Tuesday, October 23, 2012

சிந்திக்க வைக்கும் சீனா!


 கி. பி. 7வது நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் சீனாவில் பரவியது. சீனாவின் ஹுய், உய்கூர், தாதார், கர்கஸ், ஹசாக், உஸ்பெக், துங் சியாங், லாசா, பாவ் ஆன் முதலிய சிறுபான்மை தேசிய இனத்தின் 1 கோடியே 80 லட்சம் மக்களிடையே, ஏகப்பெரும்பாலோர் இஸ்லாமிய மதத்தை நம்புகின்றனர். சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்திலும் கான் சு, சிங் ஹாய், யுன் நான் முதலிய மாநிலங்களிலும் சீனாவின் முஸ்லிம்கள் முக்கியமாக குழுமி வாழ்கின்றனர். தற்போது சீனாவில் 30 ஆயிரத்துக்கு அதிகமான மசூதிகள் அமைந்துள்ளன. 40 ஆயிரம் இமாம்கள் உள்ளனர்.

நபிகள் நாயகம் (கி.பி.570 – 632) மறைந்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 651-ல் சீனாவிற்குள் இஸ்லாம் நுழைந்தது, சில மாநிலங்களில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களால் வரவேற்பும் பெற்றது. அந்தக் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கட்டிலில் இஸ்லாமியர்கள் பங்கெடுத்து திறம்பட நிவாகமும் செய்தனர். சில குறுநில மன்னர்களது படைகளுக்கு தலைமை தாங்கி, வெற்றிகளையும் ஈட்டித் தந்தனர். என்றாலும், இஸ்லாமியர்களின் இந்தப் புகழும் கீர்த்தியும் சீனாவின் ஒரு சில மாகாணங்களோடு முடிந்த கதையாகிவிட்டது..  --- ஜே.எம்.சாலி

முஸ்லிம்கள் மற்றும் சீன இடையிலான தொடர்புகள் மிகவும் ஆரம்ப காலத்திலேயே இருந்தன. அரபு வியாபாரிகள் சீனாவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே பட்டு வியாபாரத்தில்  தொடர்பு வைத்துள்ளனர்   .
சீன முஸ்லீம் திருமண மிகவும் அருமையானது  ஜாதகம் படித்தல் போன்ற அனைத்து மூட நம்பிக்கைகளை  தவிர்க்கிறது.  இஸ்லாமிய திருமண சடங்குகள் வாசிக்க சாட்சிகளுடன் திருமணம் நடைபெறும். காதல் திருமணஅடிப்படையாக இருந்தாலும் இஸ்லாமிய வழியில்தான் திருமணம் நடைபெறும்.

சீனாவில் இஸ்லாம்

No comments: