேட்டார் . அப்பொழுது அலி (ரலி) அவர்கள் "அவரிடம் நான் இதுவரை போரிட்டது இறைவனுக்காக. நீர் எம் முகத்தில்  எச்சில் உமிழ்ந்த பின் எனக்கு மிகவும் கோபமும் ஆத்திரமும் வந்தது .உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு நான் உன்னை கொள்வதால் இறைவனை மறந்த செயலாகிவிடும். அது இறைவனுக்காக ஈடுபட்ட போரின் தன்மையை மாற்றி நான் குற்றம் செய்தவனாகி விடுவேன்" என்றார்கள்

அலி (ரலி) அவர்கள் சொல்லிய வார்த்தைகள் அந்த எதிரிக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தியது .

ஆனால் இப்பொழுது நடக்கும் போரில் வெறித்தனம்தான்  மிகைத்து உள்ளதனை நாம் பார்க்கின்றோம் .

ஈராக்கிலும் ,இலங்கையிலும் போரில் நடந்த கொடுமைகளும் போர் முடிந்தபின்பும் கைதிகளை அவர்கள் கொடுமைப் படுத்தியதும் மிருகத் தனமாக இருந்ததை நாம் அறிவோம்.

நபிகள் நாயகம் போரில் பிடிபட்ட கைதிகளை மிகவும் மேன்மையாக நடத்தினார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் (உயிருடனிருக்கின்றனர்) என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை) என்று கூறினார்கள்.( புகாரி ஹதீஸ் 3004.)

நீங்கள் பார்த்திருக்க முடியாத போர் !

மிகவும் சக்தி வாய்ந்த இந்த புதிய படம் போர்க்காலத்தில் நடக்கும் அநியாயங்களால் நிகழ்ந்த பயங்கர கொடுமைகளை காட்டுகின்றது .இந்த படத்தினை எடுக்க தனது உயிரையும்  பணயம் வைத்து எடுத்த நிருபர்களையும் அதனை உலகம் அறிய வைத்த மீடியாக்களையும்  பாராட்டாமல் இருக்க முடியாது .
உலக சண்டையில் ஹிரோஷிமாவில் அழிவு ,வியட்நாமில் நிகழ்தப்பட்ட ஆக்கிரமிப்பு ,தற்பொழுது நடக்கும் ஆப்கானிஸ்தான் சண்டை, இராக்கின் மீது அநியாயமாக நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு உலக வரலாற்றில் நடந்த மிக கொடுமையான நிகழ்வுகள் .போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் இதற்கு முன் நினைத்துக்கூடப்  பார்த்திருக்க முடியாத அதிரடித் தாக்குதல்களை நடைமுறைப்படுத்தின இந்த போர்களில் உபயோகப்படுத்தப்பட்ட அழிவை உண்டாக்கக்கூடிய எலெக்ட்ரானிக் ஆயதங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை  துணிவுடன் வெளிக்கொணர்ந்த  பத்திரிகை  மற்றும் மீடியாகளின் புகைப்பட கலைஞர்ளின் தன்னலமற்ற நிருபர்களின் உழைப்பு சரித்திரத்தில் முக்கியம் வாய்ந்ததவைகள் .
யார் இந்த கொடுமையினை செய்தவர் ? உண்மையான விரோதி யார்?

No comments: