அல்லாஹு
அக்பர் என்றால் என்ன?
இதுதான்
இப்போது எல்லோரும் எழுப்பும் கேள்வி. அல்லாஹ் என்ற
அரபி வார்த்தைக்கு GOD என்று அர்த்தம். அவ்வளவுதான்.
மாறாக அல்லாஹ் என்பது பலரும்
நினைப்பது போல் நிச்சயமாக முஸ்லிம்
சாமி அல்ல.
கிறித்துவ அரபிகளும் பரமபிதாவை அல்லாஹ் என்றுதான் அழைக்கிறார்கள்.
முன்னோர்கள் சிலையை வணங்கி வந்த
பேகன் அரபிகளும் அந்த எல்லாம் வல்ல
இறைவனை அல்லாஹ் என்றுதான் அழைத்தனர்.
‘அல்லாஹூ
அக்பர்’ என்றால் இறைவன் மிகப்
பெரியவன். இந்துக்களுக்கும் அல்லாஹ்தான் பரம்பொருள். கிறித்துவர்களுக்கும் அல்லாஹ்தான் பரமபிதா. யூதர்களுக்கும் அல்லாஹ்தான் ஆதிபிதா.
இதில் ‘அல்லாஹூ அக்பர்” என்றால் மிரள்வதற்கு என்ன இருக்கிறது.?
இன்னும்
சொல்லப்போனால் GOD என்று சொல்வதைக் காட்டிலும்
அல்லாஹ் என்று சொல்வதே பொருத்தமானச்
சொல். இஸ்லாமிய மதமும் இந்து மதமும்
ஏனைய மதங்களும் சொல்வது :
அவன், யவன் என்று ஆண்பாலில்
சொன்னாலும்
"அவன்
ஆணுமல்லன்,பெண்ணுமல்லன் அன்றி அலியுமல்லன்"
என்று நம்மாழ்வார் அருளிச்சென்ற திருவாய்மொழி வாசகத்தைத்தான்.
GOD என்றால்
ஆண்பால். GODDESS என்றால் பெண்பால். Also Deity can be God or Goddess. கடவுள் என்று சொன்னாலும்
சரிப்பட்டுவராது ஏனென்றால் ஆண் கடவுளும் உண்டு.
பெண் கடவுளும் உண்டு. தெய்வம் என்று
சொன்னாலும் ஆண் தெய்வம், பெண்
தெய்வம் இரண்டும் உண்டு. இறைவன் என்று
சொன்னாலும் பொருத்தமாக இல்லை. ஏனெனில் அதற்கும்
பெண்பால் “இறைவி" என்ற பெயரில் உண்டாச்சே?
அல்லாஹ்
என்ற வார்த்தைக்கு பெண்பால் கிடையாது. ஆகையால் எந்த மதத்தவராகிலும்
இந்த வார்த்தையை பகர்வதே சாலப் பொருத்தம்.
‘அல்லாஹு அக்பர்’ என்று
ஒரு இந்து சகோதரர் சொன்னாலும்
அவர் முஸ்லிம் சாமியைத்தான் சொல்கிறார் என்று அர்த்தம் கிடையாது.
அந்த பரம பிதா. பரஞ்சோதி,
பகவான், பரம்பொருள் யாவுமே அந்த எல்லாம்
வல்ல ஆதிபகவன் எனும் மகாசக்தியைத்தான்
குறிக்கும்.
ஆஸ்கார்
அவார்ட் வாங்கும்போது ஏ.ஆர்.ரகுமான்
“எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று
சொன்னபோது அனைவரும் ‘அவர் எங்க இறைவனைத்தான்
சொல்கிறார்’ என்று புளகாங்கிதம் அடைந்தார்களே.
அவர் முஸ்லிம் சாமியைத்தான் சொன்னார் என்று யாரும் பிரச்சினை
பண்ணவில்லையே.
இப்போது
‘அல்லாஹு அக்பர்’ – ‘இறைவன் பெரியவன்’ என்றால்
ஏன் சிலருக்கு கோவம்
வருகிறது? அந்த இறைவன் இந்துக்கள்
வணங்கும் பரம்பொருளாக ஏன் இருக்கக்கூடாது.
ஆகையால்
தாராளமாக எல்லோரும் சொல்லலாம் ‘அல்லாஹூ அக்பர்”.
#அப்துல்கையூம்
No comments:
Post a Comment