Wednesday, February 9, 2022

ஆடையுரிமைப் போராட்டத்திற்கு மானசீக ஆதரவாக இப்பதிவு இருக்கட்டுமே ....

 


கீதா மோகன்

இஸ்லாமிய சகோதரிகளின் ஆடையுரிமைப் போராட்டத்திற்கு மானசீக ஆதரவாக இப்பதிவு இருக்கட்டுமே ....

வரிகள்: கீதா மோகன்

குரல்: Kathija Sheikhmohamed


அவள் கூந்தலைக் காட்டச் சொல்லி

சுற்றி நெருங்கும் காவிக் கூட்டம்

அச்சம் பற்றிப் படரவில்லை

கூனிக் குறுகி வெட்கித்து

நாணிக் கோணி நாலாய் மடிந்து

புகலிடம் தேடி ஓடுவாள் - புழுவாய்த் துடிப்பாள் 

என்று எதிர்பார்த்த கூட்டத்திற்கு

எதிர்பாரா பெருத்த அவமானம்

எதிர்த்தாடுகிறாள் எரிஅமிலமாய் - ஒரு கணம் நின்று நிதானித்து

ஏறிட்டு அவள் பார்த்த அலட்சியப் பார்வையில்

ஆயிரம் எரிகணைகள் - 

வீரியம் குறைந்தே போனது

கழுதைப்புலிக் கூட்டத்திற்கு...

ஆண் தோல் போர்த்திய அசிங்கங்களின் அச்சுறுத்தும்

கோஷம் தாண்டி உரத்தொலிக்கிறாள் 'அல்லாஹு அக்பர்'

கூந்தல் காட்டச் சொன்னவர்களே

நீங்கள் எல்லாம் என் அடியுதிர்ந்த கூந்தலுக்குச் சமானம்

என்றரபியில் சொல்கிறாளோ என்றால் அதுதான் இல்லை

'இறைவனே மிகப் பெரியவன்' என்று பொருளாம் - இருக்கட்டுமே

அரக்கர்களின் அச்சுறுத்தலுக்கு நான் பயப்படவில்லை

உன் ஜெய் ஸ்ரீராம் கோஷத்திற்கு

எதிர்க்கோஷம்

நானும் போட்டே தீருவேன்

உன் கடவுள் பேர் சொல்லி

பெண்ணை அச்சுறுத்த உன்னால்

இயலுமென்றால்

என் கடவுள் பேர் சொல்லி

என்னைத் தேற்றிக் கொள்ள என்னாலும்

இயலுமென்றாள்... இப்போட்டியில் இவளே வென்றாள்...

முன் செல்லும் வரை மார்புச் சதை

பின் சென்றால் பிட்டச் சதை

எனும் கண் விபச்சாரம் செய்து

களிக்க இயலவில்லையோ?

அவளாடை தடுக்கிறதோ?

யாரோ தூண்டிய திரியில் புதிதாய் எரிகிறாய் கொதிக்கிறாய்

உன் வீட்டு உலை கொதிக்க வேண்டுமே - ஜெய்க் கோஷமிட்டால்

மெய் கொதிக்கும் -  உலை கொதிக்குமா?

கூட்டமே கலைந்து செல்... அத்தனையும் 'அவர்களின்' கொடுந்திட்டமே புரிந்து கொள்....

அப்பெண்கள் முக்காடிட்டால் நீயும் காவித்துணி தோளிடுவேன் என்கிறாய்

இருக்கட்டும் நியாயம்தான்  - அவ் ஆண்கள் 'முன்தோல்' நீக்கியவர்கள்

அதை மட்டும் வசதியாய் மறந்துவிட்டாயே?

ஏன் வலிக்கிறதா?

- கீதா மோகன்



No comments: