Friday, October 19, 2012

வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

மெதுவாக, மென்மையாக,கனிவாக மற்றும் மென்மையாக பேச வேண்டும்.

 “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்;" - குர்ஆன்  31:19.

நடையில்  தாழ்மை வேண்டும்.
உண்பதில் கவனம் வேண்டும். உண்பதனை மெதுவாக ரசித்து அது இறைவன் கொடுத்த அருளாக நினைத்து உண்ணவேண்டும்

 மூச்சு விடுவதிலும் உள்வாங்குவதிலும் முழுமையாக இழுத்து செயல்பட வேண்டும்

போதுமான தூக்கம் கிடைக்க தேவையான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்

உடை உடுத்துவதில் ஒரு 'மிடுக்கு ' தேவை அத்துடன் அது சுத்தமாக இருக்க வேண்டும்

தொடர்பு கொள்பவர் நமக்கு மன நிம்மதி தருபவராய் இருத்தல் நல்லது

பலரிடம் பழக ஒரு சிலரிடம் நெருக்கம் தேவை     

பயமில்லாமல் செயல்படுவதில் பயம் வருவதை தவிர்க்க வேண்டும்

பொறுமையாக வேலை செய்யும்போது பொறுமையும் கவனமும் தேவை

உண்மை பேசுதல் உயர்வை தரும்

நம்பிக்கை அற்ற வாழ்வு உயர்வு தராது.மாறாக கவலைதான் தரும்

முறையான திட்டம் தேவை

நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் அதனை அறிவோடு செலவிட வேண்டும் அத்துடன் சேமிக்கவும் செய்ய வேண்டும்

தியாகம் செய்வது ஏமாரத்தை தவிர்க்கும்

இறை  வழிபாடு அற்ற வாழ்வு நிம்மதி தராது

பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதில் நாமும் மகிழ்வோடு இருக்கலாம் மற்றும் அதுவே நமக்கு நம் பிள்ளைகளிடமிருந்து நமக்கு கிடைக்கும் 
 “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்). - குர்ஆன்  14:41

அண்டை வீட்டாரை மதித்து அன்போடு பழக வேண்டும்

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு" என்றார்கள். (புகாரி ஹதீஸ் 2259.)

No comments: